கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, January 15, 2011

பெரியார் இயக்கத்திற்கு இணை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை - தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன் வாழ்த்து


க. அன்பழகன் தலைமைச் செயலகம்

நிதி அமைச்சர் சென்னை - 600 009
நாள்: 27-12-2011


எனது அருமை நண்பர் திரு. வீரமணி அவர்களுக்கு,


திராவிடர் கழகம், விஜயவாடா நாத்திக மய்யம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து, ஜனவரி 7ஆம் நாள் முதல் 9ஆம் நாள்வரை திருச்சிராப்பள்ளியில் நடத்த ஏற்பாடு செய்துள்ள உலக நாத்திகர் மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு அனுப்பி யமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


நமது தலைவரும், சுயமரியாதை இயக்கத்தைக் கண்டவரு மான தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஒரு மாபெரும் சுயசிந்தனையாளர் ஆவார். மதத்தின் பெயரால் உருவாக்கப் பட்ட மூட நம்பிக்கைகள் என்ற பெருந்தூக்கத்தில் காலம் காலமாக ஆழ்ந்திருந்த, தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் வாழ்ந்த படிப்பறிவற்ற பாமர மக்கள், ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களிடையே பகுத்தறிவுச் சிந்தனைகளை, கருத்துகளைப் பரப்புரை செய்யும் துணிவையும், உறுதியையும் அவர் பெற்றிருந்தார்.


பழைமையில் ஊறிய சனாதன இந்துக்களின் கடுமையான எதிர்ப்புக்கிடையே, பிரம்மாவால் உருவாக்கப்பட்ட வருணாசிரம தர்மம் என்னும் ஜாதி அமைப்பின் போலித்தன்மையை, சீர்கேட்டை வெளிப்படுத்தவேண்டியவராக அவர் விளங்கினார். இதன் காரணமாகவே கடவுள், மதம், ஆன்மிகம் என்பவை களின் போலித் தன்மையையும் அவர் வெளிப்படுத்தினார். இவை அனைத்தும் மக்களின் உரிமைகள் மற்றும் நலனுக்கும், மனிதகுல முன்னேற்றத்திற்கும் எதிரானவை என்று அவர் பிரச்சாரம் செய்தார்.


இவ்வாறு, பகுத்தறிவின் இலக்கான நாத்திகம் முக்கியத் துவம் பெறுகிறது என்று அவர் நம்பினார். ஒட்டு மொத்தமாக கடவுளை மற; கடவுள் மீது கொண்ட நம்பிக்கையைத் துற; மனிதனைப் பற்றியும், மனிதகுல நலனைப் பற்றியும் நினை என்பதே பகுத்தறிவு இயக்கத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் எழுப்பிய பெரு முழக்கம். தமிழ்நாட்டின் இந்த இயக்கத்திற்கு இணையான இயக்கம் உலகத்தில் வேறு எந்த நாட்டிலுமே இல்லை. இந்த மாநாடு பெருவெற்றி பெறவும், மாநாட்டின் நிகழ்ச்சிகளும், விவாதங்களும் பயன் நிறைந்த செய்தியைப் பரப்பவும் நான் வாழ்த்துகிறேன்.


நன்றி.


தங்கள் அன்புள்ள,
க. அன்பழகன்


No comments:

Post a Comment