கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, January 15, 2011

மருத்துவர்கள் கிராமங்களுக்கு சென்று ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்யவேண்டும் - துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்


அனைவருக்கும் ஆரோக்கியம் என்பதை நினைவில் வைத்து, மருத்துவர்கள் நகரப் பகுதிகள் மட்டுமல்லாது கிராமங்களுக்கும் சென்று ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா, சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் 08.01.2011 அன்று நடந்தது. விழாவுக்கு ஆளுனர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமை வகித்து மருத்துவ நிபுணர்கள் 22 பேருக்கு வாழ்நாள் சாதனை விருது, 7 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். மேலும், எம்பிபிஎஸ் 544 பேர் உள்பட மொத்தம் 5136 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
1988ல் துவங்கப்பட்ட இந்த மருத்துவப் பல்கலைக்கழகம், மிகச் சிறப்பாக இயங்கி, பல திறமை மிக்க மருத்துவர்களை நாட்டிற்கு உருவாக்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை மிகப்பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, பன்மடங்கு அதிகரித்துள்ளது. பட்டம் பெறுகின்ற நீங்கள், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது, நீங்களும் உங்கள் பெற்றோர்களும், மருத்துவத் தொழிலைப் பற்றி உயர்வாகக் கருதினீர்கள். உங்களுடைய நோக்கம், குறிக்கோள், இந்த சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும். குறிப்பாக சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு, தாழ்ந்து கிடக்கின்ற அடித்தட்டு மக்களுக்கு, சேவை செய்ய வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.
வாழ்வாதாரமும், காலமாற்றங்களும், சூழ்நிலைகளும், மனிதரின் கொள்கைகளை, எண்ணங் களை விழுங்கி விடுகின்றது. எனவே அந்த உறுதி, இன் றைக்கு அவ்வளவு பேரி டமும் அப்படியே இருக்குமா என்றால்? கேள்விக்குறிதான். ஆனால், பலரில் சிலருக்காவது அந்தக் குறிக்கோள் இன்றைக்கும் இருக்கக்கூடும். தயவு செய்து, நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் டாக்டராக இருப்பது உங்களுக்காக அல்ல. உங்கள் படிப்பில் பட்டங்களையும், உயர்வுகளையும், விருதுகளையும் பெற வேண்டும் என்பதற்காகவும் அல்ல. எவ்வளவு அமைப்புகளில் நீங்கள் உறுப்பினர் & தலைவர் என்ற தகுதிகளுக்காகவும் அல்ல. நிச்சயமாக இந்தத் தகுதிகளையெல்லாம் பெற வேண்டுமென்பது நல்ல நோக்கம்தான்.
ஆனால், நினைவில் கொள்ளுங்கள்; நீங்கள் விரும்பியவாறு, சிறந்த டாக்டரை இவைகளால் மட்டுமே உருவாக்கிட முடியாது. சமுதாய சேவை என்ற நோக்கமும், எதைச் செய்தாலும் முழுமனதுடன் ஈடுபாட்டோடு செய்திடும் ஆற்றலும், உங்களுக்குத் தேவை. அரசு, இன்றைக்கு சுகாதார அமைப்பை வலுப்படுத்தி, அறைகூவலாக ஏற்று, பரந்து விரிந்துள்ள தனியார் மருத்துவ நிறுவனங்களையும் இணைத்து ஏழை எளிய மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், மருத்துவத் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொழிலை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட பின்னர், நோயாளிகளுக்கெல்லாம், எல்லா சிகிச்சைகளையும் அளிக்க முன்வந்த பின்னர், நீங்கள் உங்கள் தொழிலில் ஆழ்ந்த தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் தைரியம் நிறைந்தவராக இருக்க வேண்டும். உறுதிமிக்கவராக, பரிவுமிக்கவராக இருந்து; எதைச் செய்தாலும், நீங்கள் மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, நீங்கள் உங்கள் நோயாளியை முழு மனதுடன் கவனிக்க முடியும். அதைத்தான் உங்களிடம் இந்த சமூகம் எதிர்பார்க்கிறது.
மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லு£ரி துவக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு, கடந்த 4 வருடங்களில் விழுப்புரம், திருவாரூர் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லு£ரிகள் துவங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கையுடன் திறம்பட நடைபெற்றுக் கொண்டு வருகிறது. சென்ற வருடம் சிவகங்கை, பெரம்பலு£ர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் மருத்துவக் கல்லு£ரி தொடங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் இந்த ஆண்டு பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில், தலா 100 மாணவர்கள் சேர்க்கையுடன், கல்லூரி துவங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவக் கல்வித்துறையில், தனியார் துறையை ஊக்குவிக்கும் வகையில், தனியார் துறை மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்துவதற்கு இருந்த தடையாணை நீக்கப்பட்டு, தனியார் துறையும் மருத்துவம், மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளை துவக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அரசு, 2006ல் பதவி ஏற்றது முதல், இதுவரை 16 தனியார் மருத்துவக் கல்லூரிகள் துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ராமநாதபுரம், கடலூர் மற்றும் திண்டுக்கல்லிலும் அரசு மருத்துவக் கல்லூரி கள் தொடங்கப்பட உள்ளது.
சுகாதாரத் துறையில், தமிழகம், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உள்ளது என்பதை மிகப் பெருமையுடனும், அளவிலா மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழக அரசில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும், மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையாக பெற்று வருகிறார்கள்.
அரசு மருத்துவக் கல்லூரியானாலும் சரி, தனியார் மருத்துவக் கல்லு£ரியானாலும் சரி, மாணவர்கள் முதலாமாண்டுக்குப் பிறகு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை பல்வேறு வகையில் கேள்விகள் கேட்டு பரிசோதித்து, அவர்களிடமிருந்துதான் மருத்துவம் கற்றுக் கொள்கிறார்கள் என்பது ஒரு நிதர்சனமான உண்மையாகும்.
அதேபோல் நோயாளிகளும் தம்மை எத்தனை மாணவர்கள் சோதித்தாலும், எத்தனை முறை கேள்விகள் கேட்டாலும், தன்னை நிறைய எண்ணிக்கையில் மருத்துவர்கள் சோதிக்கிறார்கள் என்ற நம்பிக்கையில்தான், அவர்களும் ஒத்துழைக்கிறார்கள். அவ்வாறு ஒத்துழைக்கும் அந்த நோயாளிகளுக்கு, மருத்துவர்கள் நன்றி செலுத்திட ஒரே வாய்ப்பு, மருத்துவ பட்டம் பெற்ற பின்பு கிராமப்புறங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், அல்லது தனியார் மருத்துவமனைகளிலும், வரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை செய்வதாகும்.
அரசு மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு நடப்பு 2010&2011ம் நிதி ஆண்டில் ரூ. 3,888.90 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஆண்டிற்கு ஆண்டு மக்கள் நலம் பேணிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு தொடர்ந்து கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பட்டத்தைப் பெற்றுள்ள நீங்கள், உங்கள் பணியைத் தொடங்கும்போது, நகரப் பகுதிகளில் மட்டுமல்லாது, கிராமப்புறங்களுக்கும் சென்று ஏழை எளியோர்க்கும் பணியாற்றுங்கள்.
சுகாதாரத்தில், ஆரோக்கியத்தைப் பேணுவதில் சிகிச்சை அளிப்பதில், நாம் வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ளோம். அதேபோன்று ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு, மக்கள் நல்வாழ்வுத் துறையும், மருத்துவத் துறை நிபுணர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும்; அதற்கான முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும்.
இந்த மருத்துவப் பல்கலைக் கழகத்தின் இலச்சினையில் “அனைவருக்கும் ஆரோக்கியம்Ó என்ற பொன்மொழியைப் பொறித்து இருக்கின்றீர்கள். இதை நினைவிலே கொண்டு பணியாற்றுங்கள்.
இவ்வாறு துணை முதல்வர் பேசினார்.
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் வரவேற்றார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை முதன்மை செயலர் சுப்புராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment