நம் வீடுகளில் தாய்மார்கள் நிறைய பாத்திரங்களை அடுக்கி வைத்திருப்பார்கள். இது காஞ்சியில் வாங்கியது; இது திருவண்ணாமலையில் வாங்கியது; இது மதுரையில் வாங்கியது என்று பெரிய கதையாகச் சொல்லு வார்கள். அதைப் போலச் சொல் லக் கூடிய அளவில் வீட்டுக்கு வீடு புத்தகங்களை வாங்கி வைத் திருக்க வேண்டும்.
செங்கல்லை அடுக்க அடுக்கத்தான் கட்டடம் வளரும். படிக்கப் படிக்கத்தான் திறமை வளரும். படிப் பின்றித் திறமை இல்லை. படிக்காமலும் திறமை உண்டு. இயற்கை அறிவின் அனுபவத்தால், படித்தேன். திறமை இல்லை என்று யாரும் சொல்லுவதில்லை.
மலர்த் தோட்டத்தில் உள்ள வாச மலர்களின் மணம் தோட்டக்காரனுக்கு மட்டுமல்லாது அந்தத் தோட் டத்தின் அருகிலுள்ள வட்டாரத்தில் உள்ளவர்களுக் கெல்லாம் நறுமணம் வீசுவது போல, மன்றங் களும் படிப்பகங்களும் நாட்டிற்கு நல்ல தமிழ் மணம் பரப்ப வேண்டும்.
பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அங்கே உள்ள நூலகத்திற்குச் சென்று தினமும் புத்தகங்களைப் படிப்பவர்கள். நானும் முத்தையாவும் தான். ஆனால், முத்தையா நிறைய புத்தகங்களைப் படிப்பார். சிறிதளவே புரிந்து கொள்வார். அதன்பின் எதையுமே கூறமாட்டார். பின்னர் அவர் கல்லூரிப் பேராசிரிய ராகிவிட்டார்.
வீட்டிற்கோர் புத்தகச்சாலை
நிச்சயமாக வேண்டும். வாழ்க்கையில்
அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம்
அலங்காரப் பொருள்களுக்கும்,
போகபோக்கியப் பொருள்களுக்கும்
தரப்படும் நிலைமாறி, புத்தகச் சாலைக்கும்
அந்த இடம் தரப்பட வேண்டும். உணவு,
உடை, அடிப்படைத் தேவை_ அந்தத்
தேவையைப் பூர்த்தி செய்தானதும்,
ஒவ்வொரு வீட்டிலும் முதல் இடம் புத்தகச்
சாலைக்குத் தரப்பட வேண்டும்.
- அறிஞர் அண்ணா
No comments:
Post a Comment