தமிழக முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, கேரளாவில் திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
கேரளாவில் கடந்த ஆண்டு வரை பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை கிடையாது. திருவனந்தபுரம், பாலக்காடு, பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் கேரள அரசு அலுவலங்களில் பணிபுரியும் தமிழர்களுக்கு மட்டும் பொங்கல் பண்டிகைக்கு விடுப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார். இதை கேரள அரசு ஏற்றுள்ளது. இது பற்றி, கேரளா முதல்வர் அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று பொங்கல் தினமான வருகிற 15ம் தேதி திருவனந்தபுரம், பாலக்காடு, பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மாநில அரசு ஊழியர்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
No comments:
Post a Comment