கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

வானத்தையும், வையத்தையும் வசப்படுத்துவான் தமிழன் நாட்டுப்புறக் கலை வளர்வதற்குக் காரணம் திராவிடர் இயக்கமே! சங்கமம் விழாவில் முதலமைச்சர் கலைஞர் பேச்சு


வானத்தையும், வையத் தையும் தன் அறிவால் வசப்படுத்துவான் தமி ழன் என்று முதலமைச் சர் கலைஞர் கூறினார்.

தமிழ்நாட்டில் ஜாதி ஒழிந்து, கலை வாழ்வு, பகுத்தறிவு வாழ்வு மலர்ந் திட பாடுபட்டு கொண் டிருக்கிறேன் என்று முதலமைச்சர் கலைஞர் கூறினார்.

பொங்கல் விழாவை யொட்டி, சென்னையில் கடந்த 4 ஆண்டுகளாக `சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் மய்ய மும், தமிழ்நாடு சுற்று லாத்துறையும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் 12.01.2011 அன்று நடைபெற்றது. விழாவை முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத்து பேசினார். அப் போது அவர் கூறியதா வது:-

வானம் வசப்படும்'' என்ற தலைப்பில் ஓர் அருமையான நடனக் காட்சியைக் கண்டோம். வாக்குகள் வசப் படுமா?'' என்று அரசி யல்வாதிகள் எல்லாம் எதிர்பார்த்து கொண்டி ருக்கிற நேரத்தில், இங்கே அது வசப்பட்டாலும், வசப்படாவிட்டாலும், நமக்கு வசப்பட வேண் டியது மானம்''. அந்த மானத்தை அடிப்படை யாக வைத்து உருவாக் கப்பட்ட திராவிட இயக்கத்தை காப்பாற்று வது நம்முடைய தலை யாய கடமை என்ற நிலையில், திராவிட இயக்கம் எடுத்துச் சொல்லி வருகின்ற கலை, நாகரிகம், பண் பாடு, பழந்தமிழர் வாழ்க்கை முறை, பன்னெடுங் காலத்து பழந்தமிழர் காலத்தில், பசும்புற் தரையில் பால் வண்ண உடை உடுத்தி காதலுக் கும், கடவுளுக்கும் வேறு பாடு இல்லை.

அது காலத்தால் அழிவதுமில்லை என்று வாழ்ந்த தமிழினத்தை, திராவிட இனத்தை மேலும் ஒளிரூட்டி, உற் சாகப்படுத்தி, உயிர்விக்க வேண்டிய பெரும் கட மையினை ஆற்றி வரு கின்ற நாம்- அந்த கட மையை ஆற்றுவதற்கு துணையாக இன்றைக்கு வகுத்துக் கொண்டி ருக்கின்ற பல்வேறு முறைகளில், வழிகளில் அதற்காக நாம் பயன் படுத்துகின்ற கருவி களில் ஒன்றாக இந்த நடனம் அமைந்திருப்ப தாகவே நான் நம்பு கிறேன்.

வானம் வசப்படும்


கனிமொழி, இந்த நாட்டுப்புற கலையை வளர்க்க வேண்டும். அதனுடைய வலிவை மேலும் உயர்த்த வேண் டும் என்பதற்காக நீண்ட காலமாக பணியாற்றி வரக்கூடியவர். அதற்கு நல்லதோர் வெற்றியைத் தருகின்ற வகையிலே இந்த நிகழ்ச்சி அமைந் திருக்கின்றது. முதலில் இந்த விழாவை தொடங்கி வைக்கத்தான் என்னை அழைத்தார்கள். வந்த பிறகு பார்த்தால், "வானம் வசப்படும்'' என்றார்கள். "வானம் வசப்படும்'' என்றாலே அதற்கு பொருள், அந்த அளவிற்கு மனிதனு டைய அறிவு, வானத்தை விட விரிந்து பரந் திருக்கிறது என்றுதான் அர்த்தம்.

சில நேரங்களில் உல கில் ராக்கெட்டு''கள் வானில் வசப்படாமல் வீழ்ந்துவிட்டால்கூட, வசப்படுகின்ற அளவிற்கு விஞ்ஞானத்தை வளர்க் கின்ற அந்தத் தன்மை, அந்த ஆற்றல் எப்போ தோ ஒருநாள், என்றோ ஒரு நாள் கிடைக் கத்தான் போகிறது, வரத்தான் போகிறது. அப்படி வரும்போது, வானத்தை மாத்திர மல்ல, இந்த வானமும் அடங்கியிருக்கின்ற வையகத்தையே தமிழன் வசப்படுத்தினான் என்ற ஒரு நாள் நிச்சயமாக வரும். ராஜராஜ சோழன் கடலை வசப்படுத்தி னான், ராஜேந்திர சோழன் அதையும் தாண்டி அங்கே சோழ சாம் ராஜ்யத்தினுடைய சின் னத்தைப் பொறித்து வந்தான் என்றெல்லாம் வரலாறு படிக்கிறோம். அந்த வரலாறு மீண்டும் வரவேண்டும், திரும்ப வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம், திராவிட இயக்கம். திராவிட இயக்கம் என்பது ஒரு பெயர் அல்ல. அந்தப் பெயரை வைக்காமல், யாரும் இன்றைக்கு தமிழ்நாட்டிலே கட்சியே தொடங்க முடியாது. திராவிட'' என்று தான் புது கட்சிகளேகூட இன்றைக்கு தொடங் கப்படுகின்றன. ஆனால் திராவிட'' என்ற இயக்கத்தைத் தொடங்கிய போது - இதைக் கேலி செய்தவர்கள், கிண்டல் செய்தவர்கள் என்னுடைய வாழ்க்கையிலேயே நான் அனுபவத் திலே உணர்ந்தவன். விழுப்புரத்தில் சாந்தா அல்லது பழனியப்பன்'' என்ற ஒரு நாடகத்தை இயக்க பிரச்சாரத் திற்காக தந்தை பெரியாரின் தலை மையில், அண்ணாவின் முன்னிலை யில் நாங்கள் நடத்தி- தொடர்ந்து விழுப்புரத்தில் அந்த நாடகத்தை ஒரு மாத காலம் நடத்தினோம். எப்பொ ழுது? சுமார் 50 ஆண்டு காலத்திற்கு முன்பு.

காதில் விழுந்த சொற்கள்

அந்த நாடகத்தில் நடித்த நாங்கள், பகல் நேரங்களில் நாடகம் நடை பெறாத நேரங்களில் குளிப்பதற்கு, உண்பதற்கு கடைத் தெருவிற்கு சென்று வருவோம். அப்படி செல்லும் போது எங்கள் காதுகளிலே விழுந்த வார்த்தை இங்கே சொன்னால் மன் னிக்க வேண்டும், தவறாக கருதிக் கொள்ளக் கூடாது. அப்போது நாடு இருந்த நிலைமை; தமிழகம் இருந்த நிலைமை; சமுதாயம் இருந்த நிலைமை; திராவிட இயக்கம் பரவிடாத காலத்தில் இருந்த நிலைமை - வளராத காலத்தில் இருந்த நிலைமை- பேசிக் கொள்வார்கள் நாகப்பட்டினத்தி லிருந்து (எங்கள் குழுவிற்கு பெயர், நாகை திராவிட நடிகர் கழகம்) முப்பது, நாற்பது பசங்க வந்திருக் காங்க'' ஜாதி பெயரைச் சொல்லி - ஆனால் ஆள்களையெல்லாம் பார்த்தா சிவப்பாகவும், அழகாகவும் இருக்காங்க அவுங்க நாடகம் நடத்துறாங்கப்பா'' என்று பேசிக் கொள்வார்கள்.

அதாவது அந்த நாடகத்திலே நடித்த நடிகர்கள் அத்தனை பேரும் ஆதி திராவிடர்கள் என்று எண்ணிக் கொண்டு அந்தச் சொல்லத் தகாத, சொல்லக் கூடாத கீழான வார்த்தை யைச் சொல்லி இழிவுபடுத்திப் பேசு வார்கள். அது ஒரு காலம். ஏறத்தாழ 50 ஆண்டு காலத்திற்கு முன்பு நடைபெற்றது. ஏ, யப்பா! அவ்வளவு காலத்தை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு சொல்கிறாயே'' என்று யாரும் கருதக் கூடாது. அவ்வளவு காலமாக நான் வாழ்ந்து கொண்டி ருக்கிறேன்.
பெரியார் - அண்ணா வழியில் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுகிறேன்

எத்தனையோ நிகழ்ச்சிகள், எத் தனையோ எதிர்ப்புகள், எத்தனையோ ஏச்சு, பேச்சு, இழிவு இவைகளை யெல்லாம் தாங்கிக்கொண்டு அய்ம்பதாண்டு காலத்திற்கு மேலாக ஏறத்தாழ இன்னும் இரண்டு மூன்று ஆண்டு காலம் வந்தால் 90 என்கின்ற அளவிற்கு 87 ஆண்டு காலமாக தமிழகத்திலே வாழ்ந்து கொண்டிருக் கிறேன். வாழ்ந்து கொண்டிருப்பது மாத்திரமல்ல; தமிழ்நாட்டு மக்களுக்கு ஜாதி ஒழிந்து கலை வாழ்வு, பகுத்தறிவு வாழ்வு இவை மலர்ந்திட வேண்டும் என்பதற்காக பெரியார் வழியில், அண்ணா வழியில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

சென்னை சங்கமம் விழாவில் முதல் அமைச்சர் கலைஞர்

இன்றைக்கு இந்த நாடகத்தை விழுப்புரத்திலோ அல்லது பக்கத்திலே உள்ள திண்டிவனத்திலோ, வேலூ ரிலோ அல்லது காட்பாடியிலோ அங்கெல்லாம் நடத்தினால் இது நாட்டுப்புறக் கலை என்கின்ற அள விற்கு ஒரு நளினமான பெயரைப் பெற்றிருக்கின்றது. நாட்டுப்புறக் கலை என்ற நளினமான பெயரைப் பெற்ற தற்குக் காரணம் திராவிட இயக்கம் என்பதை மறந்துவிடக் கூடாது.

இழிவு துடைத்து, ஏற்றம் உடைத்து இந்த கலை என்பதை நாட்டுக்கு விளக்குகின்ற வகையில், நாட்டுப்புறக் கலையிலே இந்த சங்கமம் இடம் பெற்று சென்னை மாநகரத்திலே வீதிக்கு வீதி, தெருவுக்குத் தெரு எங்கெங்கே பூங்காக்கள் இருக் கிறதோ, அந்த பூங்காக்களில் எல்லாம் காலை எழுந்தால் ஒலி முழக்கம், பேரிகை முழக்கம், தம்பட்ட முழக் கம், பறை முழக்கம் என்ற அளவிற்கு, இந்த முழக்கங்களை நாம் கேட்கின்ற ஒரு வாய்ப்பு நமக்கு ஏற்பட்டிருக் கின்றது. -

இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் கூறினார்.

கவிஞர் கனிமொழி

கவிஞர் கனிமொழி எம்.பி. வரவேற் றுப் பேசுகையில்,

``தமிழும், தமிழர்களின் அடை யாளமும், பண்பாடும் வாழ்வதற்கு சென்னை சங்கமம் விழா நடத்தப் படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களுக் கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சங்கமம் நிகழ்ச்சி வெற்றி பெறக் காரணமாக இருந்த முதலமைச்சர் கலைஞருக்கும் நன்றி'' என்றார்.

அமைச்சர் சுரேஷ்ராஜன்

சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்ராஜன் பேசும்போது,

``சங்கமம் நிகழ்ச்சி சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற இடங்களிலும் நடைபெற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பட்டுப்போன கலைகளுக்கு சங்கமம் நிகழ்ச்சி மூலம் உயிர் கொடுக்கப் பட்டுள்ளது. நாட்டுப்புற கலைஞர் கள் நலனுக்காக வாரியம் அமைத்து பெருமை சேர்ந்துள்ளார் முதல மைச்சர் கலைஞர். அந்த வாரியத்தில் 22 ஆயிரத்து 192 கலைஞர்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.61 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது'' என்று குறிப் பிட்டார்.

கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து பேசும்போது கூறியதாவது:-

அய்ந்து ஆண்டுகளாக எப்போது தைத்திங்கள் பிறக்கும், சங்கமம் விழா எப்போது தொடங்கும் என்று தமிழக மக்கள் ஏங்கத் தொடங்கியிருக் கிறார்கள். அடையாளம் தெரியாமல் கிராமத்தில் கிடந்த கலைஞர்கள் சென்னை சங்கமத்தில் முதலமைச்சர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்த பெருமை கவிஞர் கனிமொழியைச் சேரும். ஒரு சமூகத்திற்கு பொருளா தார சக்கரமும், கலாசார சக்கரமும் தேவை.

பொருளாதார சக்கரத்தை முதல மைச்சர் கலைஞர் பார்த்துக்கொள் கிறார். கலாசார சக்கரத்தை கவிஞர் கனிமொழி பார்த்துக்கொள்கிறார். தமிழுக்கும், தமிழர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்திற்கும் கலைஞரின் ஆட்சி பொற்காலம் ஆகும். இங்கு `வானம் வசப்படும்' நாடகத்தில் பின்புற காட்சி மாறிக்கொண்டே இருந்தது.

ஆனால், அரங்கில் உள்ளவர்கள் மாறவில்லை. இது எதைக் காட்டுகிறது என்றால், காட்சி மாறினாலும், ஆட்சி மாறாது என்பதைத்தான். இந்த நாட்டுப்புற கலைஞர்கள் மேடை யேறாத நாள்களில் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். களையெடுக்கிறார்கள். விவசாயிகளாக இருக்கிறார்கள். கலைஞர்களும் அவர்களே, விவசா யிகளும் அவர்களே.


- இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறினார்.

தமிழ் மய்யம் அறங்காவலர் பாதிரி யார் ஜெகத்கஸ்பார்

தமிழ் மய்யம் அறங்காவலர் பாதிரி யார் ஜெகத்கஸ்பார் பேசும்போது, ``நலிந்த நாட்டுப்புறக் கலைகளை மீட்க வேண்டும் என்று கவிஞர் கனிமொழி சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியை நடத்த கலைஞர் அறக் கட்டளை சார்பில் ரூபாய் ஒரு கோடியைக் கொடுத்து உதவியிருப்பது பாராட்டத்தக்கது'' என்றார்.

No comments:

Post a Comment