
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் சேகர்பாபு. இவர், வட சென்னை மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.
கடந்த மாதம், திடீரென்று அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஜெயலலிதா, சேகர்பாபு குறித்து கோபமாக பேசினார். இந்த தகவல் வெளியானதும் வட சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சில நாட்களிலேயே சேகர்பாபுவிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதோடு, அவரது ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து சேகர்பாபு புறக்கணிக்கப்பட்டு வந்தார். இதைக் கண்டித்து வட சென்னை நிர்வாகிகள் ஜெயலலிதா வீட்டை முற்றுகையிட்டனர். சில நாட்களுக்கு முன் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டத்தில் சேகர்பாபு கலந்து கொண்டார்.
அவரை அழைத்ததற்காக கட்சியின் முன்னணி நிர்வாகிகளை ஜெயலலிதா கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று (27.01.2011) இரவு 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலினின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு சால்வை அணிவித்து 30 நிமிடங்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். விரைவில் திமுகவில் அவர் முறைப்படி இணைகிறார்.
No comments:
Post a Comment