

திருச்சி பெரியார் மாளிகைக்கு 08.01.2011 அன்று கவிஞர் கனிமொழி வந்தார். அண்ணா அவர்கள் முதலமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்பு, சென்னையி லிருந்து நேராக கலைஞர், நாவலர் ஆகியோருடன் திருச்சி பெரியார் மாளிகைக்கு வந்து எங்களை வழிநடத்துங்கள் என்று கூறி, பெரியாரின் வாழ்த்தை பெற்ற இடமான திருச்சி பெரியார் மாளிகையில் -அப்படி சந்தித்த இடத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், திருமதி கனிமொழி அவர்களுக்கு அன்புடன் விளக்கினார். வரலாற்றுக் குறிப்பில் இடம் பெற்ற இவ்விடத்தை கனிமொழி ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தார்.
பின்னர் பெரியாரின் ஆங்கில நூலை கவிஞர் கனிமொழிக்கு வழங்கினார். உடன் பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர்கள் டாக்டர் சோம. இளங்கோவன், டாக்டர் இலக்குவன் தமிழ் மற்றும் பலர் உள்ளனர்
No comments:
Post a Comment