கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 9, 2011

ஸி1000 முதல் 3000 வரை அரசு ஊழியருக்கு பொங்கல் போனஸ்


தமிழக அரசு 03.01.2011 அன்று வெளியிட் டுள்ள அறிக்கை:

2009&2010ம் ஆண்டிற்கு ‘சி’ மற்றும் ‘டி’ குரூப் ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக ஸி3000 உச்சவரம்பிற்கு உட்பட்டு போனஸ் வழங்கவும், ‘ஏ’ மற்றும் ‘பி’ குரூப் ஊழியர்கள் அனைவருக்கும் ஸி1000 சிறப்பு போனஸ் வழங்கவும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஸி500 பொங்கல் பரிசு வழங்கவும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் கிராம அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கும் பொங்கல் பரிசாக ஸி500 இந்த ஆண்டு முதல் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த சில்லரை செலவினத்தின் கீழ், மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த பணியாளர்கள், தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வந்த சத்துணவு திட்ட பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் உள்ள பஞ்சாயத்து உதவியாளர்கள், மக்கள் நல பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியம் ஸி1000 வழங்கப்படும்.
உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்திய பணி விதிமுறைகளின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். இதனால் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ஸி277 கோடி செலவாகும்.

No comments:

Post a Comment