கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, January 19, 2011

1000 கோடியில் விரிவுபடுத்தப்பட்ட காகித ஆலை - முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் $1000 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்ட அதிநவீன 3&வது இயந்திர உற்பத்தியை சென்னையில் இருந்தபடியே வீடியோகான்பரன்ஸ் மூலம் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். $375 கோடியில் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். ஆலையில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் $1000 கோடி முதலீட்டில் உலகத் தரம் வாய்ந்த அதிநவீன 3&வது காகித உற்பத்தி இயந்திரம் (யூனிட்) நிறுவப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா இன்று (19.01.2011) காலை 11 மணிக்கு நடந்தது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன மேலாண்மை இயக்குநர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர் மற்றும் தொழில்துறை முதன்மை செயலர் ராஜீவ் ரஞ்சன், கரூர் கலெக்டர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
ஆண்டுக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் டன் உற்பத்தி திறன் கொண்ட நவீன 3&வது யூனிட் தொடக்க விழா மற்றும் $67 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 600 டன் உற்பத்தித் திறன் கொண்ட திடக்கழிவில் இருந்து சிமென்ட் தயாரிக்கும் ஆலை, $135 கோடி மதிப்பீட்டில் நீராவி மற்றும் மின் உற்பத்தி பிரிவை நவீனப்படுத்துதல், $175 கோடி மதிப்பீட்டில் 300 டன் உற்பத்தித் திறன் கொண்ட காகிதத்தில் இருந்து மை நீக்கிய காகிதக்கூழ் தயாரிக்கும் ஆலை ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா ஆகிய விழாக்களும் இன்று நடந்தன.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிநவீன 3&வது யூனிட் காகித இயந்திர உற்பத்தியை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்து திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:

‘’தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் நிறுவப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த அதிநவீன மூன்றாவது காகித உற்பத்தி இயந்திரத்தை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.


தமிழகத்தில் கரூர் மாவட்டம், புகளூரில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கடந்த 26 ஆண்டுகாலமாகக் காகித உற்பத்தியில் படிப்படியாக வளர்ச்சிபெற்று மகத்தான பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.


இந்நிறுவனம் முதலில் ஆண்டுக்கு 90 ஆயிரம் மெட்ரிக்டன் காகித உற்பத்தித் திறன்கொண்ட இயந்திரத்துடன் செயல்படத் தொடங்கியது.

பின்னர், மேலும் 90 ஆயிரம் மெட்ரிக்டன் காகித உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் அங்கு நிறுவப்பட்டு ஆலையின் மொத்த உற்பத்தித் திறன் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மெட்ரிக் டன் என உயர்ந்தது.


அதைத் தொடர்ந்து இரண்டு காகித உற்பத்தி இயந்திரங்களையும் நவீனமாக்கிடும் புதிய தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டு, அந்த இரண்டு காகித உற்பத்தி இயந்திரங்கள் மூலமாக இந்த ஆலையின் காகித உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 2 இலட்சத்து 45 ஆயிரம் மெட்ரிக் டன் என அதிகரித்தது.


இந்நிலையில், தற்போது கழக ஆட்சியில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


இதன்பயனாக, நாளொன்றுக்கு 573 மெட்ரிக் டன் வீதம் - ஆண்டுக்கு மேலும் ஒரு இலட்சத்து 55 ஆயிரம் மெட்ரிக்டன் காகிதத்தை உற்பத்தி செய்திடும் உலகத்தரம் வாய்ந்த மூன்றாவது அதிநவீன காகித இயந்திரம் இந்த ஆலையில் நிறுவப்பட்டுள்ளது.


இதனால் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் காகித உற்பத்தித் திறன் மொத்தம் 4 இலட்சம் மெட்ரிக் டன் என உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் அச்சு மற்றும் எழுதும் காகித உற்பத்தியில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த இயந்திரம் குறைந்த தண்ணீர் பயன்பாட்டுடனும், குறைந்த மின்சாரத்தினையும் கொண்டு செயல்படக்கூடியது.


இந்த அதிநவீன மூன்றாவது காகித உற்பத்தி இயந்திரம் இன்று தொடங்கி வைக்கப் படுவதுடன், 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நாள் ஒன்றுக்கு 600 டன் உற்பத்தித் திறன் கொண்ட திடக்கழிவிலிருந்து சிமெண்ட் தயாரிக்கும் ஆலை; 135 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீராவி மற்றும் மின் உற்பத்திப் பிரிவை நவீனப்படுத்தும் திட்டம்; 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 300 டன் உற்பத்தித் திறன் கொண்ட காகிதத்திலிருந்து மை நீக்கிய காகிதக்கூழ் தயாரிக்கும் ஆலை; என 377 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படவுள்ள மூன்று புதிய திட்டப் பணிகளுக்கும் இந்த விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.


காகித ஆலை அமைந்துள்ள பகுதியை இணைக்கக் கூடிய கரூர் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில், 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டமும் தொடங்கி வைக்கப்படுகிறது.


தமிழகத்திற்குத் தொடர்ந்து புகழ்சேர்த்து வரும் இந்த செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி உழைத்து வருகின்ற அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்’’ என்று உரையாற்றினார்.


இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

தமிழகத்தில் தொழில் துவங்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் ளீ 56,516 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் - துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்

இவ்விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கரும்பு சக்கையைக்கொண்டு அச்சு, எழுதுதாள் உற்பத்தி செய்வதில் காகித ஆலை இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ஆலையின் கழிவில் இருந்து 600 டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.
காகித ஆலை சார்பில் 52,372 ஏக்கரில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதன் மூலம் 11,014 விவசாயிகள் பயன்பெறுகின்றனர். விவசாயிக்கு ஆண்டுதோறும் றீ10,000 கிடைக்கிறது. 2012&13ல் தரிசு நிலங்களில் பயிரிடுவது 1 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்படும்.
சமுதாய மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்க இந்தாண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறந்த சமூக சேவைக்கான பாராட்டை காகித ஆலை பெறுகிறது. கடந்தாண்டு றீ2 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர், சாலை, மருத்துவ வசதி, பள்ளி கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. நடப்பாண்டில் இது றீ3 கோடியில் மேற்கொள்ளப்ப டும்.
தமிழகம் தொழில் துறையில் சிறந்து விளங்குகிறது. 2006 மே மாதத்தில் இருந்து புரிந்துணர்வு ஒப்புந்தம் மூலம் 43 வெளிநாட்டு நிறுவனங்கள் வாயிலாக றீ56,516 கோடி முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது. காகித ஆலை சார்பில் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குவதற்கு ஜூன் முதல் றீ2 கோடியே 50 லட்சத்தில் ஐடிஐ அமைக்கப்படும்.
ஆலையின் வெள்ளி விழாவில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. தற்போது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.
இவ்வாறு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


ஆலை வளாகத்தில் நடந்த விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் விரிவுபடுத்தப்பட்ட 3&வது யூனிட்டை பார்வையிட்டு, ஆலையின் சமூக நலப்பணிகளுக்கான நிதி உதவிகளை வழங்கினார். விழாவில் முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன துணை மேலாண்மை இயக்குநர் வெள்ளியங்கிரி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment