சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 11.01.2011 அன்று விவாதம் நடந்தது. இதில்
மாரிமுத்து (மார்க்சிஸ்ட்) பேசியதாவது:
மதுரை மாநகராட்சியில் 45வது வார்டுக்கான இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்:
அதிகார துஷ்பிரயோகம் நடந்தது என்று தவறான தகவலை உறுப்பினர் பதிவு செய்கிறார். மதுரை மாநகராட்சி 45வது வார்டு இடைத்தேர்தலில் கே.சந்திரசேகரன் (மார்க்சிஸ்ட்), ஏ.கவுண்டர் (சுயேட்சை), முருகேஸ்வரி (திமுக), ப.ராஜேந்திரன் (திமுக மாற்று வேட்பாளர்) வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை உதவி தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார். இதில் மார்க்சிஸ்ட் வேட்பாளரின் மனுவில் கே.சந்திரசேகரன் என்று இருந்தது. ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சந்திரசேகர் என்று இருக்கிறது. வேட்பாளரை முன்மொழிந்தவரின் பெயரும் குறிப்பிடவில்லை. வி.ஏ.ஓ. சான்றிதழையும் இணைக்கவில்லை. இதனால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதிகாரத்தை பயன்படுத்தி அந்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது முழுக்க, முழுக்க தவறானது.
அரசினுடைய சிறப்பு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை பெறப்பட்டு, தகுதியுடைய வேட்பாளராக முருகேஸ்வரி மட்டும் இருந்ததால், இவர் தேர்வு பெற்றதாக அறிவிக்கலாம் என்று சட்ட அறிவுரையும் வழங்கி, 45வது வார்டில் முருகேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
No comments:
Post a Comment