தமிழக அரசு 18.01.2011 அன்று வெளியிட்டுள்ள் அறிக்கை:
தமிழ் மொழி எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள் ஆகியவற்றை கணினி வழிப் பயன்பாட்டுக்காக, யூனிகோட் சேர்த்தியம் என்னும் நிறுவனம் ஒருங்குறி அட்டவணையில் அமைப்பது குறித்து விரிவான விவாதம் தேவை எனவும், அதனை விரிவாக விவாதித்து அரசுக்குப் பரிந்துரை செய்யும் பொருட்டு உயர் நிலைக் குழு அமைக்கலாம் எனவும் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், அனைத்துக் கருத்துக்களையும் ஆய்வு செய்திட, ஓய்வு பெற்ற நீதிபதி ச. மோகன் தலைமையில் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்து, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
1. பேராசிரியர் ம. ராஜேந்திரன், துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
2. முனைவர் வா.செ. குழந்தைசாமி, முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் தலைவர், தமிழ் இணையக் கல்விக் கழகம்.
3. பேராசிரியர் மு. ஆனந்த கிருஷ்ணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர் (அறிவியல் நகரம், சென்னை)
4. பேராசிரியர் பொன். கோதண்ட ராமன் (பொற்கோ)
5. முனைவர் ஐராவதம் மகாதேவன், இ.ஆ.ப., (ஓய்வு)
6. பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
7. பேராசிரியர் கே. நாச்சிமுத்து, உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர் பேரவை
8.பேராசிரியர் அ.அ. மண வாளன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
9. முனைவர் ப.அர. நக்கீரன், இயக்குநர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை
10. முனைவர் மு. பொன்னவைக்கோ, முதன்மைக் கல்வி அதிகாரி, எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்.
11. வைரமுத்து, தமிழ் அறிஞர் மற்றும் கவிஞர்
12. அரவிந்தன், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சிங்கப்பூர்
13. மணி மணிவண்ணன், முதுநிலை இயக்குநர் (கணினி), சீமேன்டெக் கார்ப்பரேஷன், சென்னை.
14. முனைவர் என். தெய்வசுந்தரம், சென்னை.
மேற்காணும் பொருள் தொடர்பாக ஆய்வு செய்து, தமிழக அரசின் நிலையை மத்திய அரசுக்குத் தெரிவிப்பதற்கு ஏதுவாக, இக்குழு தனது அறிக்கையை விரைவில் வழங்கும்.
No comments:
Post a Comment