கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, January 18, 2011

திமுக பொதுக்குழு பிப் 3ல் சென்னையில் கூடுகிறது


சட்டப் பேரவை பொதுத் தேர்தல் கூட்டணி மற்றும் தணிக்கை குழு அறிக்கை தாக்கல் குறித்து ஆராய்ந்து முக்கிய முடிவு எடுப்பதற்காக தி.மு.க. பொதுக் குழு கூட்டம் சென்னையில் பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
தமிழக சட்ட பேரவை பொது தேர்தல் இன்னும் 3 மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் நடப்பதை முன்னிட்டு தேர்தல் கூட்டணி, தேர்தல் பணிகள் பற்றி ஆராய்ந்து முக்கிய முடிவு எடுப்பதற்காக திமுக பொதுக்குழு பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் கூடுகிறது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். நிதியமைச்சர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. முன்னணியினர், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சிகள் கொண்ட கூட்டணியில் பாமக மற்றும் புதிய கட்சிகளை சேர்ப்பது பற்றியும் தொகுதி பங்கீடு பற்றியும் தேர்தல் பணி, பிரசார யுக்திகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பொதுக் குழு கூட்டம் குறித்து நிதியமைச்சரும் தி.மு.க. பொதுச் செயலாளருமான அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க. தலைவர் முதல்வர் கருணாநிதி தலைமையில் 03.02.2011 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் தி.மு.க. பொதுக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.
அது போது பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் மற்றும் தணிக்கை குழு அறிக்கை பற்றி விவாதிக்கப்படும்.
இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment