கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, January 19, 2011

"2ஜி அலைக்கற்றை உண்மை என்ன? பின்னணி என்ன?" - நூல் வெளியீட்டு விழா




2ஜி ஸ்பெக்ட்ரம் நடந்தவையும் - நடப்பவையும் என்ற தலைப்பில் சிறப்புப் பொதுக் கூட்டம் மற்றும் 2ஜி அலைக்கற்றை உண்மை என்ன? பின்னணி என்ன? உறைய வைக்கும் தகவல்கள் புத்தக வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள் சென்னை - பெரியார் திடலில் நேற்று (18.1.2011) இரவு 7.30 மணி யளவில் மிகச் சிறப்பாக எழுச்சியுடன் நடை பெற்றது.

கலி.பூங்குன்றன்

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் திரா விடர் கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங் குன்றன் வரவேற்றுப் பேசினார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசுக்கு வருவாய் இழப்பு ரூ.11,000 கோடி ஏற்பட்டதையும் தணிக்கைத் துறை ஜெயலலிதா அரசை விமர்சித்ததையும் விளக்கினார்.

புத்தக வெளியீடு

அடுத்து 2ஜி அலைக்கற்றை உண்மை என்ன? பின்னணி என்ன? என்ற தலைப்பில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய நூலை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட ஊடகவிய லாளர் ரமேஷ் பிரபா அனைவருடைய கரவொ லிக்கிடையே பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து மயிலை நா.கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி உ.பல ராமன், மத்திய முன்னாள் அமைச்சர் க.வேங்கடபதி, புதுவை கிருஷ்ணராஜ், தொலைத் தொடர்புத் துறை தொ.மு.ச. செயலாளர் வே.சுப்புராமன், ஊமை ஜெயராமன், ந.க.மங்கள முருகேசன், நெய்வேலி வெ.ஜெயராமன் ஆகியோர் பணம் கொடுத்து நூலைப் பெற்றுக் கொண்டனர்.

அதேபோல ஆ.இராசா மீது சில ஊடகங்கள் வேட்டை ஏன்? என்ற குறுந்தகடும் ரூ.50-க்கு வழங்கப்பட்டன.

டி.கே.எஸ். இளங்கோவன், ரமேஷ் பிரபா ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி சால்வை அணிவித்தார்.

கோ.சாமிதுரை

நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை தலைமை வகித்துப் பேசினார். நமது பிரச்சார பலத்தால் பார்ப்பனர்கள் பின் வாங்கி விட்டனர். ஊழலைப் பற்றி பேசும் கம் யூனிஸ்ட் கட்சியினரின் ஆட்சியில்தான் குறிப்பாக மேற்கு வங்காளம், கேரளாவில் தான் அதிக ஊழல் நடக்கிறது என்று கூறி விளக்கமளித்தார்.

ஆ.இராசா என்ற செங்கல்லை உருவி திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைக்கின்றனர் - ரமேஷ் பிரபா

ஊடகவியலாளர் ரமேஷ் பிரபா தனது உரையில் கூறியதாவது: சென்னை தியாகராயர் நகரில் ஆ.இராசா மீது ஊடகங்கள் வேட்டை ஏன் என்ற கூட்டத்தில் கலந்து கொள்ள நான் சென்ற பொழுது என்னை சிலர் மிரட்டினார்கள். நான் அதையும் தாண்டித்தான் பேசினேன்.
பல அன்பு தொலைப்பேசிகள் உங்கள் இடத்தில் ரெய்டு நடக்கவில்லையா என்று கேட்டார்கள். நான் தியாகராயர் அரங்கு பொதுக் கூட்டத்தில் பெண்களை கேவலமாகப் பேசிவிட்டேன் என்று மெயில் செய்தி அனுப்பினார்கள். நான் பேசிய டி.வி.டி.யை திருப்பித் திருப்பிப் போட்டுப் பார்த்தேன்.

ஆ.இராசா சென்னை விமான நிலையம் வந்த பொழுது அவ்வளவு கூட்டத்திலும் ஒரு தொலைக் காட்சியைச் சேர்ந்த பெண் தடுத்து குறுக்கே விழுந்து அவரை கேள்வி கேட்டார் என்பது பற்றித்தான் பேசியிருந்தேன்.

பெண்களைப் பற்றி நான் இழிவாகப் பேசி விட்டேன் என்று சில ஊடகங்களைச் சேர்ந்த வர்கள் ஒன்றுகூடி என்னை கண்டித்துப் பேசினார் கள். கண்டன தீர்மானம் போட்டார்கள். மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். இவர் மீது சட்ட ரீதியாக வழக்குப் போட வேண்டும் என்று சொன்னார்கள். பிறகு அவர்களே அவர் பேசியது நீதிமன்றத்திற்குச் சென்றால் எடுபடாது என்று முடித்தார்கள்.

இவர்கள் எல்லாம் யார் என்றால் உயர் ஜாதி வர்க்கத்தினரே - குறிப்பாக அய்யங்கார் பெண்களே!

எனக்கு அப்பொழுது தான் புரிந்தது. இந்த காலத்திலேயே நம்மை இந்த அளவுக்கு இழிவுபடுத் திட பார்க்கிறார்களே, தனி ஒரு இராணுவமாக இருந்த பெரியாருக்கு அந்த காலத்தில் எவ்வளவு தொல்லை கொடுத்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்தேன். அதே போல ஆசிரியருக்கு எவ்வளவு தொல்லை கொடுத்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்த்தேன். இனிமேல் என்னுடைய எண்ணத்தை யும், வண்ணத்தையும் வெளியில் காட்டத் துணிந்து விட்டேன்.

நமது தமிழர் தலைவர் அவர்கள் ஆரம்பத்தில் இது இராசா பிரச்சினை அல்ல. ஆரியர் - திராவிடர் போராட்டம் என்று கூறினார்கள். அப்பொழுது என்ன இவர் இப்படி சொல்கிறாரே என்று புரிய வில்லை. இப்பொழுது அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பது எனக்குப் புரிந்து விட்டது.

நமது ஆசிரியர் அவர்கள் மிகத் தெளிவாகச் சொன்னார்கள். ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் இன எதிரிகள் இராசாவை குறை சொல்லுகிறார்கள். என்பதல்ல செய்தி. திராவிட இயக்கம் என்ற கட்டடத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவ ஆரம்பித்திருக்கிறார்கள். அவர் சொன்னது உண்மை என்ற பாடத்தை இப்பொழுது அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.

கொஞ்ச காலத்திற்கு முன்னாலேயே...

எனக்கு இப்பொழுது தோன்றுகிறது. இன்னும் கொஞ்ச காலத்திற்கு முன்னாலேயே ஆசிரியர் பக்கத்தில் நாம் உட்கார்ந்திருக்க வேண்டும் என்று இப்பொழுது தோன்றுகிறது.

நமது ஆசிரியர் அவர்களை சந்திக்கும்பொழுது சொன்னேன். மருத்துவத்தில் நுழைவுத் தேர்வை அமல்படுத்தியிருக்கிறார்கள். நீங்கள் இதைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று சொன்னேன்.

நுழைவுத் தேர்வைப் பற்றி ஆர்ப்பாட்டம் நடத்திடப்படும் என்று ஏற்கெனவே நான் அறிக்கை விட்டுவிட்டேன் என்று சொன்னார்.

அவர் தமிழகம் முழுக்க நடத்திய ஆர்ப்பாட்டத் தால் இன்றைக்கு நுழைவுத் தேர்வு நிறுத்தப்பட்டு விட்டது. வீதிக்கு வந்து போராடிய ஒரே ஒரு இயக்கம் திராவிடர் கழகம்தான்.

அதே போன்ற நம்பிக்கை இராசா விசயத்திலும் நமக்குக் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆ.இராசாவால் இழப்பல்ல; ரூ.90,000 கோடி அரசுக்கு லாபம் - டி.கே.எஸ். இளங்கோவன்

அடுத்துதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. எஸ்.இளங்கோவன் தனது உரையில் குறிப்பிட்ட தாவது:

2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற ஒரு மிகப்பெரிய பிரச்சினை ஒரு மிகப்பெரிய புயல் இப்பொழுது ஓய்ந்து விட்டது.

மக்களுக்கு லாபம்; அரசுக்கு இழப்பு

சி.ஏ.ஜி. அறிக்கைப் படி இதுவரை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், ஒரு அமைச்சர் கூட ஒரு ஆண்டு கூடப் பதவியிலேயே இருக்க முடியாது.

தொலைத்தொடர்பு கொள்கையை உருவாக் கியதே பா.ஜ.க. அரசு தான். 1999இல் என்ன கொள் கையை வைத்து உருவாக்கினார்களோ அதே அடிப் படையைத் தான் இராசாவும் பின்பற்றினார்.

உத்தேச இழப்பீடு 1,76,000 கோடி ரூபாய் என்று சி.ஏ.ஜி. அறிக்கை சொல்லுகிறது. உதாரணத்திற்கு ஒன்றை சொல்லுகிறேன். மத்திய அரசு 1 கிலோ அரிசியை ரூ.8.30-க்கு வழங்குகிறது. அதை தமிழக அரசு வாங்கி ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு மலிவு விலையில் கொடுக்கிறது.

இதனால் தமிழக அரசுக்கு ஏற்படும் இழப்பு ரூ.2100 கோடி, இதை எப்படி நீங்கள் ஊழல் என்று சொல்ல முடியும், அருண்சோரி வெறும் 30 ஆயிரம் கோடிதான் இழப்பு என்று சொல்லுகிறார். ஆக, சி.ஏ.ஜி. அறிக்கையில் நிறைய தடுமாற்றங்கள் உள்ளன.

அதேபோல கேஸ்ஸின் விலை சந்தை மதிப்பில் ரூ.575 என்றால் மக்களுக்கு அரசு ரூ. 375-க்கு கொடுக்கிறது. இதில் இழப்பு 200 ரூபாய். இப்படிப் பட்ட இழப்பை ஊழல் என்று யாராவது சொல்ல முடியுமா? காரணம் அரசு எடுத்த ஒரு கொள்கை முடிவு. மக்களுக்குப் பலன் அளிக்கக் கூடியது.

இராசாவால் 1,76,000 கோடி இழப்பு ஏற்பட வில்லை. மாறாக 4 ஆண்டுகளில் 90 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருமானம் கிடைத்திருக் கிறது.

- இவ்வாறு அவர் பேசினார்.

முதன்மை கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமனம் செய்யப்பட்டது அரசின் கொள்கை முடிவு என்று உச்சநீதிமன்றத்தில் சொன்ன மத்திய அரசு அமைச்சர் ஆ.இராசா விஷயத்திலும் அவ்வாறு கூறாதது -ஏன்? - கி. வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேசுகையில் கூறியதாவது:

இங்கே எனக்கு முன் உரையாற்றிய டி.கே.எஸ் இளங்கோவன் எம்.பி.யும், ஊடகவியலாளர் ரமேஷ் பிரபாவும் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத் திலே கருத்துகளை எடுத்துச் சொன் னார்கள்.

உண்மை விளக்க அச்சகம்

தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு இதழைத் தொடங்கும் பொழுதே அதற்குரிய அச்சகத்திற்குப் பெயரே உண்மை விளக்க அச்சகம் என்றே பெயர் வைத்தார்கள்.

அதே போல இந்த இயக்கத்தின் சார்பிலே உண்மைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் மக்களுக்கு இந்தக் கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக தமிழக மெங்கும் இது போன்ற பல பொதுக் கூட்டங்களின் வாயிலாக விளக்கிச் சொல்லிக்கொண்டு வருகிறோம்.

செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை போல்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.இராசா அவர்களுக்கு செய்யாத குற்றத்திற்காக ஜென்ம தண்டனையா? என்பதுதான் எங்கள் கேள்வி. இந்த ஸ்பெக்ட்ரம் பிரச்சினையிலே தி.மு.க மீது எப்படியாவது பழி போட வேண்டும்; எப்படியாவது ஒரு தர்ம சங்கடத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இராசா ஊழல் செய்து விட்டார் என்று பழியைப் போட் டார்கள்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னவுடனே அவரு டைய தொண்டர் ஆ.இராசா அடுத்த கணமே பதவி விலகினார். இராசா கண்ணியத்திற்குரியவர்; கடமை, கட்டுப்பாடு கொண்டவர். அவரது ராஜினாமாவால் இராசா உண்மை பக்கம் நிற்கிறார். தி.மு.க. உண்மை பக்கம் நிற்கிறது என்பதை இந்த நாட்டிற்கே காட்டிவிட்டது.

இன்றைக்கு இன எதிரிகள், உயர்ஜாதி ஊடகக் காரர்கள் இராசாவைத் தாக்கவில்லை; கலைஞரைத் தாக்கவில்லை; வீரமணியைத் தாக்கவில்லை; மத்திய அமைச்சர் கபில்சிபலைத் தாக்க ஆரம்பித்து விட் டார்கள். எதிரிகள் செய்யாத குற்றத்தை ஊதி ஊதி பலூனை பெரிதுபடுத்திக் காட்டினார்கள். கபில் சிபல் குண்டூசியால் குத்தி, நடந்தவற்றை வெளியே சொல்லியிருக்கிறார். அதனால் அவர்களுக்கு கபில்சிபல் மீது ஆத்திரம். ஆ.இராசா வகித்த தொலைத்தொடர்புத் துறை மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை. மாறாக அதிக வருமானம் தான் கிடைத்திருக்கிறது என்பதை ஆதாரத்துடன் சொல்லி இருக்கிறார்.

டில்லியில் கபில் சிபல் பேட்டி

மத்திய அமைச்சர் கபில் சிபல் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் சொல்லி யிருக்கிறார்:

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் அதிகாரம் அளிக்கப் பட்ட அமைச்சர்கள் குழுவின் தலைவராக இருந்த அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சரை யும், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆகி யோரைக் கலந்தாலோசித்தார். இந்தக் கலந்தா லோசனைகளின் அடிப்படையில் அனைத்துத் தேர்வுகளையும் பரிசீலித்த இரண்டு அமைச் சர்களும், 2ஜி விலை நிர்ணயத்தை முன்பு போலவே தொடர்வது என்றும், 3ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏல முறையில் அளிப்பது என்று ஒரு முடிவுக்கு வந்தனர் என்றும் பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பாக இந்த முடிவை பிரதமர் ஏற்றுக் கொண்டார் என்று இப்படி கபில் சிபலே சொல்லியிருக்கிறார். நாங்கள் சொல்லுவது திராவிட இயக்கத்தை காப்பாற்றுவதற் காக- இராசாவை காப்பாற்றுவதற்காக அல்ல. மக்கள் உண்மைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எடுத்துச் சொல்லு கின்றோம்.

2ஜி, 3ஜி விளக்கம்

2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது சாதாரண ஏழை, எளிய மக்களுக்காகப் பயன்படுகின்ற தொலைப் பேசி. ஆனால் 3ஜி ஸ்பெக்ட்ரம் வீடியோ மற்றும் ஏராளமான தகவல்கள், விவரங்கள் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளை வழங்குவதற் குப் பயன்படுத்தப்படுவதாகும். இந்தச் சேவைகளை வழங்குவதற்குப் பயன்படுத்துவதாகும்.

இந்தச் சேவைகளை பெரும்பாலும் நிறுவனங்களும் (கம்பெனிகள்) பெருமளவு செலவு செய்யும் திறன் படைத்த தனி நபர்கள் மட்டுமே பயன்படுத்துவது ஆகும். அதாவது எனக்கு முன்னாலே பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன் High Technology என்று சொன்னார்களே, அதுதான் 3ஜி.

நெடுஞ்சாலைகளில் நல்ல அகலமான சாலை களில் செல்லும் வண்டிகளுக்கு சுங்க வரி வசூலிப் பார்கள். காரணம், அந்த சாலை போடப்படுவதற்கு ஏற்பட்ட செலவை வாகனங்கள் மூலம் - திரும்பப் பெற சுங்கவரி வசூலிப்பார்கள்.

ஆனால், கிராமங்களில் இது போன்று வசூலிக்க முடியாது. அதே நேரத்தில் சாதாரண கிராம மக்களுக்கு குறைந்த செலவில் அடிப்படை வசதியான தொலைநோக்கில் வசதி கிடைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

ரேஷன் பொருள்களே உதாரணம்

பொதுவாக அரசு மக்களுக்கு அரிசி போன்ற உணவுப் பொருள்களை ரேஷன் கடைகளில் சலுகை விலையில் வழங்குகிறது. அதே போல கல்விக் கொள்கையையும் வகுத்து, கல்வியில் சாதாரண மக்களுக்குச் சலுகை வழங்கப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கு ஆதாயம் கிடைக்குமே தவிர, அரசுக்கு வருவாய் கிடைக்காது. மாறாக வருவாய் இழப்புதான் ஏற்படும். மக்கள் நலனுக்காக செய்யப்பட்டதை, எப்படி ஊழல் என்று கூற முடியும்? இழப்பு ஏற்படலாம் - ஆனால், மக்களுக்கு லாபமானது.

ஊழல் ஊழல் என்று தி.மு.க. அரசுக்கு எதிராக ஆதாரமற்ற பிரச்சாரத்தைக் கிளப்பிவிடு கிறார்கள். நாங்கள் செய்த பிரச்சாரத்தினால் அவர்களால் ஊதி ஊதி பெரிதுபடுத்தப்பட்ட பலூன் எங்களது பிரச்சார சக்தி என்ற குண்டூசி யினால் காற்று இன்றைக்கு இறங்கி தொங்க விடப்பட்டிருக்கிறது.

ஆகவே மத்திய அரசுக்கு இதனால் வருமான மல்ல. சாதாரண ஏழை, எளிய நடுத்தரப் பொது மக்களுக்கு நன்மை ஏற்பட்டிருக்கிறது.

கீரைக்காரி முனியம்மாள் கையில் இன்றைக்கு தொலைப்பேசி இருக்கிறது. இது இராசா செய்த புரட்சி அல்லவா? மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு தொலைப்பேசி வசதி கிடைத்துள்ளது (Tele Density) சாமான்ய மக்களுக்கு கைப்பேசி சேவைகளின் கட்டணங்களும் குறைக்கப்பட்டிருக்கின்றன.

இதன் விளைவாக மத்திய அரசுக்குப் பொருளாதார ஆதாயம் மிகப்பெரிய அளவுக்குக் கிடைத்திருக்கிறது.

70 கோடி மக்கள் கையில் இன்றைக்கு செல்பேசி இருக்கிறது. நமது பிரச்சாரத்திற்குப் பதில் சொல்லாமல் ஒரு தொலைக்காட்சியில் சோ லொக், லொக் என்று இருமி மழுப்புகிறார், குழப்புகிறார், திசை திருப்புகிறார்.

ராசா- ஜிக்கே வெற்றி

நாடாளுமன்ற சென்ற தேர்தலிலேயே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று அ.தி.மு.க. பிரச்சாரம் செய்து பார்த்தது. நீலகிரி தொகுதி மக்கள் பார்த்தார்கள். இவர்கள் சொன்ன 2ஜியைப் பற்றியும் கவலைப்படவில்லை; 3ஜியைப் பற்றியும் கவலைப்படவில்லை. இராசா-ஜி என்று சொல்லி ஓட்டுப் போட்டு அவரை வெற்றி பெற வைத்தனரே, அப்பொழுதே இந்த ஸ்பெக்ட்ரம் பிரச்சினை எடுபடவில்லையே.

(தமிழர் தலைவர் உரையிலிருந்து சென்னை-பொதுக்கூட்டம், 18-1-2011)

அரசுக்கு வருமானம் ரூ.10,000 கோடி. சேஷாத்திரி என்பவர் எழுதியிருக்கிறார். சி.ஏ.ஜி அறிக்கை தவறு. இந்தியாவின் வரி வருமானத்தைக் கணக்கிட வேண்டாமா? சி.ஏ.ஜி.ஏன் தவறான பாதைக்குச் செல்கிறது என்று அவாள்களில் ஒருவரும் இப்படி ஒரு நல்ல கேள்வி கேட்டிருக்கின்றார். அவர்களில் இப்படி உண்மையைச் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்கதே!

ரூ.ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்று சொல்லுகிறார்களே. மத்திய அரசாங்கத்திற்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் வந்திருக்கின்ற உண்மையான தொகையை மறைக்கிறார்கள். இராசா செய்ததாகச் சொல்லப்படுவது யூகம்; ஆனால், இது அரசுக்கு வந்த உண்மையான மறுக்க முடியாத இலாப வருவாய். சி.ஏ.ஜி அறிக்கையில் என்ன சொல்லு கிறார்கள்? யூகத்தின் அடிப்படையில் 1,76,000 கோடி அரசுக்கு இழப்பு என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

கணக்கில் எட்டையும், எட்டையும் கூட்டினால் பதினாறு வரும்; ஆனால் எட்டையும், எட்டையும் கூட்டினால் பத்துதான் வரும் என்று சி.ஏ.ஜி. அறிக்கையை ஆதரிக்கிறவர்கள் கூறுகிறார்கள். கணக்கில் போய் எப்படி அய்யா இப்படிக் கூற முடியும் என்று நாம் கேட்டால், உட்கார்ந்து பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று சொல்லுவதா?

2ஜி அலைக்கற்றை விவகாரத்தை அரசு பொதுக் கணக்குத்துறையினர் (சி.ஏ.ஜி.) தங்களது அறிக்கையை அரசியல் சட்டப்படி முதலில் குடியரசுத் தலைவரிடம் கொடுக்க வேண்டும் இது ஒரு அரசு இரகசிய அறிக்கை.

இதை, பிரதமர் நாடாளுமன்றத்தில் வைப்பார். அதன் பிறகு தான் நாடாளுமன்றத்தின் மூலம் இந்த அறிக்கையே வெளியில் வரும். ஆனால், சி.ஏ.ஜி. ரிப்போர்ட்டில் உள்ள ஒவ்வொரு பக்கமும் பிரதமருக்கும், நாடாளுமன்றத்திற்கும் தெரியாமல் எப்படி கசிந்தது?

பத்திரிகையில் ஒவ்வொரு பக்கமாக அந்த அறிக்கை எப்படி முன்னதாகவே வெளியே வந்தது? இந்த அறிக்கையைக் கசியவிட்டவர்களை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்திருக்க வேண்டுமா? இல்லையா? சரி, இந்த அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு ஒருவர் உச்சநீதிமன்றத் தில் வழக்குப் போடுகிறார். அரசாங்கமே வெளி யிடாத அறிக்கை உங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்று அவரைக் கேள்வி கேட்டு கைது செய்திருக்க வேண்டுமே உச்சநீதிமன்றம்?

அந்த நபர் கொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் எப்படி ஏற்றுக்கொண்டது? இது சட்டத்திற்கு விரோத மான செயல் அல்லவா? இதற்குப் பெயர்தான் மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்பது.

சி.ஏ.ஜி. அறிக்கையில் யூகத்தின் அடிப்படையில் அரசுக்கு 1,76,000 கோடி இழப்பு என்று சொல்கிறார் கள் என்றால் இழப்பு என்பது எப்படி ஊழலாகும்?

மாண்டேக் சிங் அலுவாலியா என்பவர் இந்திய திட்டக் கமிஷனின் துணைத் தலைவர். பெரிய பொருளாதார நிபுணர் - வெளிநாட்டில் படித்த பொருளாதார நிபுணர். அரசாங்கத்தின் நோக்கமே வருமானத்தைப் பெருக்குவதே தவிர, வருமானம் நோக்கம் அல்ல என்று சொல்லியிருக்கின்றார். மத்திய அரசின் சார்பிலும் போடப்பட்ட அஃபிட விட்டில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இது அரசாங்கத்தினுடைய கொள்கை முடிவு. உச்ச நீதிமன்றமே இதில் தலையிட முடியாது என்று சொல்லியிருக்கிறது.

ஒரு கிராமத்தில் பேருந்து விடுகிறார்கள். அய்ந்து மைல் சென்று படித்த பிள்ளைகள், கிராமத்துக்காரர் கள் பேருந்தில் வசதியாகச் செல்லுகிறார்கள். ஆனால், அங்கு விடப்படுகின்ற பேருந்து நட்டத் தில்தான் இயங்குகிறது. ஆனால் இலாபம் கிராமத்து மக்களுக்கு - பொது மக்களுக்கு. இது ளுடிஉயைட ஐஎநளவஅநவே - சமுதாய முதலீடு. அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டினால் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு என்ற இந்திய தலைமைக் கணக்கு அலுவலரின் கணக்கு தவறு. 1999 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப் பட்டு வந்த தொலைத் தொடர்புக் கொள்கை, வருவாயை அதிகப்படுத்தும் கொள்கை அல்ல என்ற காரணத்தால், எவ்வளவு வருமானத்தை அரசுக்கு ஈட்டி இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பி விடை தேடுவது சற்றும் பயனற்றது என்று அலுவாலியா சொல்லுகின்றார்.

மேலும் சொல்லுகிறார்: 2ஜி அலைவரிசை ஒதுக் கீடு பெற்ற சுவான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள் புதிய பங்குகளை வேறு நிறுவனங்களுக்கு விற்று உள்ளன என்பது முற்றிலும் உண்மையே. ஆனால், அந்தப் பணம் அந்த நிறுவனங்களுக்குச் செல்லவில்லை.

புதிய நிறுவனங்களுக்குச் சென்ற அந்தப்பணம் தொலை தொடர்புச் சேவைக் கட்டமைப்பை உருவாக்குவதற்குப் பயன்படுத்துவதற்கானது. அந்நிறுவனங்கள் ஈகுவிடி பங்குகளை விரிவுபடுத்தி புதியவர்களை நிறுவனத்துக்குள் கொண்டு வந்து உள்ளன. இது அந்நிறுவனங்கள் அதிக லாபம் பெற்றன என்பதாக ஆகாது என்று சொல்லி யிருக்கிறார். இராசா தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த 4 ஆண்டுகளில் ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படவில்லை. மாறாக 90 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருமானம் தான் வந்திருக்கிறது.

70 கோடி பேருக்கு தொலைப்பேசி

இந்தியாவில் இன்றைக்கு 70 கோடி பேருக்கு தொலைப்பேசிகள் இருக்கின்றன. நான் இந்தியாவின் தலைசிறந்த வரியியல் அறிஞரிடம் இந்த ஸ்பெக்ட்ரம் பிரச்சினைபற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார். ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் மூடி மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா பிரதமருக்குக் கடிதம் எழுதினார் பாருங்கள்.

இது என்றைக்கும் வரலாற்றில் நிற்கக்கூடியது. அரசு எடுத்த கொள்கை முடிவில் உச்சநீதிமன்றமாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் தலையிட முடியாது.

கேரள உணவுத்துறை செயலாளராக இருந்தவர் தாமஸ் என்பவர். தாமஸ் பாமாயில் விசயத்தில் பெரும் ஊழல் செய்து விட்டார். என்று என்.டி.டி.வி, டைம்ஸ் நவ் போன்ற தொலைக்காட்சிகள் போட்டுப் போட்டுக் காட்டி அவமானப்படுத்தினர். என்ன பண்ணியும் கேரளத்துக்காரர் அசையவில்லை. பிறகு அவர் ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற பொழுது மத்திய அரசு தனது அஃபிட விட்டில் மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி உறுதியுடன் தெரிவித்துவிட்டதே!

ஆனால் ஆ.இராசா ஊழலே செய்யவில்லை. அரசுக்கு இழப்பீடு எதுவும் ஏற்படவில்லை. சி.ஏ.ஜி. சொல்லும் அறிக்கையோ யூகத்தின் அடிப்படையில் இழப்பீடு என்று சொல்லுகிறது.

அப்படியானால் ஆ.இராசா விசயத்திலும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அரசு எடுத்த கொள்கை முடிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று ஏன் சொல்லவில்லை? இராசாவுக்கு ஒரு நீதி; தாமசுக்கு ஒரு நீதியா? எனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் உண்மை என்ன? பின்னணி என்ன என்ற நூலைப் பரப்புங்கள். ஒவ்வொருவரும் மக்களுக்கு இந்த உண்மைகளை எடுத்துச் சொல்லுங்கள்.

2011-லும் கலைஞர் ஆட்சியே!

சி.ஏ.ஜி அறிக்கை வெறும் காகித அறிக்கை. நம்மிடம் இருப்பது ஆதாரப்பூர்வமான ஆயுத அறிக்கை. இதனால் கலைஞர் ஆட்சிக்கு எந்தவிதப் பாதகமில்லை; சாதகம்தான் ஏற்படும்; மீண்டும் 2011 இல் கலைஞர் ஆட்சி மலர்வது உறுதி. ஆறாவது முறையாக அவர்தான் முதல்வராக வருவார்.

-இவ்வாறு தமிழர் தலைவர் பேசினார்.



No comments:

Post a Comment