இந்த ஒப்பந்தத்தில் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ராவும், தொழிலாளர் முன்னேற்ற சங்க (தொ.மு.ச.) தலைவர் செ.குப்புசாமியும் கையெழுத்திட்டனர். அரசு ஊழியர்களைப் போல் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும் ஊதிய விகிதம் அளிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். இதன்மூலம் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் நேரு கூறியதாவது,
" போக்குரத்து கழக ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரத்தி ஐநூறு வரை சம்பவம் உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி சம்பளத்துடன் சேர்த்து கொடுக்கப்படும்.
ஆண்டுக்கு 3 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படும். சம்பள உயர்வால் 1,13,295 ஊழியர்கள் பயனடைவர். சம்பள உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 552 கோடி ரூபாய் செலவு ஏற்படும். தொழிலாளர் முன்னேற்ற சங்கப்பேரவை நிர்வாகிகளுக்கும் அரசிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது " என கூறினார்.
No comments:
Post a Comment