தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள் 217 பேருக்கு தமிழக அரசு ஓய்வூதியம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு 08.01.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழறிஞர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது குறித்த உயர்கல்வித் துறை அமைச்சர் தலைமையிலான உயர்நிலைக் குழு கூட்டம் 6.7.2010 அன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை ஏற்று, எல்லைக் காவலர்கள் 12 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ.15 மருத்துவப்படி, எல்லைக் காவலர்களின் மரபுரிமையாளர் 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.15 மருத்துவப்படியும், 55 தமிழறிஞர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் மற்றும் ரு.15 மருத்துவப்படி, தமிழறிஞர்களின் மரபுரிமையர்கள் 142 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1,500 மற்றும் ரூ.15 மருத்துவப்படி வீதம் 1.7.2010 முதல் மாதந்தோறும் வழங்கிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் காரணமாக, எல்லை காவலர்கள் மற்றும் தமிழறிஞர்களின் 217 குடும்பங்கள் பயனடைகின்றன. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.53 லட்சத்து 61 ஆயிரம் கூடுதல் செலவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நலிந்த கலைஞர்களுக்கு ரூ.1000 நிதியுதவி :
நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் மேலும் 500 நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு 08.01.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
கலை வளர்ச்சிக்குத் தொண்டு புரிவதையே வாழ் வில் கடமையாகக் கொண்டு வாழும் கலைஞர்கள், வயது முதுமையால் தொழில் வாய்ப்பு குறைந்து அல்லல்படுகின்றனர். நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டது. 2006க்கு பிறகு அதை 1000 ரூபாயாக உயர்த்தி முதல்வர் கருணாநிதி வழங்கினார். 2006 முதல் ஆண்டுக்கு 500 பேர் வீதம் கடந்த 4 ஆண்டில் 7 ஆயிரத்து 391 நலிந்த கலைஞர்கள் மாதம் 1000 ரூபாய் நிதியுதவி பெற்று வருகின்றனர்.
கலை வளர்ச்சிக்குத் தொண்டு புரிவதையே வாழ் வில் கடமையாகக் கொண்டு வாழும் கலைஞர்கள், வயது முதுமையால் தொழில் வாய்ப்பு குறைந்து அல்லல்படுகின்றனர். நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டது. 2006க்கு பிறகு அதை 1000 ரூபாயாக உயர்த்தி முதல்வர் கருணாநிதி வழங்கினார். 2006 முதல் ஆண்டுக்கு 500 பேர் வீதம் கடந்த 4 ஆண்டில் 7 ஆயிரத்து 391 நலிந்த கலைஞர்கள் மாதம் 1000 ரூபாய் நிதியுதவி பெற்று வருகின்றனர்.
2010&2011ம் ஆண்டுக்கான சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, சட்டப்பேரவையில் நடப்பாண்டில் 500 நலிந்த கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 500 நலிந்த கலைஞர்களுக்கு 1.8.2010 முதல் மாதந்தோறும் 1000 ரூபாய் நிதியுதவி வழங்கிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக, நடப்பாண்டில் அரசுக்கு 40 லட்ச ரூபாய் கூடுதலாக செலவாகும். தற்போது, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 500 நலிந்த கலைஞர்களையும் சேர்த்து, இந்த திட்டத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 891 பேர் பயனடைகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திரைப்பட விருது தேர்வு செய்ய குழு :
தமிழக அரசு 08.01.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2009 மற்றும் 2010ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளையும், 2008&2009, 2009&2010 ஆகிய ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளையும் தேர்வு செய்வதற்காக, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன் தலைமையில், திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான ராம.நாராயணன், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பி.அமிர்தம், நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ், திரைப்பட நடிகர்கள் வாகை சந்திரசேகர், சிவகுமார், சாருஹாசன், ஒய்.ஜி.மகேந்திரன், குமரி முத்து, நடிகை குஷ்பு, இசையமைப்பாளர் தேவா, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர், எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட தேர் வுக் குழுவை அமைத்து, முதல்வர் கருணாநிதி 08.01.2011 அன்று ஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment