
நியாயவிலைக் கடை களில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலையை கிலோவுக்கு ரூ.10 குறைத்து முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.
காய்கறிகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவு பொருள்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக் கள் மிகவும் அவதிப் பட்டு வருகிறார்கள். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உண வுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத் தும் வகையில் முதல மைச்சர் கலைஞர் கடந்த வாரம் உயர் அதிகாரி களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதைத்தொடர்ந்து விலைவாசியைக் கட்டுப் படுத்த 9 அம்ச நட வடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கூடுதல் உழ வர் சந்தைகள் தொடங் குவது, கூட்டுறவு அமைப் புகள் மூலமாக காய்கறி கள் விற்பனை செய்வது, நியாய கடைகளில் துவ ரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் மற் றும் மளிகை பொருள் களை தேவையான அளவு இருப்புவைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்வது, முன்பேர வர்த்தகத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வருவது, விவசாய சாகு படியை அதிகரித்து உற் பத்தியைக் கூட்டுவது என பல்வேறு யோசனை கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், நியா யவிலைக் கடைகளில் துவரம் பருப்பு, உளுந் தம் பருப்பு விலையை கிலோவுக்கு ரூ.10 குறைத்து முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டு உள்ளது.
விலைவாசி தாக்கத் திலிருந்து ஏழை-எளிய பாமர மக்களைக் காத் திட கடந்த 2007ஆம் ஆண்டு மே மாதம் முதல் மானிய விலையில் துவ ரம்பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் ஆகிய வற்றை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங் கப்படும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தை அரசு தொடங்கி செயல் படுத்தி வருகின்றது.
இந்த விலையை மேலும் குறைக்கும் நோக்கத்து டன், நியாயவிலைக் கடை கள் மூலமாக தற்போது விற்கப்படும் துவரம் பருப்பு மற்றும் உளுந் தம் பருப்பு இரண்டும் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 40 என்று விற்கப்படுவ தில் இருந்து கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்று குறைத்தும், பாமாயில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.30 என்பதிலிருந்து ரூ.25 என்று குறைத்தும், பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் விற்பனை செய்ய முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.
- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment