கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

தமிழகத்தில் ஐய்ந்தான்டு திட்டங்கள் - பேரா. மு. நாகநாதன்


ந்தியாவில் திட்டமிடல் முறையில் பல முற்போக் கான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பொருளாதாரத் திட்டமிடல் என்பது அரசியலும், பொருளாதாரமும் இணைந்த ஓர் இயங்கியல் அணுகு முறையாகும். கடந்த 57 ஆண்டுகளில் திட்டமிடல் முறையில் மாநிலங்களின் பங்கு முதன்மை பெற்று வருகிறது. மாநிலத் திட்டக்குழுவை இந்தியாவிலேயே முதன் முறையாக 1971-ஆம் ஆண்டில், தமிழ் நாட்டின் சமுதாய, பொருளாதாரத் தளத்தில் திட்டமிடல் கொள்கை புதிய உந்துதலைப் பெற்றது. தமிழ் நாடு பல்வேறு துறைகளில் சீரான வளர்ச்சியை எட்டு வதற்கு இது வழிகோலியது.

1920-ஆம் ஆண்டு முதல் நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தே தமிழ்நாடு, சமூகநீதிக் கொள்கையைக் கடைப் பிடித்து, கல்வி, வேலைவாய்ப்புகளில் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. இதன் தொடர்ச்சி யாக, நாடு விடுதலை அடைந்த பின்னரும், வேளாண்மை, தொழில், பணித் துறைகளின் முன்னேற்றத்திற்கும், சமுதாய நலத்திட்டங் கள் சிறப்புற நிறைவேறுவதற்கும் தமிழ்நாடு அரசு திட்டங் களைத் தீட்டி செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது.

பொருளாதார வளர்ச்சியில் எளிய மக்கள் பங்கு பெற்றுப் பயனடைவதில்தான் உண்மையான சமூக, பொருளாதார மாற்றத் தையும், சமத்துவத்தையும் காணமுடியும். இந்த அணுகுமுறையின் அடிப்படையில் பதினோ ராவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் மக்களின் வாழ்வாதாரங்களைப் பெருக்கி, ஏழ்மை, ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அணுகுமுறை அறிக்கையை 2006-ஆம் ஆண்டில் மாநிலத் திட்டக் குழு வெளியிட்டது.

மாநிலத் திட்டக்குழு ஒவ்வொரு வல்லுநர் குழுக்களை அமைத்தது அரசுத் துறைத் தலைவர்கள், வல்லுநர்கள் ஆகியோர்  இக்குழுக்க ளில் இடம்பெற்று, திட்டத்திற் கான கருத்துக்களை வழங்கினர். அனைத்து தரப்பினரின் கருத்துக்களைப் பெற்ற திட்டக் குழுவானது அவற்றை ஆய்ந்து பதினோ ராவது ஐந்தாண்டுத் திட்டத்தை ஒரு "மக்கள் திட்டமாக' வடிவமைத்துள்ளது.

நாட்டின் வளர்ச்சிக் காரணிகளை உரிய முறையில் சீரமைத்து, அனைத்துத் துறை களிலும் உள்ள வேறுபாடு களை நீக்கி, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதே திட்டமிடுதலின்கொள்கைகளும், செயல்பாடுகளும் ஆகும். இந்த உயரிய நெறிகளைப் பின்பற்றி தமிழ்நாடு சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியை அடைவதில் வெற்றி பெற்று வருகிறது. சமூக நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியைக் குறிக் கோளாகக் கொண்ட தமிழகம், நிலையான வளர்ச்சியடைந்து, இந்திய மாநிலங்களுக் கிடையே சமூக- பொருளாதாரத் தளங்களில் முற்போக்கான மாநிலமாகத் திகழ்கிறது. சமூகநீதியின் உயர் நெறியான இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றி, சமூகநலத்துறை களில் பொதுச் செலவைப் பெருக்கி, கடந்த 100 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளும், திட்டங்களும் தமிழ் நாட்டில் இயைந்த வளர்ச்சியை ஊக்குவித்து வருகின்றன. துறைவாரியான வளர்ச்சி நிலை களில் மேம்பாடு காணப்பட்டாலும், சில துறைகளின் வளர்ச்சிப் போக்கில் ஏற்ற இறக்கங்கள் தென்படுகின்றன. நாடு விடுதலை அடைந்த போது, ஒருவேளாண் பொருளாதாரமாக இருந்த தமிழகம், இன்று தொழில், பணித் துறைகளின் முன்னேற்றத்தினால், நவீனப் பொருளாதாரமாகத் திகழ்கிறது வேளாண் துறை சந்திக்கும் எல்லாவித இடர்ப்பாடு களையும் களைந்து, அவ்வப்போது, பருவ மழையின்மை, வெள்ளப் பெருக்கு ஆகிய காரணிகளால், எழுகின்ற சிக்கல்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கான செயல் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும். வேளாண் துறையில் அதிக வளர்ச்சி அடைவதே, ஊரகப் பகுதிகளில் வருமானத்தை அதிகரிப் பதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் உரிய திறவுகோலாகும். மேலும், வேளாண் துறையில் முன்னேற்றமானது, தொழில்நுட்பத்தின் வழியாகவும், விவசாயி களின் மேம்பாட்டு நடவடிக்கைகளை மையமாகக் கொண்டும் அமைந்திடல் வேண்டும். பதினோராவது திட்டக்காலத்தில் தமிழ்நாடு 9 விழுக்காடு வளர்ச்சி அடை வதற்கு இலக்குகள் வகுக்கப் பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிற மனிதவளர்ச்சிக் குறியீடுகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, மாவட்டங்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைய செயல் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும். முக்கியமான பொருளாதாரக் குறியீடுகளைக் கவனிக்கும் பொழுது, பொருளாதார முன்னேற்றம் கடந்த பத்தாண்டுகளில், ஆண்டுதோறும் 5.8 விழுக்காடாகவும், மக்கள்தொகை வளர்ச்சி 0.9 விழுக்காடாகவும், வேலைவாய்ப்பின்மை 1999-2000, 2004-05 ஆகிய ஆண்டுகளுக் கிடையே 0.25 விழுக்காடாகவும் இருந்தது. எனவே, இத்திட்டக்காலத்தில், வேலை வாய்ப்பை ஏற்படுத்து வதிலும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதிலும், ஊரக, நகர்ப்புற மக்களின் வாழ்க்கைநிலையை உயர்த்துவதிலும் புதிய அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

திட்டமானது, நீடித்த, சுற்றுச் சூழல் மேம்பாட்டுடன் கூடிய வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. நீடித்த, சமச்சீரான பொருளாதார வளர்ச்சிக் காரணிகளையும் இணைத்து தமிழ்நாடு மேம்பாடடைவதற்கு ஏற்ப இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பத்தாவது திட்டக்காலத்தில் மாநிலத்தின் பொருளாதார நிலை பொருளாதார வளர்ச்சி பத்தாவது திட்டக் காலத்தில் தமிழ்நாடு, ஆண்டுதோறும் 8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, உண்மை விலையில் (ஏநஉட ண்ய் ழ்ங்ஹப் ற்ங்ழ்ம்ள்) அடையும் என எதிர் பார்க்கப்பட்டது. எனினும் 6.8 விழுக்காடு வளர்ச்சியையே அடைய முடிந்தது. மோசமான பருவநிலை, இயற்கைச் சீரழிவு ஆகியவற்றால் முதன்மைத் துறையின் வளர்ச்சி குறைந்ததே இதற்கு காரணமாகும். பொருளாதாரமானது ஒன்பதாவது திட்டக்காலத்தில் ஆண்டு தோறும் சராசரியாக 4.8 விழுக்காடு வளர்ச்சியையும், பத்தாவது திட்டக் காலத்தில் 6.8 விழுக்காடு வளர்ச்சி யையும் எட்டியது. பத்தாவது திட்டக் காலத்தில் மூன்றாம் துறை 7.7 விழுக்காடு வளர்ச்சி பெற்றது. முதன்மைத் துறை ஆண்டுதோறும் 2.57 விழுக்காடு குறைந்த வளர்ச்சியைப் பெற்றதால் பொருளா தாரத்தில் பின்னடைவு ஏற்பட காரணமாக அமைந்தது. இரண்டாம் துறை 7.5 விழுக்காடு என்ற வளர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது.
தலா வருமானம்
தமிழ்நாடு 2004-05ஆம் ஆண்டு தலா வருமானத்தில், தேசிய அளவில் எட்டாவது இடத்தைப் பிடித்தது. ஒன்பதாவது திட்டக் காலத்தில் எய்திய 3.5 விழுக்காடு வளர்ச்சி யுடன் ஒப்பிடும்பொழுது பத்தாவது திட்டக் காலத்தில் ஆண்டுதோறும் 5.7 விழுக்காடு வளர்ச்சி எய்தப்பட்டுள்ளது.
வேளாண் துறை

வேளாண் துறையானது மாநில, தேசிய அளவில் ஊரக மக்களுக்கான முக்கிய வாழ்வாதாரமாக விளங்குகிறது. வளர்ச்சியில், வேளாண்துறையின் பங்கு கடந்த சில ஆண்டுகளாகக் குறைந் தாலும், பொருளா தாரத்தில் அத்துறை உருவாக்கும் தாக்கத் தைக் குறைத்து மதிப்பிடமுடியாது.
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் வேளாண்மைக்கும் அதன் துணைத் துறைகளுக்கும் 4 விழுக்காடு வளர்ச்சியும், ஆண்டுதோறும் 106.38 இலட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானிய உற்பத்தியும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்கக் காலங்களில் காணப்பட்ட வறட்சி காரணமாக இந்த இலக்கைவிட குறைவான வளர்ச்சியையே அடைய முடிந்தது.

கடுமையான வறட்சி, வெள்ளம், சுனாமி ஆகியவற்றின் காரணமாக பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் கால இலக்கான 106.38 இலட்சம் மெட்ரிக் டன்கள் உணவு உற்பத்தியை அடைய முடியவில்லை. பத்தாவது திட்டக் காலத்தில் சராசரி உணவு தானிய உற்பத்தியானது 63.78 இலட்சம் மெட்ரிக் டன்னாகும். இது ஒன்பதாவது திட்டக் கால உற்பத்தியான 85.33 இலட்சம் மெட்ரிக் டன்னைவிடக் குறைவானதாகும்.

இந்தியாவில், மக்களின் நிலவுடைமை அளவு குறைவாகவுள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். சராசரி நிலவுடைமை 1976-77இல் 1.25 எக்டேராக இருந்தது. தற்போது 1 எக்டேராகக் குறைந்துள்ளது. மேலும் 59 ஆவது தேசிய மாதிரி ஆய்வான ""விவசாய குடும்பங் கள் கடன்படுதல் மூலம் விவசாய குடும்பங்கள் அதிகளவு கடன்பட்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு சிறு-குறு விவசாயிகளின் தனித்தன்மை வாய்ந்த, நலிவுற்ற நிலையை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.
தொழில் துறை

பத்தாவது திட்டக் காலத்தில் இரண்டாம் துறையின் இலக்கு 7.12 விழுக்காடாக இருந்த போதிலும், இத்துறை ஆண்டுதோறும் 7.5 விழுக்காடு வளர்ச்சியை எட்டியது. இது ஒன்பதா வது திட்ட காலத்தில்
அடைந்த வளர்ச்சி வீத மான 2.15 விழுக்காட் டைக் காட்டிலும் குறிப் பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இரண்டாம் துறையின் உற்பத்தித் துறை வளர்ச்சி வீதமானது 8.19 விழுக்காடாகவும், கட்டுமானத் துறையின் வளர்ச்சி வீதம் 6.4 விழுக்காடாகவும் உள்ளது.

இத்தொழில்களின் வளர்ச்சி ஆற்றலைப் போற்றி வளர்த்தெடுப்பது பதினோராவது திட்டக் காலத்திலும் தொடரவேண்டும். பதிவு செய்யப்படாத தொழில் உற்பத்தி துறை ஒப்பீட்டளவில் அதிக வளர்ச்சி பெற்று வரினும், உள்கட்டமைப்பு வசதிகள், கடன், தொழில்நுட்பம் ஆகியவை போதிய அளவு கிடைக்காத காரணத்தால், இத்துறை பிரச்சினைகளைச் சந்தித்து வரும் நிலைமை உள்ளது. இத்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால் அதைக் களைய உரிய நடவடிக்கைகளைப் பதினோராவது திட்டக் காலத்தில் மேற்கொள்ள வேண்டும்.


பணித்துறை பத்தாவது திட்டக் காலத்தில் மூன்றாம் துறையின் வளர்ச்சி இலக்கு 9.77 விழுக் காடாக நிர்ணயிக்கப்பட்டது. திட்டக் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எய்த முடியாவிட்டாலும், பொருளாதாரத்தில் இத்துறை பெரும் தாக்கத்தை சந்தேகத்திற் கிடமின்றி ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் துறையானது வேகமாக வளரும் துறையாகும். ஒன்பதாவது திட்டக் காலத்தில் எய்தப்பட்ட 6.98 விழுக் காடு வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது பத்தாவது திட்டக் காலத்தில் 7.72 விழுக்காடு வளர்ச்சி எய்தப்பட்டது. 2004-05-இல் உயர்ந்த அளவான 11.62 விழுக்காட்டை எட்டியது. பணித்துறையின் வளர்ச்சிக்கு காரணமான அதன் உட் பிரிவான தகவல் தொடர்பில் 14.8 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது. பணித்துறையின் வளர்ச்சியானது மாநிலப் பொருளாதாரத்தின் அமைப்பு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கணினி மென்பொருள், வன்பொருள் உற்பத்தியில் தமிழ்நாடு நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2005-06 இல் ரூ.14,115 கோடி அளவுக் குத் தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி செய்துள்ளது. இதன் அளவு 2006-07இல் ரூ.20,700 கோடியாக உயர்ந்துள் ளது. இத்துறையினால் வேலை வாய்ப்பு பெருகுவதால் இதன் வளர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. எனினும், வேளாண்மை சாராத துறை வளர்ச்சியின் விளைவாக ஊர்ப் புறங்களில் இருந்து பெரிய நகரங் களுக்குத் தொழி லாளர்கள் பெருமள வில் வருவதை வேளாண்மை சாராத துறையை அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக்கச் செய்வ தன் வாயிலாகவும், நகர்ப்புறத்திற்கு நல்ல குடிமை வசதிகளை அளிப்பதன் வாயிலாகவும் எதிர்கொள்ள இயலும்.

மக்கள்தொகை வளர்ச்சி


மாநிலத்தின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டு 6.24 கோடியாக உள்ளது. கடந்த பத்தாண்டுக் காலத்தில் இதன் வளர்ச்சி வீதம் 11.72 விழுக்காடாகும். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இந்த வளர்ச்சி வீதத்தை 11.72 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக 2011-ஆம் ஆண்டில் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் கணிக்கப் பட்ட மக்கள் தொகை விவரப்படி பதினோராவது திட்ட இறுதியில் மக்கள் தொகையானது 6.79 கோடியாக இருக்கும் எனத்தெரிகிறது. இதன்படி 2001இலிருந்து 2012 வரை வளர்ச்சி வீதம் 8.7 விழுக்காடு ஆக இருக்கும். இந்த கணிப்பின்படி ஊர்ப்புறங் களில் மக்கள் தொகை 13.4 விழுக்காடு குறைந்தும், நகரப் பகுதிகளில் 37 விழுக்காடு அதிகரித்தும் காணப்படும்.


உள்கட்டமைப்பு


தமிழகத்தில் சாலைவசதியானது 1,88,700 கி.மீ உள்ளது. மேலும் சாலை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தற்போது முன்னணி வகிக்கிறது. மாநிலத்தில் சாலை அடர்த்தியானது ஒரு இலட்சம் மக்கட்தொகைக்கு 286 கி.மீ. எனவும், 100 ச.கி.மீட்டருக்கு 137 கி.மீ. எனவும் உள்ளது. இது தேசிய அளவில் முறையே 258 கி.மீ., 75 கி.மீ.ஆக உள்ளது. பத்தாவது திட்டக் காலத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள குடியிருப்புகள் அனைத் திற்கும் அனைத்து பருவங்களுக் கும் ஏற்ற சாலைகள் அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.


பத்தாவது திட்டக் காலத்தில், மின்சாரம், சாலை, தொலைபேசி, இணையதளம், பள்ளி, தூய்மையான நீர், துப்புரவு வசதிகளை 2010ஆம் ஆண்டுக்குள் ஏற்படுத்தித் தர திட்டமிடப்பட்டது. பழைய வரையறைப்படி அனைத்து ஊர்ப்புறங்களும் மின்சார வசதி பெற்றுள்ளன. மேலும், தமிழகத்தின் அனைத்து ஊர்ப்புறங்களும் கிராம பொது தொலைபேசி வசதி பெற்றுள்ளன.


குடிநீர்

பத்தாவது திட்டத்தில் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கத் திட்டமிடப்பட்டது. மாநிலத்தில் ஊர்ப்புறங் களில் ஒரு நாளைக்கு ஒருவருக்கு 40 லிட்டர் வழங்க முன்னுரிமை தரப்பட்டது. எனினும், 2006 செப்டம்பரில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 86981 ஊர்ப்புறக் குடியிருப்புகளில் 50529 குடியிருப்புகளுக்கு மட்டுமே முழுமையான குடிநீர் வழங்கப் பட்டது. (40 டஸ்ரீக், அதற்கு மேல்), 35241 குடியிருப்புகளுக்கு பகுதியளவே வழங்கப் பட்டது. 1211 குடியிருப்புகளுக்கு குறைந்த அளவு குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டது. குடிநீர் வழங்கல் வசதியினை அடிப்படை யாகக் கொண்டு நகரங்கள் நன்று, சராசரி, தாழ்வு என தரம் பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் சென்னை மாநகராட்சி நீங்கலாக 718 நகர உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. அவற்றில் 382 நன்று எனவும், 307 சராசரி எனவும் 29 தாழ்வு எனவும் தரம் பிரிக்கப் பட்டுள்ளன.

காடுகள்


2012-ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 25 விழுக்காடு காடுகள் நிறைந்த நிலப்பரப்பாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2006இல் 22877 சதுர கிலோமீட்டர் பரப்பு மாநிலத்தின் காடுகளாக இருக்கின்றன. இது மொத்த நிலப்பரப்பில் 17.59 விழுக்காடாகும். இருப்பினும் 2003-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட காடுகள் பற்றிய கணக்கெடுப்பின்படி காடுகள், மரங்கள் சூழ்ந்தபகுதி, மொத்த நிலப்பரப்பில் 21.25 விழுக்காடாக உள்ளது.


முதலீடு


பத்தாவது திட்ட காலத்திற்கான முதலீடு ரூ.2,62,502 கோடி என மதிப்பிடப்பட்டது. அதில் மாநிலம் ரூ.40,000 கோடியை மாநில நிதியிலிருந்தும், ரூ.48,000 கோடியை மத்திய நிதியிலிருந்தும் பெற வேண்டியிருந்தது. எனவே, மாநிலம் மீதமுள்ள ரூ.1,74,502 கோடிக்கு தனியார் முதலீட்டையும், வெளி நாட்டு நேரடி முதலீட்டையும் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இதில் மாநிலத் திட்ட ஒதுக்கீடான ரூ.40,000 கோடியில் ரூ.37,689.79 கோடி வரவு, செலவுத் திட்டத்தில் (உண்மை நிலையில்) ஒதுக்கப்பட்டது. இது 94.22 விழுக்காடாகும்.


நிதிச் செயற்பாடு


பத்தாவது திட்டக் காலத்தில் தமிழகத்தின் திட்ட ஒதுக்கீடு ரூ.40000 கோடியாக, 2001-02ஆம் ஆண்டு விலையில் நிர்ண யிக்கப்பட்டது. மாநிலம் நடப்பு விலையில் திட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக செலவு செய்துள்ளது. ஆனால் 2001-02 விலையில் 94.2 விழுக்காடு மட்டுமே செலவு செய்ய முடிந்தது.


பத்தாவது திட்டக்காலத்தில் குடிநீர் வழங்கல், வீட்டு வசதி, நகர மேம்பாடு கல்வி, உடல்நலம் ஆகிய சமூகப் பணிகளுக்கு முன்னுரிமை தந்து 33 விழுக்காடு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சாரம், சாலை, போக்குவரத்து முதலான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு 38 விழுக்காடும், வேளாண்மை, ஊரக மேம்பாட்டிற்கு 26 விழுக்காடும் ஒதுக்கப்பட்டது. பத்தாவது திட்டக் கால வருவாய் வரவில் செயலாக்கத்தின்போது உள்கட்டமைப்புக்கு வழங்கப்பட்ட முன்னுரி மையில் சிறிய அளவில் மாற்றம் அடைந்து சமூக நலத்திற்கு முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது.


நிதி ஆதாரங்கள்


தமிழ்நாட்டின் நீடித்தப் பொருளாதார வளர்ச்சிக்காக பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு, ரூபாய் 85344 கோடி நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத் தொகை பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட நிதி ஒதுக்கீடான ரூபாய் 40000 கோடியை விட இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.


இந்த திட்டநிதி ஒதுக்கீடு கீழ்க்காணும் இனங்களின் அடிப்படையில் அமையும். 1) மாநிலத்தின் சொந்த நிதியாதாரத்திலிருந்து திரட்டப்படும் நிதியளவு ரூ.17498.78 கோடியாகும். 2) நடுவண் அரசின் நிதியுதவி ரூ.15873.19 கோடியாகும். 3) மாநிலம் எழுப்பும் கடன் வழியாக பெறப்படும் நிதி ரூ.55708.50 கோடியாகும். 4) மாநில பொதுத்துறை நிறுவனங்களின் எதிர்மறை பங்களிப்பு ரூ. 5336.47 கோடி. 5) உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு ரூ.1600 கோடி. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 2006-07-ஆம் ஆண்டு விலைகளின் அடிப்படையில் மொத்த முதலீடு ரூ.649330 கோடியாகும். இத் தொகையில் மாநிலத்தின் முதலீடு ரூ.85344 கோடியாகும். பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் நடுவண் அரசுத் துறைகளின் முதலீடு ரூ.128935 கோடியாக இருக்கும். இத்தொகை பத்தாவது ஐந் தாண் டுத் திட்டத்தின் மதிப்பீடான 18 விழுக்காட்டை விட அதிகரித்து 20 விழுக்காடாக அமையும். இந்த மொத்த முதலீட்டுத் தொகையில் தனியார் துறையின் பங்களிப்பு ரூ.435051 கோடியாக இருக்கும். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தனியார் முதலீட் டின் பங்களிப்பான 66 விழுக் காட்டைவிட, ஒரு விழுக்காடு உயர்ந்து, பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் மொத்த முதலீட்டில் தனியார் துறையின் பங்களிப்பு 67 விழுக்காடாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

நன்றி : நக்கீரன் பொதுஅறிவு உலகம்

No comments:

Post a Comment