கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 2, 2011

தமிழகத்தில் ஏழைகள் இருக்கும் வரை இலவச திட்டங்கள் தொடரும் - முதல்வர் கருணாநிதி


ஏழைகள் இருக்கும்வரை இலவச திட்டங்கள் தொடரும் என முதல்வர் கருணாநிதி உறுதி அளித்தார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பொருட்கள் மற்றும் வேட்டி சேலைகள் வழங்கும் விழா பல்லாவரத்தில் நேற்று (01.01.2011) நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொங்கல் பை மற்றும் வேட்டி சேலைகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

இந்த திட்டத்தின் மூலம், 217 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலுள்ள 11 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களும், 121 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலுள்ள 40 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்களும் வேலைவாய்ப்பு பெற்றுப் பயனடைந்திருக்கிறார்கள்.
பொங்கல் திருநாளை ‘தமிழர் திருநாள்’ என்று நாம் கொண்டாடுகிறோம். இன உணர்வு தீப்பந்தத்தை ஓங்கிப் பிடித்த மறைமலையடிகளார், திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதி, நமச்சிவாயனார் போன்ற தமிழ் பெரியோர், சான்றோர், ஆன்றோர் ஒன்று கூடி, ‘எல்லா மொழிக்காரர்களுக்கும் ஒரு ஆண்டுக்கணக்கு இருக்கிறது. ஆனால் தமிழர்களாகிய நமக்கு இ ல்லையே’ என்று வருந்தி, தமிழ் ஆண்டு என்பதை கண்டுபிடிக்க 500 புலவர்கள் ஆய்வு நடத்தி எடுத்த முடிவுதான் ‘தமிழனுக்கு ஆண்டுப் பிறப்பு என்று உண்டு, அதுதான் தை திங்கள் முதல் நாள்’ என்று முடிவு அறிவித்தார்கள்.
அனைத்துலகத்திலும் ஆங்கில மொழி ஆதிக்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழக்கத்திற்கு வந்து விட்ட ஆங்கில மொழிக் கணக்கு ஆண்டு முதல் நாள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலுங்கூட, தமிழர்களுக்கான வருடப் பிறப்பு என்பது சித்திரை, வைகாசி என்று தொடங்கினாலும் அந்த வருடங்கள், எந்த வருடங்கள் என்று கணக்கிட முடியாமல் ஒரு குழப்பத்தில் முடிகிற கணக்காகத்தான் இருக்கிறது.
Òநீ எந்த வருடம் பிறந்தாய்?Ó என்று கேட்டால், அவன் தமிழ் வருடப் பிறப்பை எண்ணி, ஒரு வருடத்தின் பெயரை சொன்னால், அந்த வருடத்திலிருந்து இதுவரை எண்ணிப் பார்த்தால் 60 வயதான ஒரு கிழவனுக்கு 17 வயதுதான் ஆகியிருக்கும்.
உதாரணமாக நான் ரக்தாச்சி வருடத்தில் பிறந்ததாக சொல்வார்கள். பஞ்சாங்கத்தில் அப்படித்தான் எழுதியிருக்கிறார்கள். ரக்தாச்சி, குரோதன, அட்சய என்ற இந்த மூன்று ஆண்டுகளை கடந்தால் பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதுத, பிரஜோபத்தி, ஆங்கிரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய என்று நீளும். எண்ணினால் 38 வருடம் வரும். ஆக என் வயது முப்பத்தி எட்டா?
காரணம், நம் வருடக் கணக்கு வடமொழி கணக்கு. பிரபவ என்று ஆரம்பித்து அட்சய என்று முடிகின்ற 60 வருடங்களைத்தான் கணக்கிலே வைத்துக் கொள்கிறோம். இதை சொல்வதால் ஆஸ்தீகவாதிகள், பக்தர்கள், சமஸ்கிருத பண்டிதர்கள் என்னை தவறாக கருதக் கூடாது. 60 வருடங்கள்தான் கணக்கில் வருகிறது. ஒரு 60 வருடம் முடிந்ததும், மறுபடியும் சுழன்று சுழன்று வரும். அக்சய முடிந்ததும், பிரபவ தொடங்கும். பிரபவ தொடங்கி அக்சய வருடத்தில் முடியும். இப்படி பார்த்தால் அக்சய வருடத்தில் ஒருவன் பிறந்திருந்தால், அவனுக்கு 50 வயதானாலும் கூட அவனுடைய வயதை அடுத்த பிரபவ வருடத்திலே பார்த்தால், ஒரு வயது என்று தான் கணக்கிட முடியும். அந்த கணக்கு தமிழர்களுடைய வயதை திட்டவட்டமாக சொல்லக் கூடிய கணக்காக இல்லை.
இந்த காரணத்தினாலேதான் 500 பெரும் புலவர்கள் ஆய்ந்தறிந்து எடுத்த முடிவு தான் தமிழர்களுக்கு தை மாதம் முதல் நாள்தான் புத்தாண்டு பிறப்பு என்பது. அப்படிப்பட்ட பெரிய ஆய்வு நடத்தி அறிவித்து அதனை பெரியாரும், அண்ணாவும் பின்பற்றி, இன்றைக்கு தமிழர் திருநாளை நாம் கொண்டாடுகிறோம். இந்த பொங்கல் திருநாளை நீங்கள் பஞ்சாங்கத்தில் பார்த்தால் ‘மகர சங்கராந்தி’ என்று குறிப்பிட்டிருப்பார்கள். ஜெகத்ரட்சகனை கேட்டால் தெரியும். பஞ்சாங்கம் பார்க்கக் கூடியவர் அவர். ஒரு மஞ்சள் தாள் அட்டை. அதில் ஒரு பாம்பு படம். அந்த பக்கத்தில் ‘மகர சங்கராந்தி’ என்று இருக்கும். படித்துப் பார்த்தால் ‘மகர சங்கராந்தி ஸ்ரீ புருட உருவத்தோடு கைகளிலே வேல் ஏந்தி, சூலம் ஏந்தி எருமை வாகனத்தில் ஏறிக் கொண்டு இந்த ஆண்டு வருகிறாள்’ என்று போட்டிருக்கும்.
ஒரு வருடம் எருமையில் வருவாள், ஒரு வருடம் சிங்கத்திலே வருவாள், ஒரு வருடம் புலி மேலே ஏறி வருவாள், மகர சங்கராந்தி. எப்படி நாம் பியட் கார், மோட்டார் சைக்கிள், சைக்கிள் என்றெல்லாம் வாகனங்களை மாற்றுகிறோமோ, அதை போல அவள் வாகனத்தை மாற்றிக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் வருவாள்.
அப்படி வருகின்ற மகர சங்கராந்தியின் பலன்களை அந்த பஞ்சாங்கத்தில் போட்டிருப்பார்கள். நமக்கு இந்த வம்பு எல்லாம் வேண்டாம் என்பதற்காகத்தான் தை மாதம் முதல் நாள் ஆண்டுக் கணக்கு தொடங்குவதை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். அப்படி ஏற்றுக் கொண்ட நாள்தான் இந்த நாள். அதனால் தான் இதை ‘தமிழர் திருநாள்’ என்று அழைத்து ஏறத்தாழ பகுத்தறிவாளர்கள் அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பட்டு பகுத்தறிவு பற்றி கவலைப்படாதவர்கள் சில பேரால் மட்டும் இன்றைக்கும் மறுக்கப்படலாம்.
ஆங்கிலேயர்களுடைய ஆண்டு முதல் நாளை அவர்கள் கொண்டாடுவது போல, ஆங்காங்கு விளக்குகளை தொங்க விட்டு மின்மினி மின்னுவதை போல எல்லா மரங்களிலும் விளக்குகளை தொங்க விட்டு கடைகளில் எல்லாம் அலங்காரம் செய்து வீட்டிலும் எழில் குலுங்க சிங்காரித்து நாமும் கொண்டாட வேண்டாமா?
ஏழையாக இருந்தால் கூட இரண்டு அகல் விளக்கை ஏற்றி வைக்க முடியும். எனவே அனைவரும் வரும் பொங்கல் திருநாளில் அவர்கள் வீட்டு முகப்புகளில் விளக்குகளையேற்றி வைக்க வேண்டும். வணிக தலங்கள் இருந்தால் அத்தனையிலும் சர விளக்குகளால் ஒளி உமிழச் செய்ய வேண்டும். அதை செய்தால்தான் நாம் தமிழர்கள், தமிழ் கலாச்சாரத்தை போற்றுபவர்கள் என்ற அடையாள சின்னத்திற்கு உரியவர்களாவோம்.
உங்களுக்கெல்லாம் முன்னதாகவே தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து பொங்கல் நாள் வாழ்த்துக்களை தெரிவித்து ‘பொங்கல் வாழ்க, தமிழர் திருநாள் வாழ்க’ என்று தமிழர் இனம் வாழ, திராவிட இனம் செழித்திட உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தமிழகம் முழுவதும் 3 கோடியே 17 லட்சத்து 23 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவசமாக வேட்டி,சேலை கள் வழங்கப்படுகிறது. இது ஒரு சாதாரண காரியம் அல்ல. இது ஒரு ஆழ்ந்த பொருளாதார தத்துவத்தை உள்ளடக்கியிருக்கிறது. நெசவாளர் கண்ணீரை துடைக்கின்றது. ஒரு காலத்திலே நெசவாளர்கள் இல்லங்களிலே தற்கொலைகள் நிகழ்ந்தன. அந்த அளவிற்கு அவர்கள் வாழ்விலே தரித்திரம் தாண்டவமாடியது. அந்த தூக்கத்தை தட்டியெழுப்பி, இன்றைக்கு அவனும் சீமான் ஆகலாம். அவனும் பொருளாதாரத்திலே உயரலாம். அவனும் மற்றவர்களோடு போட்டி போட்டு வாழலாம் என்ற அளவிற்கு ஒரு பொருளாதார வளர்ச்சியை இந்த அரசு உருவாக்கியுள்ளது.

ஒரு ஏழையினால், நாம் கொண்டாடுகின்ற அளவிற்கு பொங்கல் விழாவையோ, தீபாவளி விழாவையோ, ஆயுத பூஜையையோ கொண்டாட முடியவில்லை என்பதை உணர்ந்த காரணத்தால் தான் அனைவருக்கும் பொங்கலை வழங்குவோம் என்று உறுதியெடுத்து இந்த அரசு இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்தக் காரியத்தை செய்து வருகிறது.
இதற்கு பச்சரிசி 500 கிராம், வெல்லம் 500 கிராம், பாசிப் பருப்பு 100 கிராம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் 20 கிராம் ஆகிய பொருள்களை இலவசமாக வழங்குகிறோம்.
இலவசம் என்பது ஒரு கேலிக்குரிய, இழிவான சொல்லாக இன்றைக்கு சொல்லப்பட்டாலுங்கூட இதை சில பத்திரிகைக்காரர்கள், ‘கருணாநிதி ஆட்சியில் எல்லாம் இலவசம், இலவசம், இலவசம்.. இது என்ன பொருளாதாரம்’ என்று கேலி செய்கிறார்கள். அவர்கள் இலவசத்தை கேலி செய்யவில்லை. இந்த இயக்கத்தை கேலி செய்கிறார்கள். கிண்டல் செய்கிறார்கள். ஆனால் இந்த இயக்கம் ஏழைகள் உள்ளவரை அந்த ஏழைகளுக்காக இலவசமாக எதையும் வழங்கும் என்பதை மாத்திரம் நான் சொல்லிக் கொள்கிறேன்.
இந்த அரசு அந்த சாதனைகளிலே ஒன்றாகத்தான் பொங்கல் திருநாளை முன்னிட்டுஇலவச வேட்டி சேலை வழங்குகிறது. 1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டம். அப்போதும் திமுக ஆட்சிதான். இடையிடையே சிலர் இதை நிறுத்தி னாலும், திமுக ஆட்சி அதை மீண்டும் மீண்டும் தொடர்ந்த காரணத்தால்தான், இன்றைக்கு இந்த திட்டம் தொடருகிறது. இந்தத் திட்டம் இனியும் தொடர வேண்டுமேயானால், திமுக ஆட்சி தொடர வேண்டும்.
இந்த ஆண்டு 1 கோடியே 59 லட்சத்து 4 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 58 லட்சத்து 19 ஆயிரம் வேட்டிகளும், ஆக மொத்தம் 3 கோடியே 17 லட்சத்து 23 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு செலவு ரூபாய் 256 கோடி. வேட்டி&சேலை பெறுபவர்கள் மாத்திரம் பயன் அடைவதில்லை. நெய்து கொடுக்கின்ற நெசவாளர்களுக்கும் பயன்படக்கூடிய ஒன்று. ‘நெசவாளர்துயர் துடைக்க, செந்தமிழ் நாட்டு வேட்டி&சேலை வாங்குவீர்’ என்று உடுமலை நாராயணகவி எழுதி, அதை ஊரெல்லாம் பாடி அண்ணாவும் நானும் தோளில் கைத்தறி மூட்டைகளை சுமந்து விற்ற அந்த காலத்தை எண்ணிப் பார்க்கிறேன்.
‘எல்லோர்க்கும் எல்லாமென்றிருப்பதான இடம்நோக்கி நடக்கின்றதிந்த வையம்’ என்ற பாரதிதாசன் பாடலுக்கேற்ப, ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்று இருப்பதான உலகத்தை நோக்கி நடக்கின்ற இந்த வையத்திற்கு உறுதுணையாக இருப்பதுதான் திமுக அரசு என முதல்வர் பேசினார்.

தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றாத திட்டங்களை தேட வேண்டும் - துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் :

சென்னை பல்லாவரத்தில் நடந்த இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் விழா, இலவச வேட்டி சேலை வழங்கும் விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:


இந்த ஆட்சியில் நாள் தோறும் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நான் கடலூரில் அரசு விழா ஒன்றில் பங்கேற்ற போது மாவட்ட ஆட்சி தலைவர் ராஜேந்திர ரத்தோர் வரவேற்று பேசினார். அப்போது அவர், ‘நான் வடநாட்டை சேர்ந்தவன். அங்குள்ள நண்பர்கள் என்னை கடந்த 3 மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு நாள் ஒரு நண்பர் என்னிடம் நான் உங்கள் அலுவலகத்திற்கு போன் செய்யும் போதெல்லாம் கலெக்டர், டி.வி, வழங்க போயிருக்கிறார். கலெக்டர் காஸ் ஸ்டவ் வழங்க போயிருக்கிறார் என்கிறார்கள். நீங்கள் ஏதேனும் வியாபாரம் செய்கிறீர்களா என்று கேட் டார். அதற்கு நான் எந்த வியாபாரமும் செய்யவில் லை. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை வினியோகிக்க நான் அவ்வப்போது செல்வேன், அதனால் தான் என்னுடன் தொடர்பு கொ ள்ள முடியவில்லை என்று கூறினேன்’ என்று குறிப்பிட்டார்.
அந்த அளவுக்கு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் நாள் தோறும் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சியில் என்ன என்ன திட்டம் நிறைவேற்றினோம் என்பதை விட என்ன திட்டம் நிறைவேற்றவில்லை என்பதை தேடித் தான் பார்க்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
விழாவில் சட்டப் பேரவை காங்கிரஸ் துணை தலைவர் யசோதா பேசியதாவது:
தமிழக முதல்வர் நித்தம் நித்தம் ஏதேனும் திட்டம் அறிவித்து அடித்தள மக்கள் வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்டு வருகிறார். எனது ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பல முறை வருகை தந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார்கள். 1980 முதல் எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். இது போல முதல்வர், அமைச்சர்கள் எந்த தொகுதிக்கும் வந்தது கிடையாது. அந்த அளவுக்கு தலைசிறந்த தொண்டராக இருந்து முதல்வர் பணியாற்றுகிறார். வீடும் தந்து காஸ், அடுப்பு, டிவியும் தருகிறார். இந்த ஆட்சியின் பரவலான திட்டங்கள் மக்கள் மத்தியில் நின்று கொண்டு இருக்கின்றன. அதற்காக முதல்வருக்கு நாம் நன்றிக் கடன்பட்டு இருக்கிறோம்.
இவ்வாறு யசோதா பேசினார்.
விழாவில் தலைமை செயலர் மாலதி வரவேற்றார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு முன்னிலை வகித்தனர். அமைச்சர் த.மோ.அன்பரசன் வாழ்த்திப் பேசினார். ஐ.பெரியசாமி பேசும் போது 10, 12ம் தேதிக்குள் இலவச வேட்டி சேலைகள் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு விடும். இந்த ஆட்சியில் 22 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை, 8.5 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார். எ.வ.வேலு பேசும் போது இந்தியாவில் பட்டினி இல்லாத மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்றார்.
உணவுத் துறை செயலர் ஸ்வரன்சிங் நன்றி கூறினார். அப்போது அவர் நான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவன். எந்த மாநிலத்திலும் தமிழ்நாட்டைப் போல ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment