கடந்த 7ஆம் தேதி ஆளுநர் உரை நிகழ்த்தும்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேருக்கு விதித்த தண்டனை குறைக்கப்பட்டு மீண்டும் அவர்கள் 12.01.2011 முதல் சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள் ளலாம் என முதலமைச்சர் கலைஞரின் கோரிக் கையை ஏற்று, சட்டப் பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் அறிவித்தார்.
11.1.2011 அன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்தவுடன் அதிமுக சட்டமன்றக் கட்சி துணைத் தலைவர் ஒ.பன்னீர்செல்வம் எழுந்து எங்கள் கட்சியைச் சேர்ந்த 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட தண்ட னையை நீக்கி அவர்கள் மீண்டும் ஜனநாயகக் கடமையாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும் என பேரவைத் தலைவருக்கு கோரிக்கை விடுத்தார்.
அதைப்போன்று இந்திய மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் நன்மாறன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சிவ.புண்ணியம் ஆகியோரும் நீக்கி வைக்கப்பட்டுள்ள 9 அதிமுக சட்டமன்ற உறுப் பினர்களும் மீண்டும் சட்டமன்றத்திற்கு வந்து ஜனநாயகக் கடமையை ஆற்ற வழிவகை செய்யப் பட வேண்டும் என்று பேரவைத் தலைவருக்கும் முதல்வர் கலைஞருக்கும் வேண்டுகோள் விடுத் தனர்.
மு.க.ஸ்டாலின் தீர்மானம்
இதையடுத்து முதலமைச்சர் கலைஞரின் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி ஆளுநர் உரையின்போது ஒழுங்கீன மாக நடந்து கொண்ட 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 10.1.2011 அன்று வழங்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டு மீண்டும் அவர்கள் சட்டமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
அதை ஏற்று அத்தீர்மானம் அவையின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி 10.1.2011 அன்று வழங்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டு கீழ்க்காணும் அதிமுக உறுப்பினர்கள் பொள்ளாச்சி வீ.ஜெயராமன், கோ.ஹரி, கு.பாண்டுரங்கன், சு.ப.வேலுமணி, டி.ஜெயக்குமார், எல்.ரவிச்சந்திரன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வே.செந்தில் பாலாஜி, சி.வி.சண்முகம் ஆகியோர் 12.1.2011 அன்று முதல் அவைக்கு வரலாம் என உத்தரவிடுகிறேன் என்று சட்டபேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் அறிவித்தார்.
No comments:
Post a Comment