கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை விருதுகள் அறிவிப்பு


தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பாரதி விருது ஜெயகாந்தனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது இளையராஜாவுக்கும், பால சரசுவதி விருது பத்மா சுப்ரமணியனுக்கும் வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

2007-2008ஆம் ஆண்டிற்கான சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது தமிழக சட்டப்பேரவையில் 7.5.2009 அன்று நடைபெற்ற விவாதத்தின்போது தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி போன்ற விருதுகள் வழங்கப்படுவதுபோல, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற கலைஞர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் விருதுகள் வழங்கப்படுமெனத் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.


அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் முகமாகத்தான், இயல் துறையில் சிறந்து விளக்கும் ஒருவருக்கு பாரதி விருது, இசைத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது, நாட்டியக் கலையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு பாலசரசுவதி விருது என மூன்று விருதுகளை ஆண்டுதோறும் வழங்கிட முதல்வர் கருணாநிதி ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்.


அந்த ஆணையின்படி முதல் முறையாக இந்த ஆண்டில், இயல்துறையில் சிறந்த எழுத்தாளராகிய த.ஜெயகாந்தன் அவர்களுக்கு பாரதி விருது வழங்கிடவும், திரை இசைக் கலையில் தனி முத்திரை பதித்துள்ள இளையராஜா அவர்களுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கிடவும், நாட்டியக் கலையில் புகழுடன் திகழும் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு பாலசரசுவதி விருது வழங்கிடவும், இந்த விருதுகளைப் பெறும் பெருமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் விருதுக்குரிய பொற்கிழியாக வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment