தமிழகத்தில் தொழில் தொடங்கும் ஜப்பான் கம்பெனிகளுக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தென்னிந்தியாவில், ஜப்பான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில் துறை தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நேற்று (22.01.2011) நடந்தது.
இந்த கருத்தரங்கில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜப்பான் நாட்டின் சர்வதேச விவகாரம், பொருளாதாரம், வர்த்தகம், தொழில் துறையின் துணை அமைச்சர் ஹிடிசி ஒக்கடா ஆகியோர் முன்னிலையில் ‘ஜப்பான் நாட்டுக்கும் தமிழக அரசுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் தொழில்துறை தொடர்பான ஒப்பந்தமும்’ கையெழுத்தானது. இதில், தமிழக அரசின் தொழில் துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் ஜப்பான் அரசின் பொருளாதார வர்த்தக, தொழில்துறையின் நிதி கூட்டுறவு பிரிவின் இயக்குனர் டெரமுரா ஆகியோர் கையெழுத்திட்டனர். கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு நீண்டகால வரலாறு தொடர்புடைய ஒன்றாகும். இரு நாடுகளுக்கான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நட்புறவு ஒப்பந்தம் மூலம், எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்தில் இரு நாடுகளும் முன்னிலையில் இருக்கும்.
இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு நீண்டகால வரலாறு தொடர்புடைய ஒன்றாகும். இரு நாடுகளுக்கான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நட்புறவு ஒப்பந்தம் மூலம், எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்தில் இரு நாடுகளும் முன்னிலையில் இருக்கும்.
இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்ய தமிழகம் சிறந்த இடமாக விளங்குகிறது. இந்தியாவில் 750 ஜப்பான் கம்பெனிகள் உள்ளது. இதில் 240 கம்பெனிகள் தமிழகத்தில் உள்ளது. இதில் நிசான், தோஷிபா, ஷிட்டாசி போன்ற கம்பெனிகள் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், ஜப்பான் வெளி வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ) தனது அலுவலகத்தை சென்னையில் அமைத்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மேலும் ஜப்பான் முதலீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஜப்பான் உதவி வருகிறது. இதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீபத்தில், தனியார் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில், ‘இந்தியாவில் பொருளாதார மேம்பாட்டுக்கான இலகுவான சுதந்திர சூழல்கள் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதல் இடத் தை பிடித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புகளை வழங்கிட தமிழக அரசு உறுதி செய்துள்ளது. இங்கு பெருமளவில் தொழில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, ஜப்பான் கம்பெனிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன்.
இந்த ஒப்பந்தம் மூலம் தமிழகம் மேலும் ஜப்பான் முதலீடுகளை பெறும். இங்கு முதலீடு செய்து தொழில் தொடங்க வரும் ஜப்பான் கம்பெனிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
இவ்வாறு துணை முதல்வர் பேசினார்.
No comments:
Post a Comment