'சிப்காட்’ நிறுவனத்தின் ஆதாய பங்கு தொகை ரூ.14 கோடியே 48 லட்சத்துக்கான காசோலையை சிப்காட் தலைவர் நிரஞ்சன் மார்டி, முதல்வர் கருணாநிதியிடம் 11.01.2011 அன்று வழங்கினார்.
கடந்த 1971ம் ஆண்டு நிறுவப்பட்ட சிப்காட் நிறுவனம், 40 ஆண்டுகளாக தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் வளாகங்கள் அமைத்து முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிறுவனம் 2009&10 ஆண்டில் ரூ.302 கோடியே 9 லட்சம் மொத்த வருமானமாகவும், ரூ.92 கோடியே 19 லட்சம் நிகர லாபமாகவும் ஈட்டியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழக அரசுக்கு ஆதாய பங்கு தொகையை சிப்காட் நிறுவனம் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில், கடந்த ஆண்டுக்கான ஆதாய பங்கு தொகையான ரூ.14 கோடியே 48 லட்சத்துக்கான காசோலையை, புதிய தலைமை செயலகத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிப்காட் தலைவர் நிரஞ்சன் மார்டி, முதல்வர் கருணாநிதியிடம் நேற்று வழங்கினார். அப்போது, தொழில்துறை முதன்மை செயலர் ராஜீவ் ரஞ்சன் உடனிருந்தார்
No comments:
Post a Comment