கலைஞர் தொலைக்காட்சி சார்பில் தமிழர் திருநாள் சிறப்புப் பட்டிமன்றம் இனமானப் பேராசிரியர் அவர்களை நடுவராகக் கொண்டு 11.01.2011 அன்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இப்பட்டிமன்ற நிகழ்ச்சியை முதல்வர் கலைஞர் மற்றும் மத்திய- மாநில அமைச்சர்கள் கண்டு களித்தனர். தைத்திங்கள் தமிழர் திருநாளையொட்டி கலைஞர் தொலைக்காட்சியில் 15-1-2011 அன்று சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இப் பட்டிமன்றம் 11.01.2011 அன்று மாலை 6 மணி அளவில் தொடங்கி இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது. இப்பட்டிமன்றத்திற்கு இனமானப் பேராசிரியர் அவர்கள் நடுவர் பொறுப்பேற்றார். இப்பட்டிமன்றத்தில், தி.மு.க.வின் செல்வாக்கும், புகழும் வளரக் காரணம் என்ற தலைப்பில், தலைவர் கலைஞர் அவர்களின் சமூகத் தொண்டே என்ற அணியின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, டாக்டர் க.பொன்முடி, கவிஞர் கனிமொழி எம்.பி., ஆகியோர் பேசினர். தலைவர் கலைஞர் அவர்களின் கலை இலக்கியப் பணியே என்ற அணியின் சார்பில் எஸ்.ஜெகத்ரட்சகன், சுப.வீரபாண்டியன், புதுக்கோட்டை விஜயா ஆகியோர் பேசினர். தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சித் திறனே என்ற அணியின் சார்பில் துரைமுருகன், பீட்டர் அல்போன்ஸ், தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் பேசினர்.
இப்பட்டிமன்ற நிகழ்ச்சியை முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமதி ராஜாத்தி அம்மையார் மற்றும் மத்திய - மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நீதியரசர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கழக முன்னோடிகள், பொது மக்கள் என கலைஞர் அரங்கமே கொள்ளாத அளவிற்கு திரண்டிருந்து ரசித்தனர்.
No comments:
Post a Comment