கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 30, 2011

வெற்றிகொண்டான் மறைவு: கலைஞர் இரங்கல்


தி.மு.க. கட்சியின் மூத்த பேச்சாளர் வெற்றிகொண்டான் மறைவினால் வருந்தி, திமுக தலைவரும், முதல்வமான கருணாநிதி எழுதிய இரங்கல் கவிதை வருமாறு:


காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்து

கழகக் குரலை கர்ச்சித்துக் கொண்டிருந்த

சிங்கம் ஒன்று தலை சாய்ந்து விட்டது

ஆம்; நமது வெற்றிகொண்டானை

சாவு பற்றிக் கொண்டு விட்டது

தம்பீ வெற்றி,

உன்னைத் தோள் மீது

தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதற்கு

தொகை தொகையாய் தோழர்கள் இருந்தாலும்

அவர்களையெல்லாம் விட்டுப் பிரிந்து

எட்டாத தொலைவுக்கு ஏனய்யா சென்றுவிட்டாய்?

அன்பைப் பிழிந்து கொடுக்க

உன் அண்ணன் நானிருக்க

ஆயிரம் ஆயிரம் என் தம்பிமார்கள்

உன் வருகைக்காக காத்திருக்க

வண்ணமிகு சொல்லடுக்கால்

சுயமரியாதை எண்ணங்களை

தொகுத்தளித்து தோகை மயிலாக ஆடத் தொடங்கி

தொகை தொகையாய் பகை வீழ்த்தும்

போர் வாட்களாக நீயொருவன் மின்னிடுவாயே

சொல்லழகைக் கணையாக பூட்டி

மேடையில் நிமிர்ந்து நிற்கும்

உன் வில்லழகைக் கண்டு

நான் வியந்து போற்றிய

காலமெல்லாம் இனி வீண்தானோ?

வார்த்தை சித்தனே

வான் நடுங்க முழக்கமிடும் ஆண் சிங்கமே

எம் உயிரெல்லாம் நடுநடுங்க

எப்படித்தான் அடங்கிற்றோ உன் உயிர்?

நீ மறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்

நான் நம்பவில்லை

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்

உன் எக்காளக் குரல்

எதிரொலித்துக் கொண்டிருப்பதை கேட்கும்போது

மறைந்துவிட்டாய் நீ என்பது

நம்ப முடியாத வார்த்தைக் கோவை

இருக்கின்றாய் நீ என்றைக்கும் கழகத்தோடு

அண்ணாவோடு

அவர்தம் தம்பியராம் எங்களோடு


இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி கவிதை எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment