கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

29 நூல்களுக்கு பரிசு - தமிழக அரசு அறிவிப்பு


சிறந்து நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் 29 நூல்கள், நூலாசிரியர்கள், பதிப்பகங்களுக்கு தலா ரூ.20000 பரிசு தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை 10.01.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நூல்கள், நூலாசிரியர்கள், பதிப்பகங்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த நூல்களுக்கு தலா ரூ.20000, பதிப்பகங்களுக்கு தலா ரூ.5000 பரிசு வழங்கப்படுகிறது.
இதன்படி இந்த ஆண்டு மரபுக் கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், திறனாய்வு, மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம், பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள், நுண்கலைகள் உள்ளிட்ட 29 தலைப்புகளில் எழுதப்பட்ட நூல்களுக்கு தலா ரூ,20000 பரிசு வழங்கப்படுகிறது. சுற்றுப்புறவியல், வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம் ஆகிய வகைப்பாட்டில் தலா ஒரு புத்தகம் மட்டும் வரப்பெற்றதால் மேற்கண்ட புத்தகங்களுக்கு பரிசு அறிவிக்கப்படவில்லை.

இந்த ஆண்டு பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நூலான பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் மொழிபெயர்த்த கடவுள் ஒரு பொய் நம்பிக்கை எனும் நூலுக்கு ரூ.20,000 பரிசும், அந்நூலை வெளியிட்ட திரா விடர் கழகத்திற்கு ரூ.5000 பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முனைவர் இரா.மணியன் எழுதிய பெரியார் காவியம் எனும் மரபுக் கவிதை நூலுக் கும், முனைவர் ந.க.மங்கள முருகேசன் எழுதிய தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை எனும் நூலுக்கும்,

க.திருநாவுக் கரசின் நீதிக்கட்சி வரலாறு (தொகுதி 1 மற்றும் 2) எனும் நூலுக்கும்,

சுப.வீரபாண்டி யனின் ஒன்றே சொல் நன்றே சொல் (3 தொகுதிகள்) எனும் நூலுக்கும்

தலா ரூ. 20,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் 16.1.2011 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ள தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் கலைஞர் பரிசுகளை வழங்குவார்

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment