கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, January 21, 2011

இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் மதிமுகவில் இருந்து விலகல்


இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் மதிமுகவில் இருந்து விலகுவதாக 20.01.2011 அன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அரசியலில் நேர்மை பொது வாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி, என்ற உயர்வான உங்கள் முழக்கங்கள் எனக்குப் பிடித்ததால், எந்த ஒரு இயக்கத்தையும் சாராமல் இருந்த நான் ம.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தேன். ம.தி.மு.க. ஆரம்பித்த போது மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம்.

அரசியலில் நேர்மை. பொதுவாழ்வில் தூய்மை. லட்சியத்தில் உறுதி ஆகிய மூன்று கொள்கைகளையும் உங்களின் சுயலாபத்துக்காக பலி கொடுத்து விட்டீர்கள். நடிகர் சத்தியராஜ், மணிவண்ணன், எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி, சி.ஆர்.சரஸ்வதி, செல்வபாரதி போன்ற சினிமா பிரபலங்களும், கட்சியின் தூண்களாக இருந்த எல்.கணேசன், கண்ணப்பன், பொன்.முத்து, செஞ்சி ராமச்சந்திரன், கலைப்புலி தாணு, 7 மாவட்ட செயலாளர்கள், 300 பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் உங்களின் தவறான முடிவுகளால் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர்.
கட்சியை விட்டு வெளியேறியவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று தெரிவித்தீர்களே தவிர, உங்களின் தவறை நீங்கள் உணரவே இல்லை. மதிமுக, குட்டை மாதிரி தேங்கிக் கிடக்க காரணமும் நீங்கள்தான்.
முதல்வர் கருணாநிதிக்கு திரைப்படத்துறை சார்பில் நடத்தப்பட்ட மூன்று பாராட்டு விழாக்களையும் உங்களுக்காக புறக்கணித்தேன். கட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் இரவு, பகல் பாராமல் உழைத்து இருக்கிறேன். கடந்த 17 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து இருக்கிறேன். கட்சிக்காக நான் செலவு பண்ணினேனே தவிர, கட்சியில் இருந்து ஒரு காசும் வாங்கவில்லை.

ஆனா என்னோட முதல் தலைவனா உங்களை ஏத்துக்கிட்டு கன்னிப் பொண்ணா வந்தவன் நான். வெற்றியோ, தோல்வியோ, இயக்கமும், தலைவனும்தான் முக்கியம் என்று இத்தனை காலமும் வலிகளையும், வேதனைகளையும் தாங்கி, தாங்கி தழும்பேறி போனநான் வெளியே போறது தான் நல்லதுன்னு நீங்க நெனைக்கிறீங்க. உங்களுக்கு நல்லதே பண்ண வேண்டும் என்று நினைக்கிற நான், உங்க நினைப்புப்படியே இப்ப கட்சியோட அரசியல் ஆய்வு மையக்குழுவில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் விலகுகிறேன். உங்களோடு வந்ததில் அடைய வேண்டிய இலக்கை தொலைத்து, அடையாளங்களையும் தொலைத்து விட்டேன். கட்சியின் அரசியல் ஆய்வு மையக்குழுவில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment