
சபரிமலைக்குச்சென்று திரும்பிய பக்தர்கள் விபத்தில் பலியான சம்ப வத்துக்கு முதல் அமைச் சர் கலைஞர் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது: சபரிமலைக்குச் சென்று திரும்பிக் கொண் டிருந்த பக்தர்கள், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் புல்லு மலை என்ற இடத்தில் வனப்பகுதியில் திடீரென ஜீப் ஒன்று கூட்டத் துக்குள் பாய்ந்ததால் ஏற்பட்ட நெரிசலில் பலர் மரணம் அடைந் துள்ளனர். மரணம் அடைந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர் களும் உள்ளனர் என்று முதல் நிலைத் தகவல் மூலம் தெரிகிறது. மரணம் அடைந்த வர்களின் குடும்பங் களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித் துக் கொண்டுள்ள முதலமைச்சர் கலைஞர், அந்தக் குடும்பங்கள் ஒவ் வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் காயம் அடைந் தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் மருத்துவச் செல வுக்கு வழங்கப்படும் என் றும் அறிவித்து உள்ளார். தேவையான மருத் துவ உதவிகளையும், ஆம்புலன்ஸ் வாகனங் களையும் விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பிட ஏற்பாடு செய்யும்படி தேனி மாவட்ட ஆட்சி யருக்கும் முதல் அமைச் சர் கலைஞர் உத்தர விட்டுள்ளார். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment