இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக, மேலும் 10 லட்சம் கலர் டிவி.க்களை தமிழக அரசு கொள்முதல் செய்கிறது.
இலவச தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைக்கப்பட்ட சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒவ்வொரு முறையும் கூடி, அரசு கலர் டிவி.க்கள் கொள்முதல் செய்வது குறித்து முடிவெடுத்து வருகிறது. இதன்படி, இந்த குழுவின் 21வது கூட்டம் புதிய தலைமை செயலகத்தில் 09.01.2011 அன்று நடந்தது.
கூட்டத்துக்கு, முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். திமுக சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் யசோதா (காங்கிரஸ்), அப்துல் பாசித் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்), கோவிந்தசாமி எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2006ல் அண்ணா பிறந்த நாள் அன்று இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 5 கட்டங்களாக ஒரு கோடியே 62 லட்சத்து 80 ஆயிரம் தொலைக்காட்சி பெட்டிகள் ஒளிவு மறைவற்ற முறையில் கொள்முதல் செய்யப்பட்டு, ஒரு கோடியே 52 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு மாவட்ட கலெக்டர்கள், தங்கள் மாவட்டங்களுக்கு கூடுதலாக தொலைக்காட்சி பெட்டிகள் தேவை என கோரிக்கை விடுத்துள்ளனர். அதை பரிசீலித்து இதுவரை வழங்கப்படாமல் உள்ள தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்குவதற்காக, 6ம் கட்டமாக 10 லட்சம் தொலைக்காட்சி பெட்டிகள் கொள்முதல் செய்ய ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment