போலியோ என்ற கொடிய இளம்பிள்ளைவாத நோய் குழந்தைகளின் கை, கால் களை நிரந்தரமாக செய லிழக்கச் செய்கின்றன. போலியோ நுண் கிருமி கள் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுப் பொருள் கள் மூலம் குழந்தை களிடையே பரவுகின்றன.
அனைத்து குழந்தை களுக்கும் ஒரே சமயத்தில் சொட்டு மருந்து கொடுப் பதன் மூலம் இந்தியா விலிருந்து இந்நோயை அறவே ஒழிக்க முடியும். அதற்காக 1995 ஆம் ஆண்டு முதல் பல்ஸ் போலியோ சிறப்பு முகாம்கள் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் நடத்தப் பட்டு வருகின்றன. ஒவ் வொரு ஆண்டும் இந்தியா வில் 17 கோடி 5 வயதிற் குட்பட்ட குழந்தைகளும், தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளும் பயனடைந் துள்ளார்கள். போலியோ சிறப்பு முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதால் கடந்த அய்ந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போலியோ வினால் எந்த குழந்தையும் பாதிக்கப்படவில்லை. அய்ந்து வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தை களுக்கும் சொட்டுமருந்து கொடுக்க 23-1-2011 மற்றும் 27-2-2011 ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நாடு முமுவதும் நடத்தப்படுகின்றன. அரசு மருத்துவமனை கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மய்யங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழி பாட்டுத் தலங்கள், சுற்று லா மய்யங்கள் முதலான இடங்களில் 40 ஆயிரத்து 399 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலியோ நோய் பாதிப்பு உள்ள வட மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கும், இலங் கை அகதிகள் குழந்தை களுக்கும் நடமாடும் முகாம்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கவும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. அரசுத் துறைகள், ரோட்டரி சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறு வனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முகாமில் ஈடுபடுகிறார்கள்.
போலியோ சொட்டு மருந்து உரிய குளிர்பதன நிலையில் பராமரிக்கப் பட்டு வீரியமுடன் வழங் கப்படுவதை VVM (Vaccine Vial Monitor) மூலம் உறுதி செய்யப்படுகிறது. சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளின் இடதுகை சுண்டு விரலில் மார்க்கர் பேனா (ஆயசமநச ஞந) மூலம் அடையாள மை இடப் படும். விடுபடும் குழந்தை கள் இதன் மூலம் கண் டறியப்படுவர். போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப் பானது, பயனளிக்கக் கூடியது. முகாம் நாள் களில் 5 வயதுக்கு உள் பட்ட ஒரு குழந்தை கூட விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கி னால் மட்டுமே எல்லா குழந்தைகளுக்கும் போலி யோ நோயிலிருந்து பாது காப்பு கிடைக்கும்.
சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாடு முழு வதும் அவரவர் வசிப்பிட பகுதிகளுக்கு அருகா மையிலேயே அமைக்கப் பட்டுள்ளன. பொது மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்தி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் இத்திட் டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இன்று (23-1-2011) அவரது இல்லத் தில், குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது, முதலமைச்சர் கலைஞரின் துணைவியார் தயாளு அம்மாள், மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல் வம், சென்னை மாநக ராட்சி மேயர் மா.சுப்பிர மணியன், மக்கள் நல் வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் வி.கு. சுப்புராஜ், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மரு.ஆர்.டி. பொற்கை பாண்டியன், மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.வி. கனகசபை மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மரு. என். ராஜா உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment