மதுரை செல்லூரில் ரூ.29 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சாலை மேம்பாலத்தினை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி இன்று (22.01.2011) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், கவுஸ்பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.
கேள்வி: அதிமுக வெற்றி பெற்று அடுத்து ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளாரே?
பதில்: ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி: திமுக அரசு மக்கள் நலத் திட்டங்களை எந்த அளவுக்கு செய்துள்ளது?
பதில்: கலைஞர் ஆட்சியில் சொன்னதையும் செய்துள்ளோம். சொல்லாததையும் நிறைவேற்றுவோம்.
கேள்வி: மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக ஆக்கப்படுமா?
பதில்: நேற்று கூட மத்திய அமைச்சர் வயலார் ரவியிடம் பேசினேன். மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்கோ வசதி அளிக்கப்படாமல் இருந்ததையும் அவருடன் பேசினேன். விரைவில் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
பதில்: முதல்வரின் தேதி கிடைக்கவில்லை. தேதி கிடைத்தவுடன் விரைவில் திறப்பு விழா நடைபெறும்.
கேள்வி: மதுரையில் 10 வருடமாக கட்டி முடிக்கப்படாமல் இருந்த பாலம் தற்போது முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது பற்றி?
பதில்: இந்த பாலம் விரைவாக கட்டி முடிக்க ஆணையிட்டேன். பாலம் தற்போது திறக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
No comments:
Post a Comment