கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்டப்படும் - முதல்வர் கருணாநிதி


ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பீட்டர் அல்போன்ஸ்(காங்கிரஸ்) பேசியதாவது:
இந்தியாவில் தமிழகத்தில்தான் நவோதயா பள்ளிகள் இல்லை. இங்கு அந்த பள்ளிகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. 31 பள்ளிகள் இங்கு தொடங்கப்பட வேண்டும். ஒரு பள்ளிக்கு ரூ.20 கோடி மத்திய அரசு தருகிறது. நவோதயா பள்ளிகளை தொடங்கி மத்திய அரசிடமிருந்து ரூ.1000 கோடி பெற வழி வகை செய்ய வேண்டும். புதுவையில் அந்த பள்ளிகள் எப்படி செயல்படுகின்றன என்பதை குழு மூலம் முதல்வர் அறிந்து நவோதயா பள்ளிகளை எப்படி தொடங்குவது என்று பார்க்க வேண்டும்.
தேவேந்திரகுல வேளாளர்கள் தங்களை ஆதிதிராவிடர் என அழைக்கக் கூடாது, பட்டியலினத்தவர் என அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனவே பட்டியல் இனத்தில் உள்ள 76 பிரிவினரை பட்டியலினத்தவர் என்று அழைக்க அரசு உத்தரவிட வேண்டும். தமிழக மண்ணில் தன் உயிரை தியாகம் செய்த ராஜிவ் காந்தி உடல் சென்னை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டது. எனவே, அந்த மருத்துவமனைக்கு ராஜீவ்காந்தி பெயர் வைக்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதி:
பீட்டர் இங்கே இரண்டு கோரிக்கை வைத்தார். ஆதிதிராவிடர்களை அதே பெயரில் அழைப்பதா, வேறு பெயரில் அழைப்பதா என பிரச்னை வந்தபோது அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. பட்டியலினத்து மக்கள் என்று அழைத்துவிட்டு அவர்கள் சார்ந்த பிரிவை அடைப்புக்குறிக்குள் போடலாம் என்ற கருத்தை சொல்லியிருக்கிறோம். குழுவின் அறிக்கை விரைவில் வரும். அனைத்து மக்கள் மனம் மகிழும் வகையில் அந்த முடிவு இருக்கும்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் ராஜீவ்காந்தி உடல் வைக்கப்பட்டிருந்ததால் அவர் பெயர் வைக்க வேண்டும் என கேட்டார். நிச்சயம் அந்த பெயர் வைக்கப்படும்.
பீட்டர் அல்போன்ஸ்:
ராஜீவ் காந்தி பெயரை வைத்ததற்காக காங்கிரஸ் தொண்டர்கள் சார்பில், சோனியா காந்தி சார்பி

ல் நன்றி தெரிவிக்கிறேன்.


அரசு மருத்துவமனைக்கு ராஜீவ்காந்தி பெயர்: தங்கபாலு நன்றி


அரசு மருத்துவமனைக்கு ராஜீவ்காந்தி பெயரை வைக்க ஒப்புக்கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு, தங்கபாலு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா பீட்டர் அல்போன்ஸ், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ்காந்தி பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு முதல்வர் கருணாநிதி, ராஜீவ்காந்தி பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார். இதற்காக முதல்வர் கருணாநிதிக்கு காங்கிரஸ் சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment