தமிழக அரசு 04.01.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெருமக்கள் ஆகியோரில் சிறந்தோரை தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் அரசு விருதுகள் வழங்கிப் போற்றிடும் சீரிய திட்டம் முதல்வர் கருணாநிதியால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி, 2011ம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது முனைவர் பா.வளன்அரசுக்கு வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதே போல், 2010ம் ஆண்டிற்கு,
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது&கோ.சாமிதுரை,
அண்ணா விருது&து.ரவிக்குமார், எம்.எல்.ஏ,.
அம்பேத்கர் விருது& டி.யசோதா, எம்.எல்.ஏ,
காமராசர் விருது&ஜெயந்தி நடராஜன், எம்.பி.,
பாரதியார் விருது& நா.மம்மது,
தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது&பேராசிரியர் அ.அய்யாசாமி,
பாவேந்தர் பாரதிதாசன் விருது&முனைவர் ரா.இளவரசு,
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது&ரா.மதிவாணன்
ஆகியோருக்கும் வழங்கிட தமிழக அரசு 04.01.2011 அன்று முடிவு செய்து அறிவித்துள்ளது.

விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் பொற்கிழியுடன், தங்கப்பதக்கமும், தமிழக அரசின் சார்பில் அணிவிக்கப்படும். வருகிற 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று நிதி அமைச்சர் அன்பழகன் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ள விழாவில் முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்கிச் சிறப்பிப்பார்.
No comments:
Post a Comment