கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 9, 2011

2 நாள் பயணமாக சென்னை வந்தார் பிரதமர் : துணை முதல்வர் வரவேற்றார்


பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் பயணமாக 02.01.2011 அன்று இரவு சென்னை வந்தார்.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ‘98வது இந்திய அறிவியல் மாநாடு’ 03.01.2011 அன்று முதல் 7ம் தேதி வரை நடக்கிறது. இதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் அறிஞர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைக்கிறார். இதற்காக 02.01.2011 அன்று மாலை 7.40 மணிக்கு விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்து சேர்ந்தார்.
மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதன்பின், விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு மேடைக்கு 7.47 மணிக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் வந்தார்.
அங்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம். தயாநிதி மாறன், ஜி.கே.வாசன், நாராயணசாமி, நெப்போலியன், பாண்டிச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம், தமிழக அமைச்சர்கள் அன்பழகன், பரிதிஇளம்வழுதி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுப.தங்கவேலன், வெள்ளக்கோயில் சாமிநாதன், தா.மோ.அன்பரசன், பெரியகருப்பன், கேசாத்தூர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் மாலதி, டிஜிபி லத்திகாசரண் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். எம்பிக்கள் டி.ஆர்.பாலு, வசந்தி ஸ்டான்லி, கிருஷ்ணசாமி மற்றும் எம்எல்ஏக்கள், ராணிவெங்கடேஷன், காயத்திரிதேவி, வசந்தகுமார், வி.எஸ்.பாபு, யசோதா மற்றும் பலர் பங்கேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடித்ததும் மேடையில் பிரதமர், துணை முதல்வர் ஸ்டாலின், சிதம்பரம் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஒன்றாக நின்றனர். அப்போது புகைப்படப்காரர்கள் அவர்களை படம் எடுத்தனர்.
முன்னாள் எம்பி அன்பரசு, பிரதமரிடம் ஒரு மனுவை கொடுத்து ஒரு சில விநாடிகள் பேசினார். பின்னர் பிரதமர் 8.15 மணிக்கு கவர்னர் மாளிகை வந்து சேர்ந்தார்.

No comments:

Post a Comment