கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

கோரிக்கை வைக்கிறார்கள்; பதிலை பற்றி கவலைப்படுவதில்லை வெளிநடப்பு செய்வதற்காக அவைக்கு வருவதா? -


பேரவையில் 11.01.2011 அன்று கேள்வி நேரம் முடிந்ததும்
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக) கூறியதாவது:
அதிமுக உறுப்பினர்கள் 9 பேர், அவையில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதி என்ற முறையில் ஜனநாயக முறைப்படி கருத்துக்களை பதிவு செய்ய அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதைத்தான் அவர்கள் செய்ய முனைந்தனர். நீங்கள் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அவர்கள் மீண்டும் அவையில் ஜனநாயக கடமையாற்றும் வகையில், நீங்கள் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.):
பேரவையிலிருந்து 9 உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவைக்கு திரும்ப அழைக்க வேண்டும். கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. எடுத்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்து, மீண்டும் அவர்கள் ஜனநாயக கடமையாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே முதல்வர் பரிசீலனை செய்து இந்த இரண்டு நாட்களை தண்டனையாக கருதி, அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
நன்மாறன் (மா.கம்யூ.):
9 உறுப்பினர்களும் மீண்டும் அவைக்குள் வந்து பணியாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இன்று காலையில் நாங்கள் பேரவை தலைவரிடம் முறையிட்டுள்ளோம். எனவே பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும்.
சதன் திருமலைக்குமார் (மதிமுக):
அவையில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் மீண்டும் அவைக்கு வந்து ஜனநாயக கடமையாற்ற ஆவன செய்ய வேண்டும்.
அவை முன்னவர் நிதியமைச்சர் அன்பழகன்:
ஆளுனர் உரையின்போது நடந்த காரியம் ஜனநாயக முறை க்கு மாறானது. ஆளுனர் உரையின்போது, குறுக்கிட உரிமை இல்லை என்று விதி கூறுகிறது. ஆனால், ஆளுனரை அவமதிக்கும் வகையில் நடந்தது ஜனநாயக முறை என்பதை ஏற்க இயலாது. செய்த தவறுக்காக அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீண்டும் அவையில் கலந்து கொள்ள வேண்டுமானால் அலுவல் ஆய்வுக் குழுவை கூட்டி விவாதித்து அவர்கள் தங்கள் நிலையை விளக்கி முடிவு செய்ய வேண்டும். அதுபற்றி இங்கே விவாதிக்க முடியாது.
செங்கோட்டையன் (அதிமுக):
வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் வலியுறுத்தியும் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறியதால் வெளிநடப்பு செய்கிறோம். (அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். உரக்க சத்தமிட்டபடி வெளியேறினர்)
முதல்வர் கருணாநிதி:
இப்போது நடந்து கொண்ட இதே முறையைத்தான் நேற்றும், முன்தினமும் கடைபிடித்தனர். இதே அவையில் பேராசிரியர் உள்ளிட்ட 10 திமுக எம்எல்ஏக்களை ஒருநாள், இரண்டு நாளல்ல, பதவியை பிடுங்கி கொண்டு பதவியில் நீடிக்க தகுதியில்லை என்று கூறி வெளியேற்றினார்கள். அப்போது கூட நாங்கள் அமைதியாக இருந்தோம். இப்படி வெளியே சென்று உட்கார்ந்து கேலி, கிண்டல் போன்ற காரியங்களில் நாங்கள் ஈடுபடவில்லை.
இன்று பதறியடித்து பேசும் தோழமை கட்சிகள் யாரும் இப்படி கடுமை காட்டி எங்களுக்காக பரிந்து பேசவில்லை. அதுதான் விசித்திரம். சிவபுண்ணியம் நேற்று என்னிடம் மறுபரிசீலனை செய்யுங்கள் என்றார். நாங்கள் கலந்து பேசுவதற்கு முன்பாக வழிமறித்துக் கொண்டு நேற்று பகல் 1.30 மணி வரை கிண்டல், கேலி, நையாண்டி செய்தனர். பத்திரிகைகளில் படங்கள் வந்துள்ளன. சோகத்தில் இருப்பவர்கள் போல அல்லாமல் இதை பெரிய காரியத்தை சாதித்ததாக கருதி, மகிழ்ச்சியோடு இருந்தனர். அது நீடிக்கட்டும் என்று எண்ணினோம்.
இன்று ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று முன்வந்திருக்கிறார்கள். அதில் எங்களுக்கு எந்தவித மறுப்பும் இல்லை. ஆனால் கடந்த காலத்தை மறந்து விடக்கூடாது. அதை மறந்து விட்டு இன்று ஏதோ புதிய அணிகள் உருவாகியுள்ளன. அந்த அணியிலே இருக்கிறோம். அதுகூட நிரந்தரம் இல்லை. அந்த அணியோடுதான் இருப்போம் என்பது கூட நிரந்தரம் இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட இன்று கம்யூனிஸ்டுகள் வாதாடுவதும், குரல் கொடுப்பதும், போராடுவதும் வேடிக்கையாக இருக்கிறது.
இப்போது உங்களுக்கு உருகிய உள்ளம் அன்று நாங்கள் வெளியேற்றப்பட்டபோது ஏன் உருகவில்லை. திமுக எதையும் சமாளிக்கும் என்பதால் பேசாமல் விட்டு விட்டார்கள் போலும். இன்று ஏன் இப்படி கடுமையாக மாறியிருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களில் பேரவை தலைவர் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதை பத்திரிகையாளர்கள் அறிவார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு தெரிவது அவையில் நடக்கும் சம்பவங்களும் அமளி, துமளி, ஆட்சிக்கு எதிரான கூச்சல்தான் தெரிகிறது. ஜனநாயகத்தை பற்றி பேரவை தலைவரின் அதிகாரம் பற்றி பத்திரிகைகளுக்கு இன்று தெரியவில்லை. தெரியும் தெரியப்போகும் காலம் விரைவில் வரும்.
நன்மாறன்:
அதிமுக ஆட்சி இருந்தபோதும், பல பிரச்னைகளில் திமுகவுக்காக நாங்கள் எடுத்த நிலைப்பாட்டை முதல்வர் அறிவார். பரிதி போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போதும் வாதாடி இருக்கிறோம். ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சி என்ற முறையில் எங்களது அணுகுமுறை இருந்தது. எனவே அப்போது உருகவில்லை என்று கூற வேண்டாம். நீக்கப்பட்ட 9 பேரும் மீண்டும் உள்ளே வர பரிசீலித்து உத்தரவிட வேண்டும். (தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்)
சிவபுண்ணியம்:
9 பேரும் மீண்டும் அவைக்கு வர நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். முதல்வரின் உணர்வை நாங்கள் அறிகிறோம். வழக்கமாக ஒருநாள் தண்டனை... மறுநாள் பரிசீலனை என்று இருக்கும். முதல்வர் நீண்ட அனுபவம் மிக்கவர். எனவே கோரிக்கை வைக்கிறோம்.
முதல்வர்:
கோரிக்கையை வைத்து விட்டு அதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார்கள் என்பது பற்றி கவலைப்படாமல் வாக் அவுட் செய்து விட்டார்கள். அவர்கள் வாக் அவுட்டில்தான் குறியாக இருக்கிறார்கள். மேலிடத்தின் கட்டளை அப்படி. அதன்படி நடந்து கொண்டிருக்கிறார்கள். வெளிநடப்பு செய்வதற்காகவே அவைக்கு வருவது சரியல்ல.
கருத்துக்களை சொன்னதற்காக எதிர்ப்பா என்று சிவபுண்ணியம் கேட்டார். கருத்து சொன்னதற்காக அல்ல. அவை காவலர்களை தாக்கியதற்காக. அந்த படங்களை பார்த்திருப்பார்கள் அதற்கு பிறகும் அவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை, ரகளை செய்யவில்லை என்று கூற முடியாது.
கவர்னர் உரைக்கு அல்ல கவர்னருக்கே எதிர்ப்பாக, அவர்கள் அட்டகாசங்களை செய்ததை மறுக்க முடியாது. இருந்தாலும் கூட இப்போதும் வெளியே சென்றவர்கள், உள்ளே வர தயாராக இருந்தால் மறப்போம், மன்னிப்போம் என்ற அண்ணாவின் தம்பிகளான நாங்கள் எதையும் மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் தயாராக இருக்கிறோம். (தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்).
பின்னர் அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பேரவைக்கு திரும்பி வந்தனர்.
சிவபுண்ணியம்:
முதல்வர் கூறியதற்கு பிறகு வெளிநடப்பு செய்த எல்லோரும் திரும்ப வந்துள்ளோம். எனவே நீக்கப்பட்டவர்கள் உள்ளே வர அறிவிப்பு செய்ய வேண்டும்.
முதல்வர்:
கடந்த காலங்களில், பேரவையில் இருந்து வெளியேற்றி விட்டு, பிறகு வேண்டுகோள் வைத்தால் முதலில் எடுத்த முடிவை திரும்ப பெற்றுக் கொண்டு அவைக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்கள் என்று சிவபுண்ணியம் கூறியது மிகவும் தவறு, இமாலய தவறு. பதவியை விட்டே உங்களை வெளியேற்றுகிறோம் என்று சொன்னதைக்கூட அவர்கள் திரும்ப பெற்று கொள்ளவில்லை. பதவியை விட்டு போனவர்கள் போனவர்கள்தான். அதற்காக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி வெளியில் பெரிய போராட்டங்களை நடத்தவில்லை. இதேபோல பேரவையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கேட்கவும் இல்லை. இதுதான் வரலாறு. இன்று அவர் வலியுறுத்தும் கோரிக்கைக்கு நான் முன்கூட்டியே பதில் கூறிவிட்டேன். இந்த அரசு நடந்தவைகளை மறந்து விட்டு இனி நடப்பதை நல்லவைகளாக இருக்கட்டும் என்பதற்காக, அவர்கள் மீண்டும் அவைக்கு வந்து ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
துணை முதல்வர்:
முதல்வர் பெருந்தன்மையுடன் பரிந்துரைத்த கருத்துக்கு இணங்க நீக்கப்பட்ட 9 பேரும் வரும் 12ம் தேதி சட்டப் பேரவைக்கு வந்து நடவடிக்கைகளில் பங்கு கொள்ளலாம் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். (பின்னர் அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது)
பேரவை தலைவர் ஆவுடையப்பன்:
தீர்மானம் நிறைவேறியது. 10ம் தேதி வழங்கப்பட்ட தண்டனையை குறைத்து 9 பேரும் 12ம் தேதி முதல் அவைக்கு வரலாம்.

No comments:

Post a Comment