கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

மலிவுவிலை காய்கறி விற்பனை : புதிதாக 25 உழவர் சந்தை திறக்க முதல்வர் உத்தரவு


பொது மக்களுக்கு உழவர் சந்தை, கூட்டுறவு அமைப்புகள் மூலம் காய்கறிகளை குறைந்த விலையில் கிடைக்க உட னடி நடவடிக்கை எடுக் கவும், விலைவாசியைக் கட்டுப்படுத்த குறுகிய கால திட்டம், நீண்ட கால திட் டம் வகுக்கப்படுவதற்கும் முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார். கலைஞர் தலைமையில் ஆலோசனை விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், இனிவரும் காலங்களில் விலைவா சியைக் கட்டுப்படுத்த மத் திய அரசுடன் இணைந்து எடுக்க வேண்டிய நடவ டிக்கைகள் குறித்து விவா திக்கவும், முதலமைச்சர் கலைஞர் தலைமையில் 14.01.2011 அன்று ஓமந்தூ ரார் அரசினர் தோட்டத் தில் அமைந்துள்ள புதிய தலைமைச் செயலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்றோர் இக்கூட்டத்தில், நிதித் துறை அமைச்சர் பேராசிரி யர் க.அன்பழகன், துணை முதலமைச்சர் மு.க. ஸ்டா லின், உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு, தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி, நிதித் துறை முதன்மைச் செயலாளர் க. சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா ளர் ஸ்வரன் சிங், வேளாண் உற்பத்தி ஆணையர் மற் றும் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் பா. இராம மோகன ராவ், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திரநாத் ஸ்வெயின், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறை ஆணையர் கா. பாலச்சந் திரன், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக நிருவாக இயக்குநர் முனைவர் மா. வீர சண்முகமணி, தோட் டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை ஆணையர் டாக்டர் பி. சந் திரமோகன், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண் டனர். விலை இனி குறையும் சென்ற ஆண்டு இதே சம யத்தில் நிலவிய விலையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அரிசி, துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் சில் லரை விலைகள் குறைந் துள்ளன. எண்ணெய் வித் துக்களைப் பொறுத்த வரையில், நல்லெண்ணெய் தவிர, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றின் விலை சிறிதளவு உயர்ந் துள்ளது. எனினும், பன் னாட்டுச் சந்தையில் தற் போது சமையல் எண்ணெய் யின் விலை குறையத் தொடங்கியுள்ளதால், வருங் காலத்தில் உள்ளூரிலும் சமையல் எண்ணெய்யின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காய்கறி விலையைப் பொறுத்தவரையில், உருளைக்கிழங்கின் விலை குறைந்திருந்தாலும், பிற காய்கறிகளின் விலை பருவ மழையினால் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக உயர்ந்துள்ளது. காய்கறி களின் வரத்து ஓரிரு வாரங் களில் அதிகமாக வாய்ப் பிருப்பதால், இவற்றின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் கலைஞர் அதிரடி உத்தரவு எனினும், உடனடி நட வடிக்கையாகவும், நீண்ட கால நடவடிக்கைகளாக வும், உணவுப் பண்டங் களின் விலைவாசியைக் கட்டுப்படுத்த பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது இயங்கும் 154 உழவர் சந்தை களை வலுப்படுத்தவும், கூடுதலாக 25 இடங்களில் உழவர் சந்தைகளைப் புதி தாகத் தொடங்கவும் நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும். சென்னையில் தற்போது கூட்டுறவு அமைப்புகள் மூலமாக ஒரு நாளைக்குச் சுமார் 20 டன் காய்கறிகள் நியாய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மற்றும் பிற மாநகராட்சிப் பகுதிகளில் கணிசமான அளவு காய்கறி விற்பனை மய்யங்களை உடனடியாகத் தொடங்கி, காய்கறி உற்பத்தி செய்யப் படும் பகுதிகளிலிருந்து நேரடியாகக் காய்கறிகளை வாங்கி பொது மக்களுக்கு விற்பனை செய்ய நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும். நியாய விலைக் கடைகள் மூலமாக தற் போது வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமா யில் மற்றும் மளிகைப் பொருள்கள் போதிய அளவு இருப்பு வைத்து, எந்த தட்டுப்பாடுமின்றி குடும்ப அட்டைதாரர் களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும். மத்திய அரசு இதுவரை சர்க்கரையினை முன்பேர வர்த்தகத்திலிருந்து நீக்கம் செய்திருந்ததை மீண்டும் முன்பேர வர்த்தகத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சர்க் கரை விலையைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைக்க, முன்பேர வர்த்தகத்திலி ருந்து சர்க்கரையைத் தவிர்க்க மத்திய நிதியமைச் சருக்கு உடனடியாகக் கடிதம் அனுப்பப்படவேண்டும். நீண்டகாலத் திட்டமாக பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளின் உற்பத்தியைப் பெருக்க சிறப்புத் திட்டங்களைத் தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தரமான விதை களை வழங்குதல் மற்றும் பல் வேறு வேளாண் யுக்தி களை விவசாயிகளிடம் பரப்பி, காய்கறி சாகுபடி பரப்பளவையும், உற்பத் தியையும் பெருக்கிட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வரும்காலங் களில் விவசாயப் பொருள் களின் விற்பனை மய்யங் களை நவீனமயமாக்குதல், ஒருங்கிணைத்தல், போதிய குளிர்சாதனக் கிடங்கு வசதி கள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சிறப்புத் திட்டங் களைத் தீட்டி செயல்படுத் தப்பட வேண்டும். விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப் பாசனம் உள்ளிட்ட பிற துல்லிய பண்ணை சார்ந்த திட்டங் கள் போன்றவற்றைப் பயன் படுத்தி நீர்ப்பாசனப் பரப்பை அதிகப்படுத்த வும், உற்பத்தித் திறனை அதிகப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப் பட வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment