கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, January 21, 2011

முதல்வர் கருணாநிதி 30ம் தேதி டெல்லி பயணம் : சோனியா, மன்மோகனை சந்திக்கிறார்


தமிழக முதல்வர் கருணாநிதி வரும் 30ம் தேதி டெல்லி செல்கிறார். அப்போது, காஙகிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுகிறார்.
டெல்லியில் வரும் 1ம் தேதி முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமை தாங்குகிறார். இதில், தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதற்காக, வரும் 30ம் தேதி மாலையில் முதல்வர் கருணாநிதி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். 31ம் தேதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசுகிறார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி பற்றியும், தொகுதி எண்ணிக்கை பற்றியும் அவர்கள் பேசி இறுதி செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், 3ம் தேதி சென்னையில் நடக்கும் திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
1ம் தேதி நடக்கும் முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார். அன்று மாலை சென்னை திரும்புகிறார். முன்னதாக, முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது. அப்போது, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment