கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 23, 2011

அசாம், டெல்லியைத் தொடர்ந்து மதுரையில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மையம் சிப்பெட் சார்பில் அமைக்கப்படும் - மு.க.அழகிரி


சுற்றுச்சூழல் வளத்தைப் பாதுகாக்க அசாம், டெல்லியைத் தொடர்ந்து மதுரையில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மையம் சிப்பெட் சார்பில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசினார்.
சிப்பெட் சார்பில் மதுரையில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்த தேசிய பயிலரங்கம் நேற்று (22.01.2011) நடந்தது. சென்னை சிப்பெட் முதன்மை இயக்குனர் எஸ்.கே.நாயக் வரவேற்றார். பயிலரங்கை துவக்கி வைத்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி பேசியதாவது:
இன்றைய மனித வாழ்க்கையில் பிளாஸ்டிக் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. பிளாஸ்டிக் இல்லாத
வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இந்தியாவில் ஏறத்தாழ 55 ஆயிரம் பிளாஸ்டிக் தொழி ற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 8 மில்லியன் டன் மூலப்பொருட்கள் பிளா ஸ்டிக் பொருட்களாக உருவாக்கப்படுகின்றன. வரும் 2012ல் இது 12 மில்லியன் டன்னாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவரும் சூழலில் கழிவுகளை முறைப்படி கையாளுவதே சுற்றுச்சூழல் பிரச்னைக்கு தீர்வாக அமையும். வளர்ச்சிஅடைந்த நாடுகளில் கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர் வு அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கழிவு மேலாண்மை சரியான முறையில் கையாளப்படவில்லை. பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் எந்த பிரச்னையும் இல்லை என பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, அதன் கழிவுகளை முறையாக கையாளும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேலூர் அருகே இடையபட்டியில் ரூ.24.8 கோடி முதலீட்டில் அதிநவீன அச்சுக்கருவிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மேம்பாட்டு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ஆகஸ்ட் 2010ல் இருந்து மாட்டுத்தாவணியில் பிளாஸ்டிக் கல்விக்கான பயிற்சி வகுப்புகளை சிப்பெட் நடத்தி வருகிறது. இதில் 100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தென்தமிழக இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கணினி சார் வடிவமைத்தல் மற்றும் உற்பத்திக்கான பயிற்சிவகுப்புகள் இங்கு நடத்தப் பட்டு வருகின்றன. மாட்டுத்தாவணி சிட்கோ வளாகத்தில் பிளாஸ்டிக் சோதனை மையம் அமைக்கப் படவுள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் வடகிழக்கு மாநில மக்கள் பயன் பெறும் வகையில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மையம் ஒன்றை சிப்பெட் அமைத்துள்ளது. இதுபோல் டெல்லியிலும் ஒரு மையம் அமைக்கும் பணிநடந்து வருகிறது. அதுபோல, தமிழகத்தில் மதுரையில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மையம் ஒன்றை சிப்பெட் சார்பில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
நிகழ்ச்சிக்கு மத்திய அரசு செயலர் ராமன் தலைமை வகித்தார். அமைச்சர் தமிழரசி, எம்எல்ஏக்கள் மூர்த்தி, கவுஸ்பாட்சா, ராஜேந்திரன், லதாஅதியமான், கலெக்டர் காமராஜ், மேயர் தேன்மொழி, துணைமேயர் மன்னன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார், திமுக மாவட்ட செயலாளர் தளபதி, கிழக்கு மண்டலத் தலைவர் குருசாமி உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பரிசு வழங்கினார். பிளாஸ்டிக் விழிப்புணர்வு நூல்களை வெளியிட்டு கண்காட்சியை திறந்து வைத்தார். சிப்பெட் துணை இயக்குநர் பழனிவேலு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment