கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, January 15, 2011

மதங்கள்தான் மக்களைப் பிளவுபடுத்தின - திட்டக்குழு துணை தலைவர் மு. நாகநாதன்


திருச்சியில் 07.01.2011 அன்று காலை நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட் டில் தமிழக அரசின் திட்டக்குழு துணை தலைவர் மு. நாகநாதன் படித்திட்ட உரை வருமாறு:

வீரமணியார்

என்னுடைய அன்பார்ந்த வணக் கத்தையும், நன்றியையும் தமிழர் தலைவர் வீரமணியார் அவர்களுக் கும், உலக நாத்திகர் மாநாட்டு அமைப்பாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார், களப்பணிகள் ஆற்றுவதற்கும், திராவிடர் கழகத்தின் முதன்மையான முடிவுகளை எடுப்பதற்கும் திருச் சியைத் தனது மய்யத்தளமாக அமைத் துக் கொண்டார் என்பது அனைவ ருக்கும் தெரியும். எனவே, நமது தமிழர் தலைவர் பொருத்தமான முறையில் உலக நாத்திகர் மாநாட் டைத் திருச்சியில் நடத்துவது சாலப் பொருத்தமானதாகும்.
இந்நூற்றாண்டில் அறிவு, அறிவி யல், தொழில்நுட்பப் புரட்சியின் பயன்கள் ஒவ்வொரு இல்லத்தையும் சென்றடைந்துள்ளன. மானுடம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி யின் பயன்களைத் துய்த்து வருகிறது. அய்ரோப்பாவில் தோன்றிய மறு மலர்ச்சி இயக்கம் இதற்கு வித்திட் டது. இதற்குப் பின்னர்தான் பிரெஞ் சுப் புரட்சியும், தொழில் புரட்சியும் அய்ரோப்பாவில் நிகழ்ந்தன. சுதந் திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயர் நெறிகளை பிரெஞ்சுப் புரட்சி, உலகிற்குத் தந்து மக்களாட்சி முறையைச் சிறப்புறச் செய்தது. தொழில் புரட்சி மானுடத்திற்குப் பல் வேறு பயன்களை அளித்தது. இருப் பினும், போர்கள், மனிதர்களுக்கு இடையே

மானுட வீழ்ச்சிக்கு மதமே காரணம்

பகையுணர்ச்சி, தொழில்நுட் பத்தை அழிவுக்குப் பயன்படுத்தும் போக்கு ஆகியன தொடர்கின்றன. பல நாடுகளின் அரசுகளின் கவனங் கள் இதற்காகத் திசை திருப்பப்படு கின்றன. கடந்து வந்த பாதைகளை யும், நடக்கின்ற நிகழ்வுகளையும் ஆய்ந்து பார்த்தால், மானுடம் சந்திக் கும் வீழ்ச்சிக்கு மதம்தான் காரணமாக அமைகிறது. பெரும்பான்மையான மதங்கள் மூடநம்பிக்கைகளிலும், கடவுளின் பொய்மைத் தோற்றத் திலும் நிலைத்திருக்கின்றன, மக் களைப் பிளவுபடுத்தி வருகின்றன. நெறிசார்ந்த மத அமைப்பினரோ, மனிதச் சுரண்டல், பெண்களுக்கு இழைக்கப்படும் தீமைகள், ஒடுக் கப்பட்டோர்க்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஆகியவற்றைக் கண் டும் காணாமல் உள்ளனர். அறிவியல் அறிஞர்கள் அறிவியல் உணர்வை முன்னிறுத்திய பிறகுதான் மக்களிடத் தில் கடந்த மூன்று நூற்றாண்டு களாகப் பகுத்தறிவு உணர்வு மேம் பட்டு வருகின்றது. இதற்காக அறிவி யல் அறிஞர்கள் கொடுத்த விலை பெரிது. பல அறிவியல் அறிஞர்கள் அறிவியல் உண்மையைக் கூறியதற் காக, அறிவியல் கண்டுபிடிப்புகளை எடுத்துரைத்தற்காக மத அமைப் புகளால் கொடுமைப்படுத்தப்பட் டார்கள், அவமானப்படுத்தப்பட்டார் கள். இந்தியாவைப் பற்றி அய்வு செய் பவர்கள் ஒரு கருத்தைப் புறந்தள்ள முடியவில்லை.

பண்டைய காலத்திலே நாத்திகக் கருத்துகள்

இந்திய மண்ணில் பண்டைய காலத்திலேயே நாத்திகக் கருத்துகள் நிலைபெற்றிருந்தன. ஆனால், மத, மூடநம்பிக்கைகளும், யாகங்களும் வேத காலத்தில்தான் செல்வாக்கைப் பெற்று இந்த பொருள்முதல் நெறியைச் சமுதாயத்திலிருந்துப் புறந் தள்ளின. தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், மாபெரும் அறிஞருமான எம்.என்.ராய் இந்தியா வில் நாத்திக நெறியையும், பொருள் முதல் நெறியையும் நன்கு ஆய்ந்தவர். இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளில் இந்நெறிகள் எழுச்சி பெற்றதையும், வீழ்ச்சி பெற்றதையும் விளக்கிப் பல கட்டுரைகள், நூல்கள் எழுதியவர். கடவுள் இல்லை. சொர்க்கமில்லை, நரகமில்லை, கடவுள் அவதாரமும் இல்லை. பழமை சார்ந்த எல்லா மத இலக்கியங்களும் இறுமாப்புக் கொண்ட முட்டாள்களின் பணியா கவே உருவாயின. இயற்கை, உலகை உருவாக்குபவர், அழிப்பவர், காலம், நேரம், நன்மை-தீமை , இன்பம்-துன்பம் ஆகியன கடவுளுக்கு அருகி லேயும், கோயில்களுக்கு உள்ளேயும் இருந்த பூசாரிகளின் மயக்க மொழி களில் உருவாயின. உண்மையில் பார்க்கப் போனால் கடவுள் விஷ்ணு வுக்கும், நாய்க்கும் எவ்வித வேறு பாடும் இல்லை, என்ற இவ்விதக் கருத்தை எம்.என்.ராய் குறிப்பிடு கிறார். இதே போன்று பதினான்காம் நூற்றாண்டிலும், இந்தியத் தத்துவ இயலில் நாத்திக நெறிகள் செல் வாக்கைப் பெற்றிருந்தன என்பதை அறிஞர் அமர்தியா சென் குறிப்பிடு கிறார். சான்றாக, இந்தியாவின் மரபு கள் மதத்துடன் நெருங்கியத் தொடர் புடையவை என்று கூறப்பட்டாலும், பலவகையில் அவ்வாறு இருந்தாலும், சமசுகிருதம், பாலி மொழிகளில் நாத்திகக் கருத்துகளும், கடவுள் பற்றிக் கவலை இல்லை என்று கூறப் படுகிற இலக்கியங்களும் கிரேக்க, ரோமானிய, ஹிப்ரூ, அராபி, போன்ற செம்மொழிகளில் இல்லாத அள விற்குச் செறிந்து காணப்படுகின்றன. என்ற அமர்தியா சென்னின் கருத்தைச் சுட்டிக்காட்டி சென்ற திங்களில் நடைபெற்ற ஒரு விழாவில், நான் பெரியாரின் நாத்திகத் தொண்டைக் குறிப்பிட்டு, கீழ்க்கண்டவாறு ஒரு கருத்தினை முன்மொழிந்தேன். திராவிட இயக்கத் தலைவர்களு டைய பேச்சுகளை 1930ஆம் ஆண்டு களிலிருந்துத் தொகுத்தால், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட் சிக்கவிஞர் பாரதிதாசன், கலைஞர், நாவலர், பேராசிரியர், ஆசிரியர் வீர மணியார் ஆகியோரின் படைப்பு களை அறிஞர் அமர்தியா சென் அறிந் திருந்தால் உலகின் மற்ற செம்மொழி களைவிட செம்மொழியான தமிழ் மொழியில்தான் நாத்திகக் கருத்துகள் பெருமளவில் நிறைந்து காணப்படு கின்றன என்று ஏற்றுக்கொண்டிருப் பார் என்று நான் குறிப்பிட்டேன்.
அறநெறிகள் இந்தியத் துணைக் கண்டத்தில் செழித்தோங்கியிருந்த காலமும் உண்டு. இந்தியத் துணைக் கண்டத்தில் அக்பர் காலத்தில்கூட இந்தப் போக்குத் தென்பட்டது. அக்பர் பகுத்தறிவுதான் நம்பிக்கையை விட உயர்ந்தது என்று குறிப்பிட்டார். தீன் இலாஹி என்று குறிக்கப்படுகின்ற சமய நெறிகளின் சங்கமத்திற்காக அக்பர் முயன்றார். இதற்காக 16ஆம் நூற்றாண்டில் இந்து, இசுலாம், கிறித்துவ, பார்சி, சமண மதத்தினரி டம் உரையாடினார். அப்போது, கிறித்து பிறப்பதற்கு 600 ஆண்டு களுக்கு முன்பிருந்து தொடங்கி புகழுடன் செல்வாக்குப் பெற்றிருந்த நாத்திக நெறிகளை வலியுறுத்திய சார்வாக்கர்களிடமும் கருத்துகளைக் கேட்டறிந்தார். இச் சூழலில்தான் பிரிட்டிஷ் அரசு இந்தி யாவில் தனது ஆட்சியதிகாரத்தை நிறுவியது. பிரிட்டிஷ் ஆட்சி இந்திய சமூக, பொருளியல் அமைப்பில் பல மாற்றங்களை உருவாக்கியது. அறிஞர் காரல் மார்க்சு தொலைநோக்குப் பார்வையோடு, இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் உள்ள நீண்ட தொலைவைக் கடப்பதற்கான பயண காலம் கப்பல், தொடர்வண்டி இணைப்பால் 8 நாட்களாகச் சுருங்கு கின்ற நிலை விரைவில் ஏற்படப் போகிறது. வளமிக்க இந்தியத் துணைக்கண்டப் பகுதி மேற்கத்திய நாடுகளுடன் இணையப் போகிறது என்று குறிப்பிட்டார். அவர் கூறிய வாறே, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் கட்டமைப்புத் துறை யின் துணையுடன் இந்தியா பல நன் மைகளைப் பெற்றது. இருப்பினும், சாதியத்தால் சமூக ஒடுக்கு முறையும் தொடர்ந்து கொண்டே இருந்தது. பல சமூகச் சீர்த்திருத்தப் புரட்சி யாளர்கள் இதனை எதிர்க்க முற்பட் டனர். பிரிட்டிஷ் ஆட்சியின் துணை கொண்டு சில சீர்த்திருத்தச் சட்டங் களையும், திட்டங்களையும் முன் மொழியப் பாடுபட்டனர். மத அடிப் படை உணர்வும், மூடநம்பிக்கையும் மக்களுடைய மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததனால் சமூகத் துறையில் அடிப்படையான மாற்றங்கள் நிகழவில்லை. அறிவியலைக் கற்ற உயர்சாதி மக்கள் சமூக மாற்றத்திற் கான முயற்சிகளை மேற்கொள்ள வில்லை. அறிவியல் தொழில்நுட்பங் களுடைய பயன்களைப் பெற்ற இப்புதிய படித்த வர்க்கம், அறிவியல் உணர்வுகளுக்கு எதிராக பழமையே தொடர ஆதரவினை நல்கியது. இந்தப் போக்கினுடைய தொடர்ச் சியை இன்றும் நம்மால் காண முடிகிறது. அமெரிக்காவில் இயங்கிய வரும் மதச்சார்பின்மை, பண்பாட்டு மையம், இந்தியாவில் உள்ள அறிஞர் களிடம் 2008இல் ஒரு ஆய்வை மேற் கொண்டது. 130 பல்கலைக் கழகங் களிலும், உயர் ஆய்வு மய்யங்களிலும் பணிபுரியும் 1100 சமூக, அறிவியல் அறிஞர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தது. இந்த அறிஞர்களி டையே 12 விழுக்காட்டினரே தாங் கள் நாத்திகர்கள் என்று அறிவித்தனர். 26 விழுக்காட்டினர் மரணத்திற்குப் பின்னும் வாழ்க்கை இருக்கிறது என்ற இந்து கர்ம தத்துவத்தை நம்பு கின்றனர். அறிவியலை மெத்தப் பயின்ற இப்பிரிவினரில் 7 விழுக் காட்டினர் பேய், பூதங்களைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். 6 விழுக் காட்டினர் ஜாதியத்தை ஏற்றுக் கொள்கின்றனர். - இவ்வாறு குறிப்பிடு கிற இந்த ஆய்வறிக்கை. மேலும் ஒரு உண்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஏவுகணை களையும், செயற்கைக் கோள்களை யும் வடிவமைத்துச் செலுத்துகிற அறிவியல் அறிஞர்களிடம் இவற்றை விண்ணில் செலுத்துவதற்கு முன்பு திருப்பதி கோயிலுக்குச் சென்று கடவுளிடம் வேண்டிக் கொள்வது சரியா என்ற வினா எழுப்பப்பட்டது. அதற்கு 14 விழுக்காட்டினர் மிகச் சரி என்று வாதிட்டனர். 27 விழுக்காட் டினர் சரியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டனர். 33 விழுக்காட்டினர் தான் கடவுகளை வேண்டிக்கொள் வது முறையற்ற செயல் என்று குறிப்பிட்டுள்ளனர்.

பெரியார் வழியில் வீரமணியார்

அறிவியல் அறிஞர்களிடம் கூட இவ் வித பழைமை தோய்ந்த கண்மூடித்தன மானக் கருத்துகள் நிலைபெற்றிருப்பதை மேற்கூறிய ஆய்வுத் தரவுகள் சுட்டுகின் றன. இவ்வித மூடநம்பிக்கைகளை எதிர்ப்பதற்காகத் தான் பெரியார் 1930ஆம் ஆண்டிலிருந்து பகுத்தறிவு அடிப்படை யில் பெரும் பயணத்தை மேற்கொண் டார்.

எல்லாவித மூடநம்பிக்கைக் கருத் துகளையும், மடமையைச் சுட்டுகின்ற கருத்து களையும் எதிர்த்துப் போராடி திராவிட இயக்கம் என்னும் மாபெரும் இயக்கத்தை உருவாக்கிக் கட்டிக்காத்து தமிழர்களுக்குச் சொத்தாக அளித்துச் சென்றுள்ளார். பெரியாரின் வழியைப் பின்பற்றி நமது ஆசிரியர் வீரமணியார் அவர்களும் அறிவியல் உணர்வினையும், பகுத்தறிவு நெறிகளையும் இளைஞர் களிடமும், மக்களிடமும் எடுத்துச் செல்வதற்காக நாட்டின் மூலை முடுக்கு களுக்கு எல்லாம் சென்று பரப்புரை செய்கின்றார். கிடைக்கின்ற ஒவ்வொரு அரிய வாய்ப்பினையும் பயன்படுத்திச் சமூக மேம்பாடு, மானுட நேயம், நாத்திக நெறிகள் பரவுவதற்கு நீண்ட பயணம் மேற்கொள்கிறார்.

பெரியாரின் தொலைநோக்கு சமூக சீர்த்திருத்தக் கருத்துகள், சட்டங்களாக வும், திட்டங்களாகவும் பெரியாரின் வழித்தோன்றல்களான பேரறிஞர் அண்ணாவாலும், தமிழக முதல்வர் கலைஞராலும் நிறைவேற்றப்பட்டன, நிறைவேற்றபட்டு வருகின்றன.

சுயமரி யாதைத் திருமணச் சட்டம், அனைத்து ஜாதினயினரும் அர்ச்சகராகும் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, உள் ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கீடு, சிறுபான் மையினரான இசுலாமியர்க்குச் சிறப்பு இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டவர்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்ற அருந்ததியினர்க்குத் தனி இடஒதுக்கீடு ஆகிய முற்போக்கான சட்டங்களும் திட் டங்களும் தமிழகத்தில் நிறைவேற்றப் பட்டு வருகின்றன.

ஜாதி, மதம் கடந்து தமிழர்கள் அனை வரும் ஒரே குடி யிருப்பில் எல்லா வசதிகளுடன் வாழ்வ தற்கான பெரியார் சமத்துவபுரங்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களி லும் உருவாக்கப்பட்டு வருகின்றன. பெரியாரின் சீர்த்திருத்தக் கருத்துகளை உயர்த்திப் பிடிக்கும் இந்த சமத்துவ புரங்கள் இன்றைய பொருளாதார இயலில் சுட்டப்படுகின்ற சமூக மூல தனத்தின் சின்னமாகவே செயல்படுகின் றன.

மேலும் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் தான் 11ஆவது அய்ந் தாண்டுத் திட்டத்தின் மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.85,344 கோடியில் 43 விழுக்காடு சமூக நலத்திட்டங்களுக்காக வும், சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக் காகவும் செலவிடப்படுகின்றது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(ஏச்) பிரிவு, சீர்த்திருத்தம், ஆய்வு, மானுடம் போற்றும் நெறிகள், அறிவியல் உணர்வு களை மேம்படுத் துதல் ஆகியவற்றை அடிப்படைக் கடமையாக இந்தியக் குடிமக்கள் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்து கிறது. இயைந்த வளர்ச்சியை எட்டுவதற்கு மதச் சார்பற்றக் கருத்து களும், மக்களாட்சிக் கருத்துகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

நாத் திகக் கருத்துகளை ஆய்வு செய்வதன் வழியாக இந்திய அரசமைப்புச் சட்டத் தின் அடிப்படைக் கடமைகளை நிறை வேற்றுவதற்குத்தான் இம்மாநாடு நடை பெறுகிறது. உண்மைக்கும், பகுத்தறிவுக் கும் எதிராகச் செயல்பட்டு மத மூடநம் பிக்கைகளை மீண்டும் கொண்டு வருவ தற்கு, இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் மற்ற பகுதிகளிலும் முயற்சி செய்யும் தீய பிரிவினரை முறியடிப்பது நாத்திகர்களின் பெரும் கடமையாகும். இளைஞர்களி டமும், மக்களிடமும் நாத்திக நெறியை நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

சிரியா அறிஞர் அபுல்-அலா 10ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டில் வாழ்ந்த அறிஞர் அபுல்-அலா அல்மாரி, உலகில் இருவகை மனிதர்கள் உள்ளனர். ஒரு வகையினர் மதந்துறந்த அறிஞர்கள், மற்ற பிரிவினர் அறிவு துறந்த மதவாதி கள் என்று அழகுறக் குறிப்பிட்டார். அவரு டைய கருத்து கடந்த கால நிகழ்வுகள் வழியாக மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. யூத இனத்தைச் சார்ந்த யூத மதவாதி ஆர்தர் எட்பர்க், - யூதர்கள் கையிலே துப் பாக்கி ஏந்தி, காசா பகுதியின் மேற்கில் உள்ளவர் களுக்கு (இசுலாமியர்) எதிராக ஒரு போரை நிகழ்த்த வேண்டும் என்று யூத அடிப்படைவாதம் எடுத்துரைக்கிறது. எனவே, அரசர்களுடைய ஆணைகளை எதிர்த்துச் செயல்படுங்கள்.

பல புனிதப் போர்களைப் போன்று இதுவும் ஒரு புனிதப் போராகும் என்று குறிப்பிடுகிறார். ஜோர்டான் நாட்டின் முன்னாள் மன்னர் உசேன் மத அடிப்படைவாதம் இசுலா மியர் உலகத்திற்கு மட்டும் உரித்தானது அல்ல. உலகில் பல பகுதிகளில் மத தீவிர வாதம் உள்ளது என்று குறிப்பிட்டார். மதத்தின் பெயரால் புனிதப் போர் என்ற போர்வையில் மக்களைத் தாக்குகிறார்கள், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் நாள்தோறும் பலியாக்கப்படு கிறார்கள்.

மக்கள் தொகையில் நாத்திகர்கள் எண் ணிக்கையில் அதிகம் வாழும் நாடுகளில் அமைதி நிலவுகிறது. சமூகமும், பொரு ளாதாரமும் மேம்பாடு அடைகிறது. 2005ஆம் ஆண்டு உலகளவில் நடத்தப் பட்ட ஆய்வில் 50 நாடுகளில் 7 விழுக்காடு முதல் 85 விழுக்காடு வரை நாத்திகர்கள் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுவீடன், வியட்நாம், டென்மார்க், நார்வே, ஜப்பான், செக் குடியரசு, பின்லாந்து, பிரான்சு, தென் கொரியா, எஸ்டோனியா ஆகிய 10 நாடுகளில் வியட்நாம் தவிர மற்ற நாடுகள், அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மனித மேம்பாட்டு குறியீடுகளின் அடிப்படையில் பொருளா தாரமும், சமூகமும் இணைந்து உயர் நிலையை எட்டியிருக்கின்றன. இந்த நாடுகளில்தான் மேற்குறிப்பிட்ட நாத்தி கர்களின் எண்ணிக்கை பெருமளவில் உள்ளது.

2010ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட மனித மேம்பாட்டு அறிக்கையில் பெருமளவில் முன்னேறிய நாடுகள், இடைப்பட்ட பகுதியில் உள்ள நாடுகள், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகள் என்று மனித மேம்பாட்டின் அளவைக் குறிப்பிட்டுள்ளனர். மேற்குறிப் பிட்ட 10 நாடுகளில் வியட்நாமைத் தவிர 9 நாடுகள் பெருமளவில் முன்னேறிய நாடு களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. வியட்நாமில் தொடர்ந்து பல ஆண்டுகள் போர் நடைபெற்ற காரணத்தினால் பல பின்னடைவுகள் ஏற்பட்டன.

இருப் பினும், வியட்நாமினுடைய இடம் இப் பட்டியலில் இந்தியாவிற்கு மேலாக 113ஆம் இடத்தில் உள்ளது. இந்தியா 119ஆம் இடத்தில் பின்தங்கியுள் ளது. இந்தியா 177 நாடுகளில் கடந்த ஆண்டு களில் 134ஆம் இடத்தில் இருந்தது என்ப தும் குறிப்படத் தக்கது. தற்போது 20 நாடுகள் புள்ளிவிவரங்களை அளிக்காத காரணத்தினால் எண்ணிக்கையில் மட்டும்தான் முன்னேற்றத்தை அடைந் துள்ளது என்பதைப் புள்ளி விவரங்கள் பறைசாற்றுகின்றன. எனவே, இந்த மாநாட்டில் மக்களுக்கு அறிவியல் உணர்வைப் பகுத்தறிவு உணர் வைத் தூண்டுகிற அறிவியல் கண்காட் சியைத் திறந்து வைப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைகிறேன். சரியான முறை யில் நாத்திகம் - மாற்றுப் பண்பாட்டிற் கான வழி என்ற தலைப்பில் கருத்து உரையாடல்கள் நடைபெறுவது கண்டு பெருமிதம் கொள்கிறேன்.

மானுடம் தழைப்பதற்கும், நாத்திகம் பரவுவதற்கும் அறிவியல் தெளிவு இன்றைய கால கட்டத்தில் இன்றியமையாததாகிறது. இது போன்ற அறிவியல் கண்காட்சிகள் குழந்தைகள், மாணவர்கள், பொது மக்கள் ஆகியோரிடத்தில் அறிவியல் உணர்வை ஊட்டுவதற்கும், பகுத்தறிவு நெறியைப் பரப்புவ தற்கும் பயன்படும் என்ற கருத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்நாடு அரசு இது போன்ற பல கண்காட்சிகளைக் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நடத்துவதற்கு ஆண்டுதோறும் நிதியுதவி நல்கி ஊக்க மளித்து வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த அரிய நிகழ்வில், தமிழகம் சிறப் புறுவதற்கு என்றும் அழியாத பகுத்தறிவு உணர்வை வழங்கியதற்கும், பரப்பிய தற்கும் தந்தை பெரியார் அவர் களுக்கு நன்றியையும், வணக்கத்தையும் பதிவு செய்கிறேன். பகுத்தறிவு நெறி தழைப்ப தற்குப் பாடுபட்ட, பாடுபட்டு வரும் சிறந்த அறிவியல் அறிஞர்கள், ஆய்வாளர் கள், மெய்யியல் அறிஞர்கள், சமூக சீர்த்திருத்தவாதிகள் ஆகியோர்க்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித நாகரிக வரலாற்றில் அவர்கள்தான் உண்மையான போர் வீரர்கள். மனித நேயம் மதத்தைப் புறக் கணிக்கிறது. நம்மை மீறிய சக்தி என்று எதுவும் உலகில் இல்லை. விழிப் புணர்ச்சி பெற்ற சுதந்திரம் நம்மை மூடத்தனத் தில் மூழ்கியிருக்கின்ற அடிமைத்தனத்திலி ருந்தும், மூடநம்பிக்கைகளில் இருந்தும் விடுதலை செய்கிறது. அப்பொழுதுதான் நாம் நமது முழு ஆற்றலை உணர்கிறோம் என்று உலகில் வானியல்-இயற்பியல் பேரறிஞர் ஸ்டிபன் ஹாகிங் குறிப்பிடு கிறார்.

அவரு டைய அறிவியல் எண்ண வெளிப்பாட்டையே எனது உரையின் இறுதிக் கருத்தாகப் பதிவு செய்கிறேன்.


இவ்வாறு உரையாற்றினார்.

No comments:

Post a Comment