கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

1 லட்சத்து 76 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கப்பட்டுள்ளது - முதல்வர் கருணாநிதி


தி.மு.க. ஆட்சியில் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரத்து 798 விவசாயிகளுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்து 747 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 11.01.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
இரண்டு மூன்று நாட்களாக வருகின்ற செய்திகளில் ஒன்றுதான் இரண்டு ஏக்கர் வரை இலவசமாக ஏழைகளுக்கு நிலம் வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தைப் பற்றி ஒரு இதழில் வந்துள்ள கட்டுரையை எடுத்து வைத்துக் கொண்டுதான் சில எதிர்க்கட்சிகள் நிலம் வழங்கும் திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாகச் சொல்லி வருகிறார்கள்.
இந்தப் புகார்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களும் நேரடியாக விசாரணை செய்து, அறிக்கைகளை அனுப்பியுள்ளனர்.
பவானி வட்டம், அந்தி யூர் ஏ கிராமப் பகுதியில் நிலமில்லாத ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் இப்பகுதியின் அமைச்சரான வெள்ளக்கோவில் சாமிநாதனின் உறவினர்கள், நெருக்கமானவர்கள் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ ஆய்வாளர் கண்ணன் என்பவருக்கு நிலம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர் அமைச்சர் சாமிநாதனுக்கு வேண்டியவர் என்று அந்த இதழில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலரின் விளக்கம்: குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண்களில் மொத்தம் 2.94.5 எக்டேர் நிலம் 8 பேருக்கு ஒப்படை செய்யப்பட்டு, அனைத்தும் பயனாளிகளின் அனுபவத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவ ஆய்வாளர் கண்ணன் என்பவருக்கு இந்த கிராமத்தில் நிலம் ஏதுமில்லை. உண்மைநிலை இப்படியிருக்க, அமைச்சர் வெள்ளக்கோவில் சாமி நாதனை தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட செய்தி முற்றிலும் தவறானது.
இது போல, சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா வில் தேவண்ணக் கவுண்டனூரில் மலைப் பகுதியில் ஒதுக்கப்பட்ட இலவச நிலம் உள்ளூர் அரசியல்வாதிகள் கையில் சிக்கியிருக்கிறது என்று வெளியிடப்பட்டுள்ளது.
தேவண்ணக்கவுண்டனூர் சர்வே எண். 489ன் மொத்த பரப்பளவு 4.30.0 எக்டேர் பாறை என கிராமக் கணக்குகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சர்வே எண், 489/1 என உட்பிரிவு செய்யப்பட்டு, 0.22.5 எக்டேர் நிலம் பெந்தகோஸ் சபை கிறித்துவ மயானம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் சர்வே எண். 489/5 முதல் 489/21 வரை உள்ள பாறை புறம்போக்கில் 3.64.5 எக்டேர் நிலம் 15 பேருக்கு ஒப்படை செய்யப்பட்டு இந்த நிலங்கள் அனைத்தும் ஒப்படை பெற்றவர்களின் அனுபவத்தில் இருந்து வருகின்றன. இவர்களில் நிலத்தை தனியார் யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்பது சேலம் மாவட்ட ஆட்சியரின் விளக்கம்.
செய்தி திருச்சி மாவட் டம், சூரியூர் கிராமத்தில் ஒதுக்கப்பட்ட இலவச நிலங் களை அப்பகுதி தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் நவல்பட்டு விஜி தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.
சூரியூர் கிராமத்தில் மொத்தம் 4.58.5 எக்டேர் நிலம் 12 பேருக்கு ஒப்படை வழங்கப்பட்டு அனைத்தும் பயனாளிகளின் அனுபவத்தில் உள்ளன. நவல்பட்டு விஜி என்பவர் சூரியூரில் மீனா என்ஜினியரிங் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத் தை, நில உச்சவரம்பின்கீழ் வரும் தரிசு நிலங்களில் அமைத்துள்ளார்.
சூரியூரில் இந்த நிலங்களுக்கும், 12 பேருக்கு ஒப்படை செய்யப்பட்ட நிலங் களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்.
வருவாய்த் துறை அமைச்சரும் திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான ஐ.பெரியசாமியின் சகோதரர் அன்பு, நிலக் கோட்டை தாலுகா பகுதியில் அறிவிக்கப்பட்ட இலவச நிலங்களை ஆக்கிரமித்திருப்பதாக இன்னொரு புகார்.
திண்டுக்கல் மாவட்டம், சந்தையூர் கிராமத்தில் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் ஒப்படை வழங்கப்பட்ட நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை.
திண்டுக்கல்&மதுரை நெடுஞ்சாலையில் ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனம் எதுவும் இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், வடசித்தூர் கிராமத்தில் ஜகோபி என்ற கார்பன் தயாரிக்கும் நிறுவனத்தின் கட்டிடம் அமைந்திருக்கிறது. இது அரசு ஏழைகளுக்கு ஒதுக்கிய நிலத்தில் அமைந்திருப்பதாக அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள் என்பது இன்னொரு புகார் இந்த இதழில் கூறப்பட்டுள்ளது.
இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் பொள்ளாச்சி வட்டம், மெட்டுவாவி கிராமத்தில் நிலம் ஏதும் யாருக்கும் வழங்கப்படவில்லை கம்பெனி வளாகத்தில் அரசு புறம்போக்கு நிலம் எதுவும் இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம் தந்துள்ளார்.
கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி கிராமத்தில் இருக்கும் நிலம் வேலி அமைக்கப்பட்டு தற்போது கல்லூரி கட்டப்பட்டு வருகிறது என்று இதழில் வெளியிடப்பட்டுள்ள படம் ஒத்தக்கால் மண்டபம் கிராமத்தில் அமைந்துள்ள தனி யார் பொறியியல் கல்லூரிக் (இந்துஸ்தான் என்ஜினியரிங் கல்லூரி) கட்டிட வளாகத்தில் அமைந்துள்ளதாகும். இந்தக் கல்லூரி தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டு, இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதான் உண்மை விவரம். நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு உதவிட வேண்டுமென்ற குறிக்கோளோடு தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பையேற்றதும் இந்தத் திட்டத்தைத் தொடங்கி இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 747 ஏக்கர் நிலத்தினை 1 லட்சத்து 75 ஆயிரத்து 798 விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.
ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்கின்ற இந்தத் திட்டத்தைப் பாராட்டா விட்டாலும் கூட பரவாயில்லை.
நஞ்சைக் கக்கிடுவோர் நெஞ்சைத் தொட்டுச் சொல்வாரா? ஆனால் ஒரு குடிநீர் குளத்திலே விஷத்தைக் கலப்பதைப் போன்ற காரியத்தில் ஒருசில பத்திரிகையாளர்கள் ஈடுபடு வது எந்த நோக்கத்தோடு என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு அப்படிப்பட்ட தீய நோக்கம் கொண்டவர்களுக்கும், அதைப் பெரிதுபடுத்தி பேசுகின்ற ஒரு சில அரசியல் கட்சியினருக்கும் தக்கபாடம் புகட்ட ஆவன செய்திடுவதே இதற்கெல்லாம் நல்ல தீர்வு காண்பதற்கான வழியாகும்
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment