கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, January 15, 2011

பொங்கலுக்கு பிறகு பேச்சு தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு - முதல்வர் கருணாநிதி



பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு பற்றி பேச உள்ளோம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் 07.01.2011 அன்று மாலை 5.20 முதல் 6.20 வரை கலைஞர் அரங்கில் நடந்தது. முதல்வர் மு.கருணாநிதி தலைமை வகித்தார். நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் முதல்வர் அளித்த பேட்டியின் விவரம் வரும்மாறு:
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. என்ன ஆலோசனைகளை வழங்கி இருக்கிறீர்கள். காலையில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளால் ஒரே பிரச்னையாக இருந்ததே?
ஒரே பிரச்னை தானே & ஒரே பிரச்னை & ஒரேயொரு பிரச்னை & ஆளுநர் உரை.
ஆளுநர் உரையை கூட்டணி கட்சிகள் எல்லாம் வரவேற்று இருக்கிறார்கள். ஆனால், எதிர்கட்சிகள் ஏமாற்றம் என்று சொல்லியிருக்கிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?
எதிர்க்கட்சிகள் என்றால், அப்படித்தான் சொல்வார்கள்; அதில் என் கருத்து ஒன்றுமில்லை.
டில்லி உயர்நீதிமன்றம் இன்றைக்கு சுப்ரமணியம்சாமி தாக்கல் செய்த வழக்கில், ராசா மீதான வழக்கை தொடர்ந்து நடத்தலாம். அதற்கு சி.பி.ஐ. ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறதே?
இது ஒரு செய்தி,
ராசா மீது சுப்ரமணியசாமி தொடுத்துள்ள வழக்கு பற்றி உங்கள் கருத்து...?
அதிலே கருத்து ஒன்றும் இல்லை. நீதிமன்ற விவகாரத்தில் பேசும் போது நான் எந்த கருத்தும் சொல்லமாட்டேன்.
தி.மு.க.வுக்குள் முன்னாள் அமைச்சர் ராசா, தொடர்ந்து நீடிப்பது சில நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக சில செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே?
அதை பெரிய நெருக்கடியாக நான் கருதவில்லை. குற்றம், ராசா மீது நிரூபிக்கப்பட்டால் கட்சியின் செயற்குழு கூடி, விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கட்சியில் இருந்து விலகுவதாக உங்களிடம் கடிதம் கொடுத்து விட்டதாக ஒரு செய்தி உள்ளதே?
செய்திகள் எல்லாம் செய்திகளாக இருக்கின்றன.
கடிதம் கொடுத்திருக்கிறாரா?
கொடுக்கவில்லை.
ஜெயலலிதா, தி.மு.க.வை எதிர்த்து இந்த தேர்தலில் ஒரு போர் நடக்குமென்று சொல்லியிருக்கிறாரே?
போரா? போர்...ரா?
ஸ்பெக்ட்ரம் பிரச்னையை தேர்தலிலே பூதாகாரமாக கொண்டுவர வேண்டுமென்று ஜெயலலிதா சொல்வது பற்றி...?
நீங்களே பூதாகாரமாக...என்று சொல்லி விட்டீர்கள். அதாவது, சின்ன விஷயத்தை பெரிதுபடுத்துவதாக இருக்கிறார்கள். செய்யட்டும். அதற்கு ஏற்கனவே பிரதமர் உட்பட எல்லாரும் பதில் சொல்லியாகி விட்டது. குறிப்பாக, மத்திய அமைச்சர் கபில் சிபல் அதைப்பற்றி விவரமாக சொல்லி விட்டார். நான் எதுவும் சொல்வதற்கில்லை.
பிரதமர் , கூட்டணி உறுதியாக உள்ளது என்று சொல்லியிருக்கிறாரே?
அதுதான் உண்மை. அதைத்தான் தொடர்ந்து பிரதமரும், சோனியா காந்தியும் சொல்லி வருகின்றனர்.
கூட்டணியின் அடுத்த கட்டமாக எப்போது பேச்சு வார்த்தை?
பொங்கல் விழா முடிந்த பிறகு அந்த பேச்சுவார்த்தைகள் தொடரும்.
பா.ம.க. போன்ற கட்சிகள் கூட்டணிக்கு வர சமிக்ஞை கொடுத்து இருக்கிறார்கள். எப்போது அந்த கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்போகிறீர்கள்?
அவர்களும் சமிக்ஞை கொடுத்துள்ளார்கள். நாங்களும் சமிக்ஞை கொடுத்துள்ளோம். எப்போது பேசப்போகிறோம் என்பதற்கு தேதி இன்னும் நிர்ணயிக்கவில்லை.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

No comments:

Post a Comment