பொங்கல் பண்டிகையின் பொழுது வழங்கப்படும் இலவச வேட்டி,சேலை பற்றி இன்று சிலர் ஏளனம் செய்கிறார்கள் .இது இன்று நேற்றா வழங்கபடுகிறது .இல்லை பல காலமாகவே இது நடை பெற்று வருகிறது .இடைப்பட்ட காலத்தில் சிலரால் நிறுத்தபட்டது. இந்த திட்டத்தை முதல் அறிமுகம் செய்தவர் முதல்வர் கருணாநிதி அவர்கள் .பின்னர் வந்த எம் ஜி ஆர் இதை தொடர்ந்து செய்துவந்தார் .அவருடைய காலத்தில் இந்த திட்டம் மக்களை வெகுவாக கவர்ந்தது .தன் மகனே பொங்கலுக்கு துணி அனுப்புவதை போல் எண்ணி மகிழ்ந்தனர்.அதுவே வாக்குகளாக மாறின .இரட்டை இல்லை சின்னம் இருந்தால் தான் ஓட்டு.கூட்டணி கட்சி சினத்திற்கு கூட கிடையாது .அந்த அளவுக்கு மக்களை கவர்ந்தது இந்த திட்டம் .அவர் மறைந்தார் .பின் கலைஞர் முதல்வர் ஆனார் .இந்த திட்டத்தை மேலும் வலுபடுத்தினார்.ஆனால் அப்பொழுது மக்களுக்கு அதன் அருமை புரியவில்லை .பின்னர் அம்மையார் ஆட்சிக்கு வந்தார் பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டம் நிறுத்த பட்டது .அப்பொழுதுதான் மக்களுக்கு புரிந்தது .ஏன் தவறு செய்தோம் என்று .
சரி கலைஞர் ஏன் இந்த திட்டத்தை சிரத்தை எடுத்து செய்கிறார் .வெறும் ஓட்டு பெறவேண்டும் என்பதற்கா ? .இந்த திட்டத்தின் மூலம் இரட்டை பயன் ஓன்று கைத்தறி நெசவாளர்களுக்கு இதன் மூலம் நல்ல வேலை கிடைத்து அதன் மூலம் வருமானம் பெருகும் .அனைத்தும் தமிழ்நாட்டில் தான் கொல்ல்முதல் செய்யப்படும் என்பது குறிபிடத்தக்கது.இரண்டு புத்தாடை வாங்க முடியாத ஏழைகளுக்கு பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் .
சரி யார் ஏழை எப்பிடி கணக்கு பார்ப்பது .ஏழைகள் அனைவருக்கும் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது .சரி அனைவர்க்கும் வேட்டி சேலை .எந்த வித வருமான உச்சவரம்பும் கிடையாது சரி இலவசத்தின் தரம் எப்பிடி உள்ளது என பார்த்தால் தமிழ்நாட்டின் கைத்தறி ஆடைக்கு உலகம் முழுவதும் நல்ல பெயர் உண்டு அதே போல் தான் இதுவும் தரமானது தான் .வாங்கி பார்த்த ஏழைக்கு தெரியும் அது அது அரசு குடுத்த மாணிக்கம் என்று.
இலவசங்கள் மக்களை சோம்பேறி ஆக்கும் என எதிர் கட்சி தலைவர் கூறி உள்ளார்.அவர் ஆட்சியிலும் தேர்தல் ஆண்டில் ஒரு முறை வழங்க பட்டது .ஆனால் அவை தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படவில்லை .மத்யபிரதேஷ் மாநிலத்தின் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது .அதன் தரம் என்ன தெரியுமா .காசியில் பிணத்தில் போடும் அந்த ரகம்
தான்.ஆனால் இன்று நல்ல தரமான சேலை .வெட்டி அதோடு மட்டுமா பொங்கல் அன்று சக்கரை பொங்கல் இட்டு கொண்டாட இலவச பொங்கல் பை .
அன்று எம்.ஜி ஆர் ஏழைகளின் ஏந்தல்.இன்று கலைஞர் அவர்களின் மவராசன் .இது தொடரபோகும் ஆட்சி .ஏழைகளின் ஆட்சி .குப்பாடு போடுபவர்கள் அடங்கிவிடுவர்.
நன்றி : நக்கீரன்.
No comments:
Post a Comment