கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 23, 2011

2ஜி அலைக்கற்றைப் பிரச்சினை: மத்திய அமைச்சர் கபில்சிபல் விளக்கம்


2ஜி அலைக்கற்றைப் பிரச்சினை: பொய்ச் செய்திகளுக்கு மறுப்புக் கூற வேண்டிய அவசியம் எனக்குண்டு மத்திய அமைச்சர் கபில்சிபல் விளக்கம்

புதுடில்லி, ஜன.22- உச்சநீதிமன்றம் கண்ட னம் தெரிவித்ததைத் தொடர்ந்து, எந்த அமைப் பையும் அவமதிக்க வில்லை; தவறான செய் திகளுக்கும் பதில் கூற வேண்டிய கடமை எனக் குண்டு என்று மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் விளக்கம் அளித் துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்ட தாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப் பட்டு இருந்தது. இது பற்றி கருத்துத் தெரி வித்த மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச் சர் கபில்சிபல், மத்திய கணக்கு தணிக்கை அதி காரியின் அறிக்கை முற் றிலும் தவறானது என் றும், எந்தவித அடிப் படை ஆதாரமும் இல் லாதது என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் தொடர் பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்த போது, கபில்சிபல் இவ்வாறு கூறி யதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித் தனர். இதற்கிடையே, கபில் சிபலின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சில மத்திய அமைச்சர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இது தொடர்பாக, ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு வின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி நாடா ளுமன்ற சபாநாயகர் மீரா குமாருக்கு எழுதி யுள்ள கடிதத்தில், மத்திய கணக்கு தணிக்கை அதி காரியின் அறிக்கை குறித்து மத்திய அமைச் சர்கள் கருத்து தெரிவிப் பதை தடுக்குமாறு கூறி இருக்கிறார்.

இதுகுறித்து விளக் கம் அளித்து அமைச்சர் கபில்சிபல் கூறியதாவது:-


மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை குறித்து யாரும் விமர்சிக்கக் கூடாது என்று உச்சநீதி மன்றம் கூறி இருப்பதை வரவேற் கிறேன். தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஏற் கெனவே உச்சநீதிமன்றம் இந்த கருத்தை தெரி வித்து இருந்தது.

எந்த விசாரணை அமைப்பையும், நான் அவமதிக்கவில்லை. அத்துடன் நடந்து வரும் எந்த விசாரணையிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறுக்கிட முயற்சிக்க வில்லை. என்றாலும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு தொடர் பாக, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை சுட்டிக் காட்டி பரப்பப்பட்டு வரும் பொய்யான தகவல் களுக்கு அரசாங்கத்தின் சார்பில் பதில் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மத்திய அமைச் சர் என்ற முறையில் மட் டும் அல்லாமல், இந்நாட் டின் குடிமகன் என்ற வகையில் எனது பொறுப் புகளையும், கடமை களையும் நான் முழுமை யாக அறிந்து இருக் கிறேன்.

இவ்வாறு கபில் சிபல் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment