கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, January 22, 2011

விருதுநகர் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம்: கலைஞர்


விருதுநகர் வெடிவிபத்தில் மரணமடைந்த எட்டு பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், கன்னிசேரி புதூர் கிராம உட்கடை தியாகராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ராஜூ கண்ணா பயர் ஒர்க்ஸ் என்ற வெடிபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 21.1.2011 அன்று காலை 10.30 மணியளவில் மருந்து கலவை அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி எட்டு நபர்கள் உயிரிழந்ததாகவும், 12 நபர்கள் காயமடைந்து, மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் அறிந்து மிக்க துயருற்ற முதல்வர் கருணாநிதி, இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நிவாரணத் தொகையாக வழங்கிடவும், காயம் அடைந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கிடவும் இன்று (22.1.2011) ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment