கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, January 21, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றிய தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெறும் மாயத்தோற்றமானது - திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா


2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல், 1999 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறைப்படி தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் திரு. ஆ. இராசா ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடித்ததால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு விட்டது என்று இந்திய தலைமைத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்திருந்ததை அடுத்து, எதிர்க் கட்சிகளும், ஊடகங்களும் இப்பிரச்சினையைப் பெரிதாக்கி நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகளையே 23 நாட்களுக்கு முடக்கி வைத்து விட்டனர். மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவராக உள்ள திரு. மாண்டேக்சிங் அலுவாலியா சிஎன்என்-அய்.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தலைமைத் தணிக்கை அதிகாரி இழப்பைக் கணக்கிட்டு இருப்பது வெறும் மாயத்தோற்றம் என்று கூறியுள்ளார். மேலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் சுவான், யுனிடெக் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டிவிட்டதாக குற்றம் சாற்றிய நிலையில், இது முற்றிலும் தவறானது என்றும், அந்நிறுவனங்களின் புதிய பங்குகள் வெளியிடப்பட்டதால் கிடைத்த அந்தப் பணம் அந்நிறுவனத்தின் லாபமல்ல. புதிதாக உருவான நிறுவனம் தொலைத் தொடர்புச் சேவையை அளிப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான செலவுக்கான பணமே அது என்றும் உறுதிபடக் கூறியுள்ளார்.
திரு. மாண்டேக்சிங் அலுவாலியா ஓர் அரசியல் வாதியல்ல. பொருளாதார வல்லுநரான அவர், உலகம் முழுவதும் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடும் நடைமுறைக்கு எதிரான கருத்தே நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பேட்டியின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது:


CNN-IBN தொலைக்காட்சியைச் சேர்ந்த கரண் தாபர் மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாவை பேட்டி கண்டார். இந்தப் பேட்டியின் தமிழாக்கம் வருமாறு:

கரண் தாபர்: 2ஜி ஸ்பெக்ட்ரம் பற்றிய தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் இருந்து நாம் தொடங்கலாம். அரசுக்கு ஏற்பட்ட உத்தேசமான இழப்பு 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கு இருக்கலாம் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இது முற்றிலும் தவறானது என்றும், அரசுக்கு எந்தவித இழப்புமே ஏற்படவில்லை என்றும் கபில் சிபல் கூறுகிறார். திட்டக்குழுவின் துணைத் தலைவராக நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற கணக்கு வெறும் மாயத் தோற்றமே

மாண்டேக்சிங் அலுவாலியா: இந்தப் பிரச்சினையை நான் ஆராய்ந்து பார்த்தேன். இதில் மிக அதிக அளவிலான குழப்பம் நிலவுவ தாக நான் கருதுகிறேன். அரசுக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற கருத்தினால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உண்மையில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதா? இரண்டாவது கேள்வி வருவாயைப் பெருக்கும் முயற்சியை நீங்கள் மேற்கொண்டிருந் தீர்களா என்பது. இந்த இரண்டு கேள்விகளையும் நீங்கள் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

எனது சொந்தக் கருத்து என்னவென்றால், இந்த ரூ.1.76 லட்சம் கோடி என்பது வெறும் மாயத் தோற்றமான கணக்கு என்பது தான். அது எப்படி மாயத் தோற்ற மான கணக்கு என்பதை கபிலே விளக்கியுள்ளார். மூன்று ஆண்டு களுக்குப் பிறகு ஏலம் விடப்பட்ட 3ஜி ஸ்பெக்ட்ரத்தை அடிப்படையாகக் கொண்டு அத்துடன், 2ஜி ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டை ஒப்பிட இயலாது.

கரண் தாபர்: நான் உங்களைக் கேட்கிறேன். 1.76 லட்சம் கோடி என்ற கணக்கு தவறானதாக இருந்தாலும், சிறிய அளவிலாவது இழப்பு இருந் திருக்கலாம் அல்லவா?

வருவாயை மட்டும் உச்ச அளவுக்கு உயர்த்த விரும்பினால், நுகர்வோர் பயன்களின் இழப்பு 10 மடங்காக இருக்கும்

மாண்டேக்சிங் அலுவாலியா: அது ஒரு நல்ல கேள்வி. இந்தக் கேள்விக்குள் செல்வது பயன்நிறைந்தது அல்ல என்பது எனது கருத்து என்பதை இங்கு நீங்களும் அறிவீர்கள். X பணத்தை நம்மால் திரட்டிஇருக்க முடியுமா? 1999 முதல் வடிவமைக்கப்பட்ட தொலைத் தொடர்புக் கொள்கை முழுவதிலும், உச்சபட்ச வருவாயை ஈட்டுவது நோக்கமாக இருக்க வில்லை. உங்களுக்கு அளித்த பேட்டியில் இதனை கபில் விவரித் துள்ளார் என்று நான் நினைக் கிறேன்.

ஒரு மாறுபட்ட விலை நிர்ணயக்கப்பட்டிருந்தால் அல்லது மாறுபட்ட வகையான ஏல நடைமுறை மேற்கொள்ளப் பட்டிருந்தால், நீங்கள் கூடுதலான வருவாயை ஈட்டி இருக்க முடியும் என்ற உங்களின் ஊகத்தின் அடிப்படையில் கணக்கிடுவதுடன், போட்டி விலையில் தொலை தொடர்புச் சேவை குறைந்த அளவில் பரவுவதன் மூலம் நீங்கள் இழக்கும் பயனை எடை போட்டுப் பார்க்க வேண்டும்.

அந்த வழியில் பெறப்பட்ட பயன் மிகப் பெரிய அளவிலானது. மற்ற நாடுகளில் பெருமளவு வேலை செய்யப்பட்டுள்ளது; நாம் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். வருவாயை நீங்கள் உயர்த்த முயற்சித்தால், அதனால் ஏற்படும் நுகர்வோர் பயன்களின் இழப்பு, நீங்கள் ஈட்டும் வருவாயைப் போன்று பத்து மடங்காக இருக்கும் என்று அமெரிக்க மக்கள் மதிப்பிட்டி ருப்பதை எடுத்துக் காட்டாகக் கொள்ள லாம். அதுதான் வழிகாட்டும் கொள்கை எனப்படுவது.
கரண் தாபர்: அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், ஆனால் நுகர்வோருக்குக் கிடைத்த பயன்களி னால் அது பெரிய அளவில் சரி செய்யப் பட்டுவிட்டது என்றும், அதன் விளைவாக தொலைபேசியின் அடர்த்தி அதிகமாகி நாட்டுக்குப் பயன் விளைந்துள்ளது என்பதாக நீங்கள் கூறியதற்கு நான் விளக்கம் அளித்துக்கொள்ளலாமா?

மாண்டேக்சிங் அலுவாலியா: இல்லை. இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நான் சொல்லவில்லை. வருவாயை உச்சஅளவுக்கு உயர்த்துவது என்ற நடைமுறையை நாம் பின்பற்றியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நாம் கணக்கிடவில்லை என்றுதான் நான் கூறுகிறேன். இதை நீங்கள் செய்தால், தலைமைத் தணிக்கை அதிகாரி செய்தது, எனது கருத்தில், சரியான வழியில் செய்யப்பட்டது அல்ல என்று கூறுவேன்.

கரண் தாபர்: தணிக்கை அறிக்கை யின் கடைசிப் பகுதியை நான் குறிப் பிட்டுக் கூறட்டுமா: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்ற உண்மையை மறுக்க முடியாது.

மாண்டேக்சிங் அலுவாலியா: நல்லது. முதலில் இது தரம் சார்ந்த ஓர் அறிக்கை. வருவாயை உயர்த்த நீங்கள் விரும்பியிருந்தால், பூஜ்யத்துக்கு மேலான வருவாயை உங்களால் ஈட்டி இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை என்று நான் கூறுவேன். அரசின் நிலை இதில் என்னவென்று எனக்குத் தெரியவில்லை; ஆனால் வருவாயை உயர்த்த நாங்கள் முயற்சிக்கவில்லை.
கரண் தாபர்: அப்படியானால், வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக இழப்பை ஏற்றுக் கொள்ள ஆழ்ந்த ஆய்வுக்குப் பிறகு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்.
மாண்டேக்சிங் அலுவாலியா: மற்ற நூற்றுக் கணக்கான விஷயங்களில் நாம் இதனைத்தான் செய்கிறோம். தொலைத்தொடர்பு என்பது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில் நுட்பம் என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்டது என்பதை நீங்களும் அறிவீர்கள். மற்ற பொருளாதார வளர்ச்சிக்கு அது பெரும் பயன்களை அளிப்பதாகும். என்னை முடிக்க அனுமதியுங்கள்.

கணக் கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது, ஏலத்தின் மூலம் கிடைக்காமல் போன வருவாய் இழப்பு என்பது அல்ல. அரசின் கருவூலத்தின் மீது அது ஏற்படுத்தும் மொத்த வருவாய் தாக்கத்தைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அலைவரிசைகளை நீங்கள் ஏலம் விடாமல் இருந்தால், தொலைத் தொடர்புச் சேவைகள், ஏலம் விடும்போது ஏற்படு வதை விட மிக விரைவாக விரிவடையும். ஏலம் விடாததால் நீங்கள் எதை இழந் தீர்களோ, அதை வருவாய்ப் பங்கீட்டில் நீங்கள் பெறக்கூடும். அது தலைமைத் தணிக்கை அலுவலரால் கணக்கிடப் படவில்லை.

கரண் தாபர்: இவை இரண்டு பற்றியும் ஒன்றன் பின் ஒன்றாக நான் கேட்க விரும்புகிறேன். அரசுக் கருவூலத் தின் மீது ஏற்பட்ட மொத்த வருவாய்த் தாக்கத்தைப் பற்றி முதலில் கேட்க விரும்புகிறேன். எந்த வகையான இழப்பும் அரசுக்கு ஏற்படவில்லை என்று கபில் சிபல் சொன்னது சரியானதாக இருந் தால், எந்த வகையான இழப்பும் ஏற்பட வில்லை என்று கூறும்போது, சுவான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள் ஸ்பெக்ட் ரம் உரிமம் பெற்ற சில வார காலத்தில், சேவையைத் தொடங்காததற்கு முன்பா கவே 200 கோடி ரூபாய்க்கும் மேலாக பெரும் லாபம் ஈட்டியுள்ளன என்பது பற்றி என்ன கூறுவீர்கள்?

நுகர்வோருக்குக் கிடைத்த பயன்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் இழப்பு என்பது எதுவுமே இருக்காது

மாண்டேக்சிங் அலுவாலியா: இல்லை, இல்லை. நான் அந்தப் பேட் டியைப் பார்த்தேன். நீங்கள் இருவருமே நன்றாக செய்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். எந்த இழப்பும் அரசுக் கருவூலத்துக்கு ஏற்படவில்லை என்று கபில் கூறியபோது, இழப்பு என்று கூறப்படுவதை, நாட்டில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பயன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார்.

பயன்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இழப்பு என்பது எதுவுமே இருக்காது என்ற முறை யில் அவர் கூறியதை நான் படித்தேன். ஆனால் ஏலம் விடும் நடைமுறை மீதே நாம் கவனம் செலுத்தி வந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

கரண் தாபர்: இந்த இடத்தில் நான் குறுக்கிடலாமா? அரசின் கருவூலத்துக்கு ஏற்பட்ட இழப்பை, பெறப்பட்ட பயன் களுக்கு எதிராக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறுவ தால், கபில் சிபிலின் அதிகாரபூர்வமான பத்திரிகை அறிக்கையில் இருந்து நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பொது மக்களுக்கு அதிக அளவு நன்மை செய் யும் நோக்கத்துடன் வடிவமைக்கப் பட்டது 2ஜி தொலைத் தொடர்புக் கொள்கையே அன்றி, உச்சகட்ட வருவாயை உருவாக்கும் நோக் கத்தைக் கொண்டது அல்ல. குறைந்த விலையில் 2ஜி விற்கப்பட்டதன் பயன் நுகர்வோருக்குச் செல்லவில்லை என்பதுதான் இந்த விவகாரத்தில் உள்ள உண்மையாகும். சுவான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள் தங்கள் நிறுவனப் பங்குகளை ஒரு பெரும் லாபத்துடன் அயல்நாட்டினருக்கு விற்றதன் மூலம் பெரும் பயன் பெற்றுள் ளனர். எனவே நான் திரும்பவும் அதற்கு வருகிறேன். அந்த நிறுவனங் கள் எந்த அளவுக்கு லாபம் சம்பாதித் துள்ளனவோ, அந்த அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக் கிறது என்று கூறலாமே.

சுவான், யுனிடெக் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டின என்ற கருத்து முற்றிலும் தவறானது
மாண்டேக்சிங் அலுவாலியா: நல்லது. இந்தக் கருத்தை விளக்க நான் முயல்கிறேன். இது மிகவும் பரவலாகப் பேசப்பட்டது. இதில் பொது மக்களுக்கு ஓரளவுக்குத் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று நான் கருதுகிறேன். சுவான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள் புதிய ஈக்குவிடி பங்குகளை வெளியிட்டுள் ளன என்பதோ, அவற்றிடம் ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீடு இருக்கிறது என்பதால் இந்த அயல்நாட்டுக் கம்பெனிகள் இந்த ஈக்குவிடி பங்குகளை வாங்கியுள்ளன என்பதோ முற்றிலும் உண்மையானது. இந்தப் பணம் நிறுவனத்தைத் தொடங் கியவர்களுக்குச் செல்ல வில்லை. தொலை பேசிச் சேவையைத் துவக்கத் தேவையான கட்டமைப்பு களுக்காகப் பயன்படுத்துவதற்காக அது புதிய நிறுவனங்களுக்கு சென்றது. அவர்கள் தங்கள் ஈக்குவிடி பங்குகளை விற்க வில்லை. நிறுவனத்தின் ஈக்குவிடி பங்குகளை அவர்கள் விரிவுபடுத்தி, புதிய பங்குதாரர்களை நிறுவனத்துக் குள் கொண்டு வந்துள்ள னர். இவை ஒரே விஷயம் அல்ல.

கரண் தாபர்: நல்லது. நிச்சயமாக இது பொருள் பொதிந்ததாக இருக் கிறது. இந்த நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறுவதற்குக் கொடுத்த விலையைப் போன்று மூன்று மடங்கு விலைக்குத் தங்கள் நிறுவனத்தின் பங்குகளின் ஒரு சிறு பகுதியை மட்டும் விற்றிருக்கிறார்கள். இந்த அளவுக்கு அவை லாபம் ஈட்டியுள்ளன; தொடக்க நிலையில் அரசு அதிக விலையை நிர்ணயித்திருந்தால், இந்த லாபம் அரசுக்குக் கிடைத்திருக்கலாம் அல்லவா? இதைத்தான் எதிர்க் கட்சிகளும், தலைமை தணிக்கை அலுவலரும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு என்று கூறுகின்றனர். அது ரூ.1.76 லட்சம் கோடியாகவும் இருக்கலாம்; ரூ.50,000 கோடியாகவும் இருக்கலாம். ஆனால் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மட்டும் மறுக்கவே முடியாது.

மாண்டேக்சிங் அலுவாலியா: ரூ.1.76 லட்சம் கோடியையோ அல்லது ரூ.50,000 கோடியையோ ஒரு முக்கிய மான விஷயத்தின் காரணமாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று நான் கூறுவேன். ஏலம் விடுவதற்கும், ஏலம் விடாததற்கும் இடைப்பட்டது அது. ஏலம் விட முடியும் என்றோ, அதிக விலை நிர்ணயிக்க முடியும் என்றோ நீங்கள் நம்பினால், தொலைத் தொடர்பு சேவை அளிக்கப் படுவதற்கான கட்டண விகிதத்தின் மீது அது எந்த வேறுபாட்டையும் ஏற்படுத் துவதில்லை. அப்போது இழப்பு ஏற்பட்டி ருக்கலாம். இந்த வாதத்தின் முழுமை யான மய்யக் கருத்து என்னவென்றால், அதிக அளவு நீங்கள் விலை நிர்ணயித் தால், அதே அளவுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சேவையை அளிக்கமாட்டா. ஒரு நிமிடம் பொறுங் கள். தொலைத் தொடர்புச் சேவை துவக்கப்படவில்லை என்பது, குறைந்த ஸ்பெக்ட்ரம் பயன்பாடு என்பதையும், குறைந்த அளவு வருவாய்ப் பங்கீடு என்பதையும் அது குறிக்கும்.

கரண் தாபர்: உங்கள் வாதத்தில் ஒரு தவறு இருக்கிறது. 2ஜி குறைந்த விலையில் கிடைத்ததுதான், தொலை தொடர்புச் சேவைகள் பரவலாக அளிக் கப்பட்டதற்கும், சேவைக் கட்டணம் குறைந்ததற்கும் காரணம் என்று நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள். தொலைத் தொடர்பு அடர்த்தி பெரும் அளவில் விரிவடைந்திருப்பதற்கும், சேவை குறைந்த கட்டணத்தில் கிடைத்திருப்ப தற்கும் காரணம் போட்டிதான்; தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், முன் னேற்றங்கள் மற்றும் நிறுவனங்களுக் கிடையே இருந்த போட்டி ஆகியவை தான் கட்டணங்கள் குறைவதை ஊக்கப் படுத்தின. அதை நீங்கள் கவனிக்கத் தவறி விட்டீர்கள்.

1990இல் கடைப்பிடிக்கப்பட்ட ஏலம் விடும் நடைமுறை 1999இல் கைவிடப்பட்டது ஏன்?

மாண்டேக்சிங் அலுவாலியா: இந்தக் கேள்விக்கு நான் பதில் அளிக்கிறேன். தொலைத் தொடர்புக் கொள்கை முதன் முதலாக அறிமுகப் படுத்தப்பட்ட போது, அப்போதிருந்த அரசு 1990-களில் உரிமங்களை பெரும் தொகைக்கு ஏலம் விட்டது. பல தயாரிப் பாளர்கள், சேவை அளிப்பவர் களிடையே போட்டி இருந்த போதிலும், ஏலம் எடுத்தவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதும், அவர்கள் செலுத்தியுள்ள பணத்தை அவர்களால் ஈட்ட முடியவில்லை என்பதும் ஒராண்டு காலத்திலேயே தெளிவாகத் தெரிந்து விட்டது. எனவே அவர்கள் திரும்ப வந்தனர். அப்போதிருந்த அரசு, தொலைத் தொடர்புக்கான அமைச்சர் குழு - ஜஸ்வந்த் சிங்கின் தலைமை யிலானது என்று நினைக்கிறேன் - உயர்ந்த அளவு வருவாயை ஈட்டும் அணுகுமுறை தவ றானது என்றும், ஏலத் தொகையைக் குறைக்க வேண்டும் என்றும், ஏலமுறை யிலிருந்து வருவாய் பங்கீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று முடிவு செய்து பரிந்துரைத்தது. தற்செயலாக இந்தக் கொள்கையை தலைமைக் கணக்கு அலுவலர் 2001 இல் கடுமையாக விமர்சித்தார். அந்தக் கணக்கு அலுவலரின் பரிந்துரைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டு பின்பற்றியி ருந்தால், நாட்டில் எந்த அளவுக்குத் தொலைத் தொடர்புசேவையும் விரி வடைந்திருக்கும் என்று நீங்கள் நினைக் கிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் கேட்கமாட்டீர்கள்.

கரண் தாபர்: எனக்குத் தெரிய வில்லை. அந்தக் கருத்தை மறுக்காமல் என்னால் கேள்வி கேட்க முடியும் என்பதைப் பாருங்கள். இந்தப் பிரச்சினை முழுவதும் ஓர் உண்மையின் மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. தொலைத் தொடர்பு அடர்த்தியை மேம் படுத்த எவ்வளவு விலை மதிப்பற்றதாக அதனை ஆக்கிவிட்டீர்கள்? வேறு சொற்களில் கூறுவதானால், அரசு கருவூலத்தால் எந்த அளவுக்கான தாக்குதலைத் தாங்க முடியும்? உங்கள் கருத்துப்படியே பார்த்தாலும், சேவையை அளிக்கவும், தொழில் வளர்ச்சிக்காக வும், குறைந்த விலை நிர்ணயிப்பது அவசியமானது என்றாலும், ராசா செய்த அளவுக்கு குறைந்த விலையை நிர் ணயம் செய்யத் தேவை இல்லை. கீழ்க் கண்ட வழியில் விளக்கு வதற்கு என்னை அனுமதிக்கவும். மொபைல் பேசிகளைப் பயன்படுத்துவோர் 2001 இல் 40 லட்சமாக இருந்தது, 2008 இல் 30 கோடிக்கு உயர்ந்துள்ளது. 2008 இல் பெரும் அளவு லாபங்களை ஈட்ட இயலும் நிலையைத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெற்றிருந்தன. ஆனால் 2001 இல் அவ்வாறு இருக்கவில்லை. அதனால் தொலைத் தொடர்பு அடர்த் தியை விரிவுபடுத்த குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டது என்ற வாதம் ஏற்கக் கூடியதல்ல.

தற்போதுள்ள ஒதுக்கீடு நடை முறையில் மாற்றம் தேவையில்லை என TRAI பரிந்துரைத்துள்ளது

மாண்டேக்சிங் அலுவாலியா: இக்கேள்விக்கு நான் நேரடியாக பதில் கூறுகிறேன். 2008 இல் இருந்த சூழ்நிலை 2001இல் இருந்ததில் இருந்து மாறுபட்டது என்று நீங்கள் கூறுவது மிகவும் சரியானதே. அகில இந்திய உரிமத்துக்கு சமமாக ஸ்பெக்ட்ரத்தை 1658-க்கு 2001 ஆம் ஆண்டு முதல் ஒதுக்கி வந்தனர். அரசுக்கு இந்த விஷயத்தில் ஆலோ சனை கூறும் தொழில் நுட்ப வல்லுநர் கள் யார்? டிராய் TRAI(தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை அதிகார அமைப்பு) அதன் தொடர்ந்த அறிக்கைகளை நீங்கள் படித்திருப்பீர் கள். 2007 ஆகஸ்டில் மாறு பட்ட நடைமுறை ஒன்று நமக்குத் தேவையா என்று TRAIபேசிக்கொண்டிருந்தது. ஆனால், இறுதியில் மாற்றம் தேவை யில்லை என்று அது கூறியுள்ளது.

கரண் தாபர்: 2007 ஆகஸ்ட் 28 அறிக்கையிலிருந்து நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன். உண்மை என்ன வென்றால் TRAI கூறியது இதுதான்: இன்றைய பரபரப்பான சூழலிலும், தொலைத் தொடர்புத் துறை பெற்றுள்ள முன் எப்போதும் இல்லாத அளவுக்கான வளர்ச்சியும் 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணம் ஓர் உரிமம் பெறுவதற் கான சரியான உண்மை விலை அல்ல. மாறுபட்ட ஆய்வு ஒன்றின் மூலம் அது மறுமதிப்பீடு செய்யப்படவேண்டும். அந்த மறு மதிப்பீடு செய்யப்படவே இல்லை.

மாண்டேக்சிங் அலுவாலியா: ஒரு முழு பகுதியின் அறிமுக சொற்றொடர் அது. அவர்கள் என்ன முடிவு செய்தார்கள்? அவர்கள் செய்த முடிவானது: முதலில் இத்துறைக்கு வந்தவர்களால் ஏதோ ஓர் அளவுக்கான வாடிக்கையாளர்களைப் பெற முடிந்தது. ஆனால், பின்னால் வந்தவர்களால் அந்த அளவுக்கு வாடிக்கையாளர்களைப் பெற முடிய வில்லை. அதனால், விலையை நீங்கள் உயர்த்தினால், அனுகூலமற்ற ஒரு நிலைக் குத் தள்ளி விடுகிறீர்கள். அதன் பின் ஒரு குறிப்பிட்ட முறையில் - ஏற்றத் தாழ்வு களை சரி செய்து கொள்ளும் வகையில் இறுதியாக செய்யப்பட்ட பரிந்துரை : 3 ஜியை ஏலம் விடுவது; 2 ஜியை இப்போது இருப்பது போலவே தொடர்ந்து ஒதுக்கீடு செய்வது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த அதே சொற்களை என்னால் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை.

கரண் தாபர்: இப்போதுள்ளபடியே தொடரலாம் என்று அவர்கள் கூறியது ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற விதிப்படி செயல்படலாம் என்பது. ஆனால் அதே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறவில்லை. இந்தக் கருத்தைத்தான் நான் கூற வருகிறேன். ஏலம்தான் விட வேண்டும் என்பதில்லை. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற விதியைக் கடைப் பிடியுங்கள். ஆனால் சற்று கூடுதலான விலையை நிர்ணயித்திருந்தால், அது மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ள தொழில் உங்களி டம் இருக்கிறது என்பதை எதிரொலித்திருக் கும். 2001 விலையிலேயே நின்றிருக்காமல், விலையை உயர்த்தி, முதலில் வருபவர் களுக்கு முன்னுரிமை என்ற அதே விதியில் நின்றிருக்கலாம்.

ஏழு ஆண்டு காலம் அதே 1658 விலைக்கு உரிமங்களை அளித்துள்ள நீங்கள் 2008-க்கு மட்டும் விலையை உயர்த்தியிருக்க வேண்டும் என்று ஏன் வாதாடுகிறீர்கள்?

மாண்டேக்சிங் அலுவாலியா: மாறு பட்ட இந்த 7 ஆண்டு காலத்தில் எல்லாம் அதே 1658 விலைக்கு உரிமங்களை அளித்துள்ள நீங்கள் 2008-க்கு மட்டும் இந்த வாதத்தை முன் வைக்கிறீர்கள் என்றால் இந்த வாதத்தைப் பற்றி எனக்கு எந்தப் பிரச்சினை யும் இல்லை.

கரண் தாபர்: செய்திருக்கக்கூடாதது அது.

மாண்டேக்சிங் அலுவாலியா: வேறு பட்ட அரசுகள் அதனைச் செய்தன. கொள் கைகள் எப்போதுமே மாறுபட்டவையாக இருக்க முடியும். இறுதியில் TRAI என்ன கூறியது என்பதை வைத்துப் பாருங்கள். என்னிடம் அதன் அறிக்கை இல்லை. ஆனால் TRAI அரசின் ஒரு தொழில்நுட்பக் கரமாக விளங்கவேண்டும் என்று எதிர் பார்க்கப் படுவது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். விலை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று இறுதியாக அவர்கள் விரும்பி இருந் தால், நடைமுறையை வைத்துக் கொள்ளுங் கள். ஆனால் விலையை உயர்த்துங்கள் என்று கூறியிருப்பார்கள். அவர்கள் அவ்வாறு கூறவில்லை.

கரண் தாபர்: விலையைப் பற்றிய தீவிரமான தயக்கங்களும், சந்தேகங் களும் TRAIக்கு மட்டும் இருக்க வில்லை. 2007 நவம்பர் 22 நாளிட்ட கடிதத்தில், தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்திற்கு நிதித்துறைச் செயலாளர் எழுதியிருந்த கடிதத்தில், ஸ்பெக்ட்ரம் விற்பனை பற்றி தீவிரமான ஆட்சேபணைகள் இருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அ) விலையை உயர்த்தவும் (ஆ) பழைய விலைக்கு விற்பதை நிறுத்தி வைக்கவும் அவர் விரும்பினார். அது செய்யப்படவில்லை.

நிதியமைச்சரும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சரும் தற்போதுள்ள நடைமுறையையே தொடர்வது என்று ஒப்புக் கொண்டுள்ளனர்

மாண்டேக்சிங் அலுவாலியா: நீங்கள் கூறுவது முற்றிலும் சரியானதே. எந்த ஒரு நிதி அமைச்சகமும் செய்வது போலவே, வருவாயை உச்ச அளவுக்கு உயர்த்துவதற் கான வழிகளை இந்திய நிதி அமைச்சகமும் தேடிக் கொண்டிருந்தது. அவர்கள் அவ்வாறு சொல்லி ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றாலும் இதுதான் உண்மை. ஸ்பெக்ட்ரத் துக்கு இன்னும் கூடுதலான விலையை நாம் பெற வேண்டும் என்று நிதி அமைச்சகம் கருதியது என்பது உண்மையே. ஆனால் இதற்கான நடைமுறை என்னவென்றால், பழைய விலைக்கே விற்கக்கூடாது என நிதி அமைச்சகம் உண்மையில் விரும்பியிருந்தால், இந்த விஷயத்தை அமைச்சரவைக்கு எடுத்துச் சென்றிருக்க வேண்டும். இப்போது உண்மை என்னவென்றால் நிதியமைச்சகத்துக்கு ஒரு குறிப்பிட்ட கருத்து இருந்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. வருவாய் பற்றி நிதித்துறைச் செயலாளராக நான் இருந்தாலும், மிகவும் கவலையும் அக்கறையும் கொண்டிருப்பேன். ஆனால் இறுதியில் 2008 ஜூலையில் இரண்டு அமைச் சர்களும் தங் களுக்குள் ஓர் ஒப்பந்தத்திற்கு வந்துவிட்டதாக பிரதம அமைச்சருக்கு அறிவித்துள்ளனர். முன்பு இருந்தது போலவே 3 ஜி உரிமங்கள் ஏலம் விடுவது என்பதுதான் இறுதி ஒப்பந்தம். அரசின் முடிவுகளில், தொடக்க நிலையில் மாறுபட்ட கண்ணோட் டங்கள் இருந்திருக் கலாம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கரண் தாபர்: 2001 விலைக்கு விற்கும் முடிவை ப.சிதம்பரம் உண்மையில் ஆதரித் தாரா என்பது எந்த அளவில் உண்மை யானது? நீங்கள் குறிப்பிடும் ஜூலை தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே, 2008 ஜனவரி 15 அன்று பிரதமருக்கு அவர் அனுப்பிய கூட்ட நடவடிக்கைகள் அல்லது அறிக்கையில் நான் பார்த்தது: ஸ்பெக்ட்ரம் ஓர் அரிய செல்வம். அரிதான அதன் மதிப்பு மற்றம் பயன்பாட்டுத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் விலை நிர்ணயிக்கப் படவேண்டும். ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்வதற்கான மிகுந்த வெளிப்படையான நடைமுறை ஏலம் விடுவதுதான்.

ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பை உச்ச அளவுக்கு உயர்த்தக் கூடாது என்ற கருத்து முற்றிலுமாக உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது

மாண்டேக்சிங் அலுவாலியா: நீங்கள் விற்கப் போகும் ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பை உச்ச அளவுக்கு உயர்த்த நீங்கள் முயல்கிறீர்கள் என்பது உண்மையானால் - அது முற்றிலும் உண்மையானதே - சிதம்பரம் பரித்துரைத்தது சரியானதே. சமகால பொருளாதாரத்தில் ஸ்பெக்ட்ரத்துக்காக நீங்கள் செய்ய வேண்டியது அது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஸ்பெக்ட்ரத்தை நீங்கள் விற்பது, எண்ணெய் யையோ, கோதுமையையோ விற்பதிலிருந்து வேறுபட்டது. இதனை விளக்கமாகக் கூறுவ தற்கு இந்த இரண்டு நிமிட பேட்டியில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வது பற்றி வழிகாட்டும் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பிரசுரங்கள் உலகெங்கும் அதிக அளவில் இருக்கின்றன. இதில் உச்சஅளவில் மதிப்பீட்டை உயர்த்தக் கூடாது என்ற கருத்து முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உங்கள் கொள்கை களைத் தாண்டி சுதந்திரமாக இருப்பதல்ல ஸ்பெக்ட்ரத்தின் விலை என்பதுதான் இதன் காரணம்.

கரண் தாபர்: முன்பு நான் எழுப்பிய கேள்விக்கே இது என்னை அழைத்துச் செல்கிறது. தொலைத் தொடர்புத் தொழிலுக் குப் பயன் கிடைக்கவும், தொலைத் தொடர்பு அடர்த்தி அதிகரிக்கவும் தேவைக்கு அதிக மான இழப்பை ஏற்றுக் கொண்டு, நீங்கள் செய்திருப்பது போல் மிகக் குறைந்த மதிப் பிலானதாக அதனை ஆக்கி இருக்க வேண் டுமா? தேவைக்கு அதிமாக இதனை செய்து விட்டீர்களா?

மாண்டேக்சிங் அலுவாலியா: 1.76 லட்சம் கோடி என்பது உண்மையல்லாத, மாயக் கணக்கு என்று நீங்கள் ஒதுக்கினால், 40,000 கோடியையும் அதுபோல் ஒதுக்கவே வேண்டும். 1658 என்ற எண்ணை உயர்த்தி இருந்தால் சரியாக இருந்திருக்காதா என்ற அளவில் நீங்கள் சுட்டிக் காட்டுவது உள்ளது. எந்த அளவு உயர்த்தப்பட்டிருக்கலாம் என்று நீங்கள் சொல்லாதவரை, இது பற்றி விவாதம் செய்வது என்பது முடியாது.

கரண் தாபர்: 40-45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்பதை ஒதுக்க வேண்டும், கைவிடவேண்டும் என்று நீங்கள் ஏன் விரும்பு கிறீர்கள்? சுவான், யுனிடெக் நிறுவனங்கள் ஈட்டிய லாபம் அந்தத் தொகைதானே?
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையில்தான் தவறு உள்ளது

மாண்டேக்சிங் அலுவாலியா: அது முற்றிலும் தவறான கருத்தாகும். சுவான், யுனிடெக் நிறுவனங்கள் புதிய ஈக்குவிடி பங்குகளை வெளியிட்டன. அந்தப் புதிய பங்குகள் இந்தப் பணத்தை நிறுவனத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன. நிறுவனத்தில் நிறுவனத்தைத் தொடங்கியவர்கள் வைத்திருந்த பங்குகள் இதன் விளைவாகக் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துவிட்டன. இந்தப் பணம் அவர்களுக்குக் கிடைத்த லாபம் அல்ல. மற்றொரு கருத்தைக் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன். இவர்கள் இந்த அளவுக்கு பணம் சம்பாதிக்க எவ்வாறு இயன்றது என்று கேட்க நீங்கள் முயலுகிறீர்கள் என்று நான் கருதுகிறேன். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையில்தான் தவறு இருக்கிறது என்று நான் கருதுகிறேன். இந்தக் கொள்கை கடந்த 10 ஆண்டு காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகும். அது இந்த அரசால் கண்டுபிடிக்கப் பட்டதல்ல. யார் முதலில் வந்தாலும் உரிமம் பெறுவதில் முன்னுரிமை பெறுவதற்கு அது வழி வகுக்கிறது. இந்த முதலில் வருபவர்க்கு முன்னுரிமை என்ற கொள்கையைப் பற்றி இந்தியத் தலைமை தணிக்கை அலுவலர் விமர்சித்திருப்பது சரியானது என்பதே எனது கருத்து. ஆனால் அதற்கு மேலும் நான் கூற விரும்புகிறேன். முதலில் வருபவர்க்கு முன்னுரிமை என்ற இந்தக் கொள்கை சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும், உரிமத்தின் மதிப்பை முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் இல்லாத பலம் குறைந்த நிறுவனங்கள் கொண்ட ஒரு சூழலை அது உருவாக்கும். அதன் மதிப்பை முழுவதுமான உண்மையில் பயன்படுத்த இயன்ற மற்றவர் களை இந்த நிறுவனங்கள் உள்ளே கொண்டு வரவே செய்யும்.

கரண் தாபர்: முதலில் வருபவர்க்கு முன்னுரிமை என்ற வழியில் சென்றால், சுவான் மற்றும் யுனிடெக் போன்ற பலமற்ற நிறுவனங் கள் வேறு யாரையாவது நிறுவனத்துக்குள் கொண்டு வர நேர்வது தவிர்க்க இயலாதது என்று கருதுகிறீர்களா?

மாண்டேக்சிங் அலுவாலியா: அது தவிர்க்க முடியாதது அல்ல.

கரண் தாபர்: ஆனால், அவ்வாறு நேரக்கூடும் அல்லவா?

மாண்டேக்சிங் அலுவாலியா: தகுதிக்கான கடுமையான கட்டுப்பாடுகள், விதிகளுடன் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை எப்போதும் கடைப்பிடிக்க உங்களால் முடியும். பிரச் சினைகளில் ஒன்றாக வெளிவந்திருப்பதும், தலைமைத் தணிக்கை அலுவலர் குறிப் பிட்டுள்ள முக்கியமான குறிப்பும், தகுதி அற்ற நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள் ளன என்பதுதான். இப்போது அத்தகைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரி மங்கள் சட்ட நடவடிக்கைகள் மூலம் ரத்து செய்யப்படும் என்று கபில் தெரிவித்துள்ளார். அதனால் நாம் தெளிவாக இருப்போம். இதில் பிரச்சினையே ஏதுமில்லை என்று நான் கூறவில்லை;. அவ்வாறு கூற எனக்கு உரிமை இல்லை. இந்த விஷயங்கள் அனைத்தும் நீதி மன்றத்தில் உள்ளதால், நீதிமன்ற அவமதிப் புக்கு உட்பட்டவையாகும்.

கரண் தாபர்: ஆனால், தலைமை தணிக்கை அதிகாரி அடையாளம் கண்டிருப்ப திலிருந்து மாறுபட்டதாக இந்தப் பிரச்சினை உள்ளது அல்லவா?

லைவரிசை உரிமங்களை ஏலம் விட்ட அய்ரோப்பிய நாடுகள் அவ்வாறு செய்தது சரியான வழியல்ல என்பதை உணர்ந்து வருந்துகின்றன

மாண்டேக்சிங் அலுவாலியா: வருவாய் இழப்பு என்பதின் மீது கவனத்தைக் குவிப்பது - உண்மையில் பகுத்தாய்ந்து மூலத்தைக் காண்பது என்பது ஓர் ஆபத்தான போக்காகும். தொலைத் தொடர்பு நடை முறையை எவ்வாறு நடத்தவேண்டும் என்று இது வரை நாம் பெற்றுள்ள அனைத்துத் தொகுப்பு அறிவினையும் தவறச் செய்து விடுகிறது. கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய அரசு கடைப்பிடித்து வந்த கொள் கையை அது மறுக்கிறது. மேலும் TRAI பரிந்துரைத்ததற்கு எதிரானது அது. என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது என்னவென் றால், தலைமைத் தணிக்கை அலுவலர் தனது அறிக்கையில் இதனை எல்லாம் கூறியிருக்க வேண்டும் என்பதுதான். அய்ரோப்பாவில் அலைவரிசை உரிமங்களை ஏலம் விட்ட நாடுகள், அவ்வாறு செய்தது சரியான வழியல்ல என்று உணர்ந்ததால், பரவலாக அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக் கின்றன என்பதை அறிக்கை சொல்லியிருக்க வேண்டும். எந்த ஒரு பொது விவாதத்திலும், ஊழலைப் பற்றிப் பேசுவது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருப்பதால், இந்தப் பிரச்சினை களை எழுப்ப யாருமே விரும்பமாட்டார்கள்.

கரண் தாபர்: ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை நான் முடிக்கும் முன் கூற விரும்பு கிறேன். முதலில் வருபவர்க்கு முன்னுரிமை என்பது தவறான வழி என்று நீங்கள் நம்புகிறீர்களா?

மாண்டேக்சிங் அலுவாலியா: ஏலம் விடாத வேறொரு நடைமுறையை நாம் பின்பற்றியிருந்தால், முதலில் வருபவர்க்கு முன்னுரிமை என்பதன் அடிப்படையில் நான் அதனைச் செய்திருக்க மாட்டேன். அதிக தொழில்நுட்பத் திறன் படைத்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்பதன் அடிப்படை யில் நான் செயல்பட்டிருப்பேன். அவ்வாறு செய்வதுதான் புத்திசாலித்தனமான வழி.

கரண் தாபர்: மாண்டேக சிங் அலுவா லியா, உங்களுடன் பேசுவதே மிகுந்த மகிழ்ச் சியாக இருந்தது.

மாண்டேக்சிங் அலுவாலியா: உங்க ளுடன் பேசுவதும் மகிழ்ச்சியாகவே இருந்தது கரண்.


No comments:

Post a Comment