கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 23, 2011

கலைஞர் - பிரணாப் முகர்ஜி சந்திப்புமுதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று (23.01.2011) காலை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவும் உடனிருந்தார். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது. இச்சந்திப்பில் முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக மீனவர்களை சுடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: இலங்கை அரசுக்கு பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை!

த்திரிகையாளர்: தமிழக முதலமைச் சரைச் சந்தித்ததன் நோக்கம் என்ன?

பிரணாப் முகர்ஜி: நான் சென்னைக்கு அலுவல் நிமித்தம் காரணமாக வந்தேன். காலையில் அதற்கு முன்பாக எனக்கு நேரம் கிடைத்த காரணத்தால், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்று விரும்பினேன். இந்திய அரசியலில் மூத்த தலைவரான அவரை மரியாதை நிமித்தமாக நான் சந்தித்தேன்.

இந்தச் சந்திப்பின்போது, முதல்வர் அவர்கள் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து என்னிடம் கவலை தெரிவித் தார். மேலும், கடந்த 10 நாள் களில் 2 மீனவர்கள் கொல்லப் பட்டதாகவும், அதன் காரண மாக தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும், எனவே அதனைத் தடுக்க உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண் டுமென்றும் என்னிடம் கேட்டுக் கொண் டார்.

நாம் இலங்கை அரசோடு நல்ல நட்புறவு கொண்டுள்ளோம். நாம் அவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் வேளையில், அவர் கள் இதுபோன்ற தாக்கு தல்களில் ஈடுபடுவதை நாம் நியாயப்படுத்த முடியாது. மீனவர்கள் தவறு செய்திருந்தால், அவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண் டுமே தவிர, இம்மாதிரியான கட்டுக் கொல் லும் சம்பவங்களில் அவர்கள் ஈடுபடக் கூடாது. எனவே, இந்திய வெளி யுறவுத் துறையின்மூலம், இலங்கை அரசோடு பேசி, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழா வண்ணம் உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்படும் என்று நான் முதலமைச்சரிடம் உறுதி அளித்திருக் கிறேன்

இவ்வாறு பிரணாப் கூறினார்.No comments:

Post a Comment