தனது நற்பெயருக்கும், அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதாக ஜூனியர் விகடன் இதழ் மீது முதல்வர் கருணா நிதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி சார்பில் மாநகர அரசு வக் கீல் ஷாஜகான், சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2010 ஜூலை 21ம் தேதி வெளிவந்த ஜூனியர் விகடன் இதழில் ‘உடைந்தது தண்டவாளம்... உடைகிறது வண்டவாளம்’ என்ற தலைப் பில் ஒரு செய்திக் கட்டுரை வெளிவந்துள்ளது. இந்த கட்டுரையில், விழுப்புரம் அருகே உள்ள சித்தணி கிராமத்தில் தண்டவாளம் வெடி குண்டு வைத்தது தொடர் பாக குறிப்பிட்டதுடன், சம்பவம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதல் வர் கருணாநிதியை வேண்டுமென்றே குற்றம் சாட்டியும் எழுதப்பட்டிருந்தது.
இந்த செய்தி முதல்வரின் நற்பெயருக்கும் தமிழக அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி, தமிழக மக்களிடம் மிகுந்து மதிப்பும் மரியாதையையும் பெற்றுள்ளவர். சிறந்த நிர்வாகத் திறமை உள்ளவர். அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த செய்திக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியைப் படித்த முதல்வரின் நண்பர்கள், அவரிடம் விசாரித்துள்ளனர்.
எனவே, உள்நோக்கம் கற்பித்து வெளியிடப்பட்டுள்ள இந்த கட்டுரையை எழுதியவர் (இரா.சரவ ணன்), ஜூனியர் விகடன் ஆசிரியர் (கே.அசோகன்) மற்றும் பதிப்பாளர்(பி.சீனிவாசன்) ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499, 500, 501 (அவதூறு ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களை தண்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் 06.01.2011 அன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று உத்தரவிட்டு வழக்கை வரும் 10ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment