மாநில அரசுகளிடம் ஆலோசனை செய்யாமல், பொது நுழைவுத் தேர்வு குறித்து முன்மொழிவு எடுக்கப்படாது என்று கபில் சிபல் உறுதியளித்துள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேல்படிப்புகளில் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு அறிமுகம் தொடர்பாக, தாங்கள் அனுப்பிய கடிதத்தை ஜனவரி 3ம் தேதி பெற்றுக்கொண்டேன். மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறையின் கட்டுப்பாட்டில்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தங்களின் கடிதத்தை மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம் வழங்கியுள்ளேன். பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மாநில அரசுகளிடம் ஆலோசனை செய்யாமலும், மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமலும் எந்த முன்மொழிவும் எடுக்கப்படாது என்று நான் உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment