கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, January 18, 2011

தமிழக மேலவை தேர்தல் வாக்காளர் பட்டியல் : சுப்ரீம்கோர்ட் தடை விதிக்க மறுப்பு


தமிழக சட்டமேலவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. எனினும், இது தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்புக்கு மேலவை தேர்தல் நடவடிக்கைகள் கட்டுப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மேல்சபை தேர்தல் நடத்துவதற்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அறிவிப்பாணை வெளியிட்டார். அதன்படி, தொகுதி எல்லை வரையறை பணிகள் முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே, ஜனாதிபதி அறிவிப்பாணையை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியும், எம்.பாரதியார் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், ‘மேலவை தொகுதி எல்லை வரையறைக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாமல், ஜனாதிபதி பிறப்பித்த அறிவிப்பாணை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு முரணாக உள்ளது’ என்று மனுவில் கூறப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘தமிழ்நாடு மேலவை சட்டப்பிரிவு 3(3)ன்படிதான் ஜனாதிபதி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். இதில் தலையிட முடியாது’ என்று தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ மற்றும் பாரதியார் மேல்முறையீடு செய்தனர். இந்த அப்பீல் வழக்கு, நீதிபதிகள் ஜே.எம்.பாஞ்சால், எச்.எல்.கோகலே அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நேற்று (17.01.2011) விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே ஆஜராகி, ‘தமிழக மேல்சபை தேர்தல்
தொகுதி எல்லை வரையறை தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாகும். நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் அது செல்லாது’ என்று வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதிகள், மேலவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. எனினும் மத்திய அரசு, தமிழக அரசு, தலைமை தேர்தல் ஆணையம் பதில் அளிக்கக் கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.மேலும், “மேல்சபை தொகுதி எல்லை வரையறை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’ என்றனர்.
இதன்படி, மேலவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment