கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாள் கொண்டாடுவீர்! - தமிழக மக்களுக்கு முதலமைச்சர் கலைஞர் வேண்டுகோள்!


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -எனும் அரிய தமிழ்ப் பண்பாடு போற்றி அறுவடைத் திருநாளாகத் தைத்திங்கள் முதல் நாளன்று பொங் கல் திருநாள் தமிழகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்ச் சான்றோரின் முடிவு தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார் தலைமையில் 1921ஆம் ஆண்டில் சென்னை பச்சை யப்பன் கல்லூரியில் 500-க்கு மேற்பட்ட தமிழ்ச் சான் றோர் கூடி மேற் கொண்ட முடிவினை ஏற்று, தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என 2008ஆம் ஆண் டில் இந்த அரசு சட்டம் இயற்றியது. அதனைத் தொடர்ந்து, தமிழ்ப் புத் தாண்டு -பொங்கல் திரு நாள் எழுச்சியோடும், ஏற்றத் தோடும் கொண் டாடப்படுகிறது. இந்த ஆண்டில் வரும் 15.1.2011 அன்றும், தமிழ்ப் புத் தாண்டு பொங்கல் திருநாளை, முந்தைய ஆண்டுகளைவிட மேலும் சிறப்பாகக் கொண்டாடிட வேண்டு மென எனது அருமைத் தமிழக மக்களை அன்புடன் கேட்டுக் கொள் கிறேன். தமிழ்ப் புத்தாண்டு நாளாகிய பொங்கல் திருநாளில் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும், வாயில்கள் தோறும் வண்ணக் கோலங்களிடுவீர்! வீடுகளிலும், வீதிகளிலும் மாவிலைத் தோரணங்கள் கட்டிடுவீர்! பொது இடங்களில் வண்ணத் தோரணங்கள் மின்னட்டும்! தென்னை, வாழை, கமுகு, ஈச்ச மரங்களின் குலைகள் குலுங்கட்டும்! தோகை விரிந்த கரும் புகள், இஞ்சி, மஞ்சள் கொத்துக்கள் இன்னபிற எல்லாம் சேர்ந்து எழில் கூட்டட்டும்! அரசு வழங்கிய பச்சரிசி, வெல்லம், பாசிப் பருப்பு, முந்திரி, ஏலம், திராட்சை சேர்த்து ஆடவர், மகளிர், அருமைச் சிறார், குடும்பத்தார் நண் பர்கள் கூடிப் பொங்கலிட்டுக் கொண்டாடிக் களித்திடுவீர்! ஒளிக்கதிர் பாய்ச்சிடுவீர்! குடியிருப்புகள்தோறும் கோலப் போட்டிகள், வீரவிளையாட்டுகள், கிராமப்புற நடனங்கள், கும்மி கோலாட் டங்கள் இதர கலைநிகழ்ச்சிகள் எல்லாம் ஏற்பாடு செய்திடுவீர்! விருதுகளும் பரிசுகளும் வழங்கி ஊக்கமளித்து மகிழ்ந்திடு வீர்! வீடுகளின் முகப்பு களில் மாலையில் வரிசை வரிசையாய் விளக்குகள் ஏற்றி, வீதியெங்கும் ஒளிக் கதிர் பாய்ச்சிடுவீர்! அதுமட்டு மல்லாமல், அரசுக் கட்ட டங்கள், பூங்காக்கள், பாலங்கள் போன்ற பொது விடங்கள் அனைத்தும் பொலிவு பெற வண்ண வண்ணமாய்ச் சரவிளக் குகள் அமைத்து அணி செய் திடுவீர்! உறவினர் கள், நண்பர்கள் அனை வருடனும் வாழ்த் துகள் பரிமாறி தமிழ்ப் புத் தாண்டு - பொங்கல் திரு நாளைத் தமிழகமெங்கும் மட்டிலா மகிழ்ச்சியோடும் மனம் பொங்கும் எழுச்சியோடும் கொண் டாடுவீர்! அரசியல், ஜாதி, மத, இன வேறு பாடுகளின்றி உழைப்பைப் போற்றி எல்லோரும் இணைந்து கொண் டாடும் இந்த இனிய தமிழ்ப் புத் தாண்டு பொங்கல் திருநாளை ஆங்காங்கேயுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப் பினர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரி யப் பெருமக்கள், அரசுசார் நிறுவனங் களின் அலுவலர்கள், நல்லுள்ளம் கொண்ட சான்றோர்கள், தமிழ் நெஞ் சங்கள், பொதுமக்கள் என யாவரும் ஒருங்கிணைந்து இந்த எனது வேண்டு கோளை நிறைவேற்றித் தந்திடுவீர்! என்று முதல் அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment