முதல்வர் கருணாநிதி நேற்று (31.12.2010) வெளியிட்டுள்ள அறிக்கை:
''சாலைப் பாதுகாப்பு & இடைவேளையில்லா தொடர் பயணம்” என்பதை வலியுறுத்தி 22வது ஆண்டு சாலைப்பாதுகாப்பு வாரம் ஜனவரித் திங்கள் முதல் வாரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. சாலை விபத்துகளால் பலர் வருவாய் ஈட்டும் தங்கள் குடும்பத் தலைவரான தந்தை, தாயை இழக்கின்றனர். பலர் கணவனையும், மனைவியும் இழந்து விடுகின்றனர். மேலும் பலர் தம் அருமை மகன், மகளை பறிகொடுத்து பதைக்கின்றனர். இதனால், குடும்பங்கள் சொல்லொணா தொல்லைகளுக்கு ஆட்பட்டு மீளாத் துயரில் மூழ்கிவிடுகின்றன. இந்த விபத்துகள் அரசின் வளர்ச்சி திட்டங்களையும் பாதிக்கின்றன.
இத்தகையை சாலை விபத்துகள் நிகழாமல் தடுக்கப்படவும், சாலைப் பயணங்கள் இனிதாக அமைந்திடவும் மத்திய, மாநில அரசு பெருமளவில் நிதி ஒதுக்கீடுகள் செய்து சாலைகளை அகலப்படுத்தி வருகின்றன. இருவழிப் போக்குவரத்துக்களுக்கு வசதியாக இடையில் தடுப்புகள் அமைத்து, தேவைப்படும் இடங்களில் சாலைக் குறியீடுகளை நிறுவி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, நாடும் வீடும் நம்மை நம்பி உள்ளன எனும் எண்ணத்தோடு, சாலைவிபத்துகள் நிகழாமல் தடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை. இந்த உணர்வோடு சாலை விதிகளை தவறாமல் கடைப்பிடித்திடுவோம். விபத்துகளை தடுப்போம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment